தான் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருப்பதாக தயாரிப்பாளர் ரவீந்தர் இன்ஸ்டகிராமில் பதிவிட்டுள்ளார்.
சின்னத்திரை நடிகை மகாலட்சுமியை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார் லிப்ரா புரொடக்ஷன் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரன்.
மகாலட்சுமிக்கு முன்பே அனில் என்பவருடன் திருமணமாகி, சச்சின் என்ற மகன் இருக்கிறான். பின்னர் அவர்கள் இருவரும் பிரிந்தனர்.
ரவீந்திரனும் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்தானவர். அதன்படி இவர்கள் இருவருக்கும் இது இரண்டாவது திருமணம்.
திருமணத்துக்குப் பிறகு தங்களின் ஒவ்வொரு அசைவையும் இன்ஸ்டகிராமில் பதிவிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள் மகாலட்சுமி ரவீந்தர் தம்பதி.
சமீபத்தில் மகாலட்சுமியின் பிறந்தநாளுக்கு உருக்கமான பதிவொன்றை எழுதியிருந்தார் ரவீந்தர்.
இந்நிலையில் தற்போது கையில் லெமன் ஜூஸ், டேபிளில் பிரெட் மற்றும் பழங்கள் இருக்கும் படத்தைப் பகிர்ந்து, ‘எனக்கு உடல்நிலை சரியில்லாதபோது, டயட்டில் இருப்பேன்’ எனப் பதிவிட்டுள்ளார்.