முகப்பு » புகைப்பட செய்தி » பொழுதுபோக்கு»உண்மையில் எனது வயது 44 இல்லை... அருவி சீரியல் நடிகை லாவண்யா ஓபன் டாக்!
PREVNEXT
News18 Tamil | March 25, 2023, 13:35 IST

உண்மையில் எனது வயது 44 இல்லை... அருவி சீரியல் நடிகை லாவண்யா ஓபன் டாக்!

கடந்த 19ம் தேதி லாவண்யா, பிரசன்னா என்பவரை திருப்பதியில் மணந்துள்ளார். அவரது திருமண புகைப்படங்கள் வெளியாக 44 வயதில் நடிகையின் திருமணம் என செய்திகள் பரவின.

     தமிழில் சரத்குமார் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் கொடுத்த சூர்ய வம்சம் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் லாவண்யா.
    1/ 9

    தமிழில் சரத்குமார் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் கொடுத்த சூர்ய வம்சம் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் லாவண்யா.

    2/ 9

    90-களின் மத்தியில் இருந்து பல தமிழ் படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருபவர் நடிகை லாவண்யா தேவி.

    3/ 9

    1979-ஆம் ஆண்டு சென்னையில் பிறந்த இவர் சூர்யவம்சம் படத்தின் மூலம் தனது திரை வாழ்க்கையை தொடங்கினார்.

    4/ 9

    இருப்பினும் 1999-ஆம் ஆண்டு வெளியான ரஜினியின் படையப்பா படத்தில் அவரது தங்கையாக நடித்ததன் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.

    5/ 9

    அதே வருடம் வெளியான ஜோடி, சேது போன்ற படங்களிலும் நடித்திருந்தார்.

    6/ 9

    கமலின் தெனாலி படத்தில் தொலைக்காட்சி தொகுப்பாளராக நடித்திருந்தார்.

    7/ 9

    திருமலை, வில்லன், எதிரி, ரன், சமுத்திரம், சுந்தரா டிராவல்ஸ், நான் தான் பாலா உட்பட 100-க்கும் மேற்பட்ட படங்களில் சப்போர்டிங் நடிகையாக நடித்துள்ளார் லாவண்யா.

    8/ 9

    பின்னர் சினிமாவில் நடிப்பதை குறைத்துக் கொண்டு தொலைக்காட்சி பக்கம் தனது கவனத்தை திருப்பினார். தற்போது சன் டிவி-யின் அருவி சீரியலில் லட்சுமி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

    9/ 9

    இந்நிலையில் கடந்த 19-ம் தேதி லாவண்யா, பிரசன்னா என்பவரை திருப்பதியில் மணந்துள்ளார். அவரது திருமண புகைப்படங்கள் வெளியாக 44 வயதில் நடிகையின் திருமணம் என செய்திகள் பரவின.
    தனது திருமணம் குறித்து லாவண்யா ஒரு பேட்டியில் கூறும்போது, என்னுடைய குடும்பம் தான் எனக்கு மிகப்பெரிய பலம், ஏன் இன்னும் திருமணம் செய்துகொள்ளவில்லை என்ற கேள்வியை நான் எதிர்கொண்டதே இல்லை என்றிருக்கிறார். அதேபோல் தனக்கு 44 வயது ஒன்றும் இல்லை 43 தான் ஆகிறது என்றும் கூறியுள்ளார்.

    Published by: Vinothini Aandisamy
    First published: March 25, 2023, 13:35 IST

    அண்மைச்செய்தி

    முக்கிய செய்திகள்