குளிர்காலம் தொடங்கியாச்சு. அதிலும் இந்தாண்டு செல்லவே வேண்டாம் வழக்கத்திற்கு மாறாக அதீத பெய்துள்ளதால் குளிரும் மக்களை வாட்டி வதைக்கும் என்கின்றனர் ஆய்வாளர்கள். வழக்கமாக வடமாநிலங்களில் தான் டிசம்பர் முதல் ஜனவரி வரை குளிர் மக்களை பாடாய் படுத்தும். ஆனால் தமிழகத்தில் ஊட்டி, கொடைக்கானல் போன்று யிலும் குளிர் அதிகமாக இருக்கும் என்றும், தமிழகம் முழுவதும் இதே நிலைத் தான் என ஏற்கனவே எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எனவே மற்ற பகுதிகளைப் போன்று குளிர்காலத்திற்கு ஏற்றவாறு கதகதப்பான ஆடைகளை நிச்சயம் நாம் அணிய நேரிடும்.. ஆனால் ஸ்வெட்டர்கள் அணிந்தாலே வயதான தோற்றத்துடனும், வித்தியாசமாகவும் தெரியும் என்பதால் இதை பல இளைஞர்கள் தவிர்க்கக்கூடும். இதுபோன்றவர்களுக்காகவே பல ஸ்டைலிஷ் ஆடைகள் உள்ளது. எனவே இந்நேரத்தில் குளிர்காலத்தில் உடலை கதகதப்பாக மற்றும் பனிமூட்டத்திலிருந்து பாதுகாக்க உதவும் வார்ட்டராப் என்ன? என்பது குறித்து இங்கே நாமும் அறிந்துக் கொள்வோம்.
ஃபர் காலர் கொண்ட சூயிட் ராப் ஜாக்கெட் (Suede Wrap Jacket with Fur Collar) : இன்றைக்கு உள்ள நவநாகரீக ஆடைகளுக்கு மிகவும் சூட் ஆகக்கூடிய குளிர்கால ஆடை என்றால் இது தான். மெல்லிய தோல் ஜாக்கெட்டுகளுடன் குளிர்காலத்தை உடலை கதகதப்பாக்குகிறது. ஸ்கட், ஜீன்ஸ் போன்ற எந்த ஸ்டைலிஷ்ஷான ஆடைகள் அணிந்திருந்தாலும் இதை நீங்கள் அணியலாம். குளிர்காலத்தில் ஸ்டைலாகவும் நீங்கள் வலம் வரலாம்.
லெதர் பேக் இன்-ஸ்டைல் (Leather Back In-Style) : குளிர்காலத்திற்கு ஏற்றவாறு தோல் ஆடைகள் பல ஆண்டுகளாக பல்வேறு வகைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதிலும் இன்றைக்கு உள்ள பேஷன் உலகிற்கு ஏற்றவாறு, லெதர் சட்டைகள், லெதர் ஸ்கரட்ஸ், டிராக்சூட்கள், காலர்களுடன் கூடிய ஜாக்கெட்டுகள் இன்றைக்கு சந்தையில் விற்பனையாகிறது. இவை உங்களது ஆடைகளுக்கு டிரெண்டியாக மற்றும் துணிச்சலையும் தருகிறது.
ஃபாக்ஸ் ஃபர் காலர் (Faux Fur Collar): தோல் மற்றும் ஃபாக்ஸ் ஃபர் ஆகியவற்றின் கலவையாக இந்த குளிர்கால ஆடைகள் உள்ளது. லென்தியான ஜாக்கெட்டுகளுடன் காலரில் மட்டும் ஸ்டைலான தோற்றத்துடன் உள்ளது. இது ஆண்கள் மற்றும் பெண்கள் அனைவருக்கும் ஏற்றதாக உள்ளது.
மிக்ஸ் அன்ட் மேச் : இது உங்களுக்கு மிகவும் ஸ்டைல் ஆன லுக்கைக் கொடுக்கிறது. ஊட்டி, கொடைக்கானல் போன்றவற்றில் குளிரைத் தாங்கிக்கொள்வதற்கு ஏற்றவாறு வசதியான கோட், அதைச்சுற்றி கம்பளி, தொடை உயரத்திற்கு பூட்ஸ் போன்றவை உங்களுக்கு மிகவும் ஸ்டைல்லான தோற்றத்தைத் தருகிறது.
ஸ்வெட்டர் ஆடைகள் : பகல் நேரத்திலும் நாம் அணியக்கூடிய ஆடைகளில் ஒன்றாக உள்ளது. ஸ்வெட்டர்கள் போன்று டி-சர்ட், மாடர்ன் உடைகளும் இதில் இடம் பெறுகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஸ்டைல்லான லுக்கைக் கொடுக்கிறது.
இதோடு எவர்லாஸ்டிங் கோட் (Everlasting Overcoats) : ட்ரெஞ்ச் கோட், ஸ்வர்டர்ஸ் மற்றும் ஸ்வெர்ட் சர்ட்டுகள் போன்றவையும் உங்களை மிகவும் ஸ்டைலாக அழகாக மாற்றுவதற்கு உதவும்.