75வது கேன்ஸ் திரைப்பட விழா செவ்வாய்கிழமை தொடக்க விழாவுடன் தொடங்கியது. அதில் பொழுதுபோக்கு துறையில் உள்ள அனைத்து நட்சத்திரங்களும் ரெட் கார்பெட்டில் நடந்தது ரசிகர்களின் கண்களுக்கு விருந்தாக அமைந்தது.
இந்த விழாவில் கலந்துக் கொண்ட தமன்னா பப்பிள் ஹெம் கவுனில் காட்சியளித்தார்.
அந்தப் படங்களை தனது இன்ஸ்டகிராம் ஹேண்டிலில் பகிர்ந்துக் கொண்டார்.
வடிவமைப்பாளர்கள் கெளரி மற்றும் நைனிகா வடிவமைத்த பல லட்சம் மதிப்புள்ள உடையில் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தார் தமன்னா.
அந்த உடைக்கு டைமண்ட் காதணிகள் மற்றும் ஐ மேக்கப்பை மேட்ச் செய்திருந்தார்.
தமன்னா வெளியிட்ட அந்தப் படங்களுக்கு பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் தங்கள் அன்பை பொழிந்தனர்.
தமன்னாவின் கேன்ஸ் லுக் தற்போது இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.