முகப்பு » புகைப்பட செய்தி » பொழுதுபோக்கு»க்ரைம் த்ரில்லர்.. அமேசான் ஓடிடி வெளியீடு.. 'வதந்தி' வெப் சீரிஸ் எப்படி இருக்கு? ரிவ்யூ!
PREVNEXT
News18 Tamil | December 02, 2022, 22:33 IST

க்ரைம் த்ரில்லர்.. அமேசான் ஓடிடி வெளியீடு.. 'வதந்தி' வெப் சீரிஸ் எப்படி இருக்கு? ரிவ்யூ!

Vadhandhi review: அமேசான் ப்ரைமில் 8 எபிசோட்களாக வெளியாகியுள்ள க்ரைம் த்ரில்ல வதந்தி வெப் சீரிஸ் குறித்தான விரிவான விமர்சனம்

 8 எபிசோட்களாக அமேசான் ப்ரைமில் வெளியாகி இருக்கும் க்ரைம் வெப் சீரிஸ்தான் வதந்தி. விக்ரம் வேதா திரைப்படத்தை இயக்கிய புஷ்கர் காயத்ரி இந்த சீரிஸை தயாரித்துள்ளனர். ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த வெப் தொடரில் எஸ். ஜே. சூர்யா, விவேக் பிரசன்னா, நாசர், லைலா,சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, குமரன் ஸ்மிருதி வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
1/ 9

8 எபிசோட்களாக அமேசான் ப்ரைமில் வெளியாகி இருக்கும் க்ரைம் வெப் சீரிஸ்தான் வதந்தி. விக்ரம் வேதா திரைப்படத்தை இயக்கிய புஷ்கர் காயத்ரி இந்த சீரிஸை தயாரித்துள்ளனர். ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த வெப் தொடரில் எஸ். ஜே. சூர்யா, விவேக் பிரசன்னா, நாசர், லைலா,சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, குமரன் ஸ்மிருதி வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

2/ 9

ஒரு க்ரைம் த்ரில்லர் வெப் சீரிஸுக்கே உண்டான முதல் காட்சியோடு தொடங்குகிறது. ஒரு இளம்பெண் கொலையாகி கிடப்பதும், அவரை கொலை செய்தவர் யார்? என்ன காரணம் எனக் கண்டுபிடிப்பதுமான இன்வெஸ்டிகேஷன் த்ரில்லராக இந்த வதந்தி உருவாகியுள்ளது

3/ 9

தொடக்கம் முதலே சஸ்பென்ஸ்களை அடுக்கும் வதந்தி தொடர் அடுத்த அடுத்த எபிசோட்களையும் அதே சஸ்பென்ஸ் உடன் கொண்டு செல்கிறது. யார் கொலை செய்திருப்பார்கள் என்பதுதான் கதையே என்றாலும் இவரா அவரா என பார்வையாளர்களுக்கு அடுத்தடுத்த ட்விஸ்டுகளுடன் சீரிஸ் பயணப்படுகிறது

4/ 9

இப்பொழுதெல்லாம் பார்வையாளர்களே இயக்குநர் அளவுக்கு யோசிப்பதால் கணிக்கவே முடியாத அளவுக்கு ஒரு கொலையாளியையும் அதற்கான காரணத்தையும் இயக்குநர் கொடுத்துள்ளார்

5/ 9

கன்னியாகுமரியை மையமாக வைத்து நடக்கும் கதை என்பதால் அந்த ஊர் மொழி நடையிலேயே அனைத்து கதாபாத்திரங்களும் உருவாக்கப்பட்டுள்ளன. அவங்க ஸ்லாங்கும் அழகுதான் என்றும் ரசிக்கவும் வைக்கிறது. அதேவேளையில் சீரிஸின் முக்கிய கதாபாத்திரங்கள் சிலர் ஆங்கிலோ இண்டியன் என்பதால் அதிகமான ஆங்கில உரையாடல்களை வைத்திருப்பது அனைவருக்கும் சென்று சேருமா என்பதில் சந்தேகத்தை கிளப்புகிறது

6/ 9

நாயகன் எஸ்ஜே சூர்யா தனக்கே உரித்தான வேற லெவல் நடிப்பை தொடக்கம் முதல் கடைசி வரை கொடுத்துள்ளார். ஒரு போலீஸ் அதிகாரிகளுக்கு உள்ள அழுத்தம் என்ன, குடும்ப சூழல், மன உளைச்சல் என அனைத்தையும் கண் முன்னே காட்டும் போலீசாகவே வாழ்ந்துள்ளார். நாயகி சஞ்சனா, விவேக் பிரசன்னா, நாசர், லைலா உள்ளிட்ட அனைவருமே சிறப்பான நடிப்பை கொடுத்துள்ளனர். கேமராவும், இசையும் வெப் சீரிஸுக்கு பலமாக அமைந்துள்ளன.

7/ 9

கொலையாளியை நோக்கி சீரிஸ் பல சஸ்பென்ஸுடன் சென்றாலும் சில இடங்களில் லாஜிக் மீறல்களும், தொய்வும் ஏற்படுகிறது. ஸ்ஸ்ஸ் என தொய்வடையும் நேரத்தில் ஒரு பரபர காட்சியை கொடுத்து பார்வையாளர்களை தன்பக்கம் இழுத்துவிடுகிறார் இயக்குநர்

8/ 9

வெறும் கொலை, கொலையாளி என பொழுதுபோக்காகவே மட்டுமில்லாமல் படம் பல சமூக விஷயங்களையும் தொட்டு செல்கிறது. குழந்தை வளர்ப்பு, பெண்கள் மீதான பார்வை, ஒரு செய்தியை இந்த சமூகம் அணுகும் விதம், பெண்கள் சமூகத்தில் சந்திக்கும் பிரச்னை என பல தேவையான விஷயங்களையும் பேசி பதில் சொல்கிறது.

9/ 9

தமிழில் ஏற்கெனவே விலங்கு என்ற இன்வெஸ்டிகேஷன் வெப்சீரிஸ் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அந்த வரிசையில் இந்த வதந்தி வெப் சீரிஸும் ரசிகர்களை கவரும் என எதிர்பார்க்கலாம். இந்த வீக்கெண்டுக்கு பக்கா வெப் சீரிஸாக உருவாகியுள்ளது இந்த வதந்தி.

Published by: Murugadoss C
First published: December 02, 2022, 22:33 IST

அண்மைச்செய்தி

முக்கிய செய்திகள்