Home » Photo Gallery » entertainment
News18 Tamil | March 16, 2022, 12:58 IST

மன்மதலீலையில் வெங்கட்பிரபு போடும் 'A' தூண்டில்

Venkat Prabhu's Manmadha Leelai | 'ஏ' சான்றிதழ் பொதுவாக வன்முறை, ஆபாசம் அதிகம் இருக்கும் படங்களுக்கு வழங்கப்படும். மன்மதலீலைக்கு இரண்டாவது காரணத்துக்காக வழங்கப்பட்டுள்ளது.

 வெங்கட்பிரபுவின் அடுத்த வெளியீடு மன்மதலீலை. அடல்ட் கன்டென்டில் தயாராகியிருக்கும் படம்.
1/ 11

வெங்கட்பிரபுவின் அடுத்த வெளியீடு மன்மதலீலை. அடல்ட் கன்டென்டில் தயாராகியிருக்கும் படம்.

2/ 11

அசோக்செல்வன், ஸ்மிருதி வெங்கட், ரியா சுமன், சம்யுக்தா ஹெக்டே நடித்துள்ளனர். படத்தின் பர்ஸ்ட் லுக், கிளிம்ப்ஸ் அனைத்திலும் காமம் ததும்பி நின்றது.

3/ 11

முக்கியமாக படத்தின் முதல் கிளிம்ப்ஸ் முழுக்க முத்தத்தில் ஈரமாகியிருந்தது. ஹாலிவுட்டின் American Pie திரைப்படத்தைப் போல இதனை எடுத்திருப்பதாக வெங்கட்பிரபு கூறியிருந்தார்.

4/ 11

American Pie திரைப்படத்தின் மையம் என்ன? அதன் மையம் வலது, இடது என எல்லாபுறங்களிலும் காமம்தான் தகித்துக் கொண்டிருக்கும். அதையே மன்மத லீலையிலும் வெங்கட் பிரபு முயற்சி செய்திருக்கிறார்.

5/ 11

மன்மத லீலைக்கு சென்சார் 'ஏ' சான்றிதழ் அளித்துள்ளது. பதினெட்டு வயதுக்குட்பட்டவர்கள் பார்க்க உகந்த படமல்ல இது.

6/ 11

'ஏ' சான்றிதழ் பொதுவாக வன்முறை, ஆபாசம் அதிகம் இருக்கும் படங்களுக்கு வழங்கப்படும். மன்மதலீலைக்கு இரண்டாவது காரணத்துக்காக வழங்கப்பட்டுள்ளது.

7/ 11

இருபது வருடங்களுக்கு முன்பு மெயின்ஸ்ட்ரீம் படமொன்றுக்கு 'ஏ' சான்றிதழ் கிடைத்தால் துடித்துப் போவார்கள். பதினெட்டு வயதுக்குட்பட்டவர்கள் அனுமதி இல்லை என்றால் குடும்ப ஆடியன்ஸை எதிர்பார்க்க வேண்டாம். படத்தின் வசூல் பாதிக்கப்படும்.

8/ 11

அதைவிட முக்கியமாக தயாரிப்பு நிறுவனத்தின் பெயர் சேதாரமாகிவிடும். எப்படியாவது ரிவைஸிங் கமிட்டிக்கு அனுப்பி 'யு' அல்லது 'யு/ஏ' வாங்க பார்ப்பார்கள்.

9/ 11

அதற்கு மாறாக மன்மத லீலைக்கு 'ஏ' சான்றிதழ் கிடைத்ததை பெருமையாக விளம்பரப்படுத்தியிருக்கிறார்கள். இந்த 'ஏ' ஒரு தூண்டில். இதில்தான் இளவட்ட பார்வையாளர்கள் சிக்கப் போகிறார்கள்.

10/ 11

மன்மதலீலை போன்ற படங்கள் தேவையா, அவசியமா என்பதைவிட, இனிவரும் காலங்களில் இதுபோன்ற படங்களை தவிர்க்க முடியாது என்பதே உண்மை.

11/ 11

தமிழில் முதல்முதலில் 'ஏ' சான்றிதழ் பெற்ற படம் 1951 வெளியான எம்ஜிஆரின் மர்மயோகி. அதில் பேய் இடம்பெற்றதற்காக 'ஏ' சான்றிதழ் வழங்கப்பட்டது. அன்று ஹாரருக்காக வழங்கினார்கள், இன்று காமத்துக்காக வழங்கியிருக்கிறார்கள்.

Published by: Vinothini Aandisamy
First published: March 16, 2022, 12:58 IST