ஷங்கர் - ராம் சரண் படத்தின் நியூஸிலாந்து ஷெட்யூல் முடிந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ராம் சரண் மற்றும் கியாரா அத்வானி நடிக்கும் RC15 படக்குழுவினர் ஒரு வாரத்திற்கு முன்பு நியூசிலாந்திற்குச் சென்றனர், தற்போது அங்கு பட்ப்பிடிப்பை முடித்துள்ளனர்.
ஒவ்வொரு ஷாட்டுக்கும் நேரம் எடுத்துக்கொள்வதில் பெயர் பெற்ற இயக்குனர் ஷங்கரின் பெர்ஃபெக்ஷனிஸம் இதில் ஆச்சரியமாக இருக்கிறது. இதனை ராம் சரண் சில படங்களுடன் தனது சமூக வலைதளத்தில் அறிவித்துள்ளார்.
பாடலும் அதன் காட்சிகளும் அருமையாக உள்ளன. நியூஸிலாந்து படப்பிடிப்பு முடிவடைந்தது என தெரிவித்துள்ளார்.
படக்குழுவினர் அங்கு ஒரு பாடல் காட்சியை படமாக்கினர். இது இயக்குனர் ஷங்கரின் பொதுவான ஒன்று, அவர் கண்களுக்கு விருந்து படைக்கும் இடங்களில் படமாக்கப்பட்ட பாடல்களை தன் படத்தில் வைப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்.
ராம் சரண் நடிக்கும் 15-வது படமான இதற்கு இன்னும் பெயரிடப்படாதது குறிப்பிடத்தக்கது.