முகப்பு » புகைப்பட செய்தி » பொழுதுபோக்கு»நவம்பர் மாத ஓடிடி ரிலீஸில் மிஸ் பண்ணக் கூடாத படங்கள்…
PREVNEXT
News18 Tamil | December 02, 2022, 20:54 IST

நவம்பர் மாத ஓடிடி ரிலீஸில் மிஸ் பண்ணக் கூடாத படங்கள்…

நவம்பர் மாதத்தில் ஓடிடியில் 100க்கும் அதிமான படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அவற்றில் தவற விடக் கூடாத 10 படங்களை இந்த பதிவில் பார்க்கலாம்…

     குஜராத் மொழியில் வெளியாகி பல விருதுகளை வென்ற படம். நெட்ஃப்ளிக்ஸில் பார்க்கலாம்.
    1/ 10

    தி லாஸ்ட் ஃபிலிம் ஷோ குஜராத் மொழியில் வெளியாகி பல விருதுகளை வென்ற படம். நெட்ஃப்ளிக்ஸில் பார்க்கலாம்.

    2/ 10

    மீட் க்யூட்… ஆந்தாலஜி ஜானர் வெப் சீரிஸ். அஷ்வின் குமார், ருஹானி சர்மா, சத்யராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சோனி லைவ் ஓடிடியில் இந்த இணைய தொடரை பார்க்கலாம்.

    3/ 10

    மோனிகா ஓ மை டார்லிங் : க்ரைம் காமெடி த்ரில்லர் ஜானரில் வெளிவந்துள்ள படம். ராஜ்குமார் ராவ், ஹூமா குரேஷி, ராதிகா ஆப்தே முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். நெட் ஃப்ளிக்ஸில் இந்த படத்தை பார்க்கலாம்.

    4/ 10

    சப் – ரிவெஞ்ச் தி ஆர்டிஸ்ட் : துல்கர்சல்மான் சன்னி தியோல், ஷ்ரேயா தன்வந்த்ரி உள்ளிட்டோர் நடித்துள்ள இந்தப் படம் சைக்கோ க்ரைம் த்ரில்லர் ஜானரில் வெளிவந்தது. ஜீ5 ஓடிடியில் படம் உள்ளது.

    5/ 10

    கையும் களவும்  :சஞ்சனா நடராஜன், மடோனா செபாஸ்டின், கரு பழனியப்பன் உள்ளிட்டோர் நடிப்பில் வரவேற்பை பெற்றுள்ள வெப் சீரிஸ். 8 எபிசோடுகள் சோனி லைவ் ஓடிடியில் காணலாம்.

    6/ 10

    ஒண்டர் வுமன் :  பிரபல இயக்குனர் அஞ்சலி மேனன் இயக்கிய படம். நித்யா மேனன், பார்வதி, நதியா, பத்ம பிரியா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சோனி லைவில் இதனை பார்க்கலாம்.

    7/ 10

    சர்தார்: கார்த்தி நடிப்பில் பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் வெளிவந்து வரவேற்பை பெற்ற சர்தார் திரைப்படத்தை  ஆஹா ஓடிடியில் பார்க்கலாம்.

    8/ 10

    அனல் மேலே பனித்துளி:  கைசர் ஆனந்த் இயக்கியுள்ள படம். ஆன்ட்ரியா, ஆதவ் கண்ணதாசன் முன்னணி கேரக்டரில் நடித்துள்ளனர். வெற்றி மாறனின் கிராஸ் ரூட் பிலிம் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது. இந்தப் படம் சோனி லைவில் உள்ளது.

    9/ 10

    காந்தாரா : ரிஷப் ஷெட்டி இயக்கி முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்த படம். உலக அளவில் சூப்பர் ஹிட்டான படம் இப்போது அமேசான் ப்ரைம் ஓடிடியில் உள்ளது.

    10/ 10

    குமாரி : ஐஸ்வர்ய லெட்சுமி முதன்மை கேரக்டரில் நடித்துள்ளார். மலையாளத்தில் வெளிவந்து வரவேற்பை பெற்ற படம். நெட்ஃப்ளிக்ஸில் காணலாம்.

    Published by: Musthak
    First published: December 02, 2022, 20:54 IST

    அண்மைச்செய்தி

    முக்கிய செய்திகள்