கங்கனா ரனவத் தாகட் படத்தின் படப்பிடிப்புக்காக புதாபெஸ்ட் சென்றிருந்தார்.
அங்கு எடுத்துக் கொண்ட அவரது அரைகுறை ஆடை புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது.
கங்கனா ரனவத் தாகட் என்ற ஸ்பை த்ரில்லரில் நடிக்கிறார். இதுவொரு நாயகி மையத் திரைப்படம்.
கங்கனாவுடன் அர்ஜுன் ராம்பால், திவ்யா தத்தா உள்பட பலர் நடித்துள்ளனர்.
ரஸ்னீஷ் கைய் இயக்கியிருக்கும் இந்தப் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு ஹங்கேரி தலைநகர் புதாபெஸ்டில் நடந்தது. படப்பிடிப்பு நிறைடைந்ததை பார்ட்டி வைத்து கொண்டாடியுள்ளனர்.
அப்போது சூரிய அஸ்தமன பின்னணியில் எடுத்த கவர்ச்சி உடை புகைப்படங்களை கங்கனா இணையத்தில் பகிர, அப்படங்கள் வைரலானது.
தலைவி படத்துக்காக உடல் எடையை அதிகரித்த கங்கனா தாகட் படத்துக்காக உடல் எடையை பெருமளவு குறைத்திருந்தார். இரண்டு படங்களின் புகைப்படங்களையும் அவர் சமீபத்தில் வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
தாகட் படத்தின் ஏஜென்ட் அக்னி என்ற ஸ்பையாக கங்கனா நடித்துள்ளார். ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த படம் இது.
தாகட் படத்தின் ஏஜென்ட் அக்னி என்ற ஸ்பையாக கங்கனா நடித்துள்ளார். ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த படம் இது.
ஏஞ்சலினா ஜோலி போன்று ஆக்ஷன் காட்சிகளில் கங்கனாவை சண்டையிட வைத்துள்ளனர்.