முகப்பு » புகைப்பட செய்தி » பொழுதுபோக்கு»50 வருடங்களை நிறைவு செய்யும் தேச ஒற்றுமையை வலியுறுத்திய பாரத விலாஸ்..!
PREVNEXT
News18 Tamil | March 25, 2023, 12:58 IST

50 வருடங்களை நிறைவு செய்யும் தேச ஒற்றுமையை வலியுறுத்திய பாரத விலாஸ்..!

1972 செப்டம்பர் இறுதியில் வசந்த மாளிகை வெளியாகி சக்கைப்போடு போட்டுக் கொண்டிருக்கையில், டிசம்பரில் நீதி படம் வெளியாகிறது. இரண்டுமே திரையரங்கில் ஓடிக் கொண்டிருக்கையில் 1973 மார்ச் இறுதியில் பாரத விலாஸ் வெளியாகிறது. அது வெளியான அடுத்த வாரம், அதாவது ஏழே நாளில் ராஜராஜன் படம் திரைக்கு வருகிறது.

 50 வருடங்களை நிறைவு செய்யும் தேச ஒற்றுமையை வலியுறுத்திய பாரத விலாஸ் தேசம் சம்பந்தப்பட்ட எதுவாயினும் முதலில் அது அன்னை இல்லத்தில் இருக்கும் சிவாஜியை சந்தித்தப் பிறகே வேறு முகவரி தேடிச் செல்லும். அப்படி தேசத்துக்கும் அவருக்கும் ஒரு பிணைப்பு. சிவாஜியும் அப்படித்தான். தேசம் சம்பந்தப்பட்ட விஷயங்களுக்கு அவர் போல் அள்ளிக் கொடுத்த நட்சத்திரங்கள் மிகக்குறைவு.
1/ 8

2/ 8

சினிமாவில் வீரபாண்டிய கட்டபொம்மன், கப்பலோட்டிய தமிழன், பாரதி என்றெல்லாம் வேடம் புனைந்தவர் சரித்திர நாயகர்களான ராஜராஜன் உள்பட பலரது வேடங்களை தாங்கி அவர்கள் இப்படித்தான் இருந்திருப்பார்கள் என்ற சித்திரத்தை தமிழ் சமூகத்துக்குத் தந்தார்.

3/ 8

தேசிய ஒற்றுமையை வலியுறுத்துகிற கதையில் அவரைவிட யார் பொருத்தமாக இருக்க முடியும்? அதனால், அப்படியொரு கதையை எழுதியதும் ஏ.சி.திருலோகச்சந்தர் சிவாஜியை தேடி வந்து ஒப்பந்தம் செய்ததில் வியப்பில்லை.

4/ 8

பல்வேறு சாதி, மத, இனத்தைச் சேர்ந்தவர்கள் ஒன்றாக வசிக்க நேர்ந்த வீடுதான் பாரத விலாஸ். கோபால் என்ற வேடத்தில் நடிகர் திலகம் வழக்கம் போல் அசத்தியிருந்தார். அவருக்கு ஜோடி கே.ஆர்.விஜயா.

5/ 8

சீக்கியராக மேஜர் சுந்தர்ராஜன் கம்பீரமான நடிப்பை தந்திருந்தார். படம் நெடுக ஹாஸ்ய மழை பொழிந்தவர்கள் எம்.ஆர்.ஆர்.வாசுவும், மனோரமாவும். நகைச்சுவையுடன் சோகமாகவும் அசத்த முடியும் என்பதை தான் ஏற்று நடித்த இப்ராஹிம் பாய் கதாபாத்திரத்தில் காட்டியிருந்தார் வி.கே.ராமசாமி. இவர்களுடன் தேவிகா, ராஜசுலோச்சனா, சிவகுமார், ஜெயசித்ரா, ஜெயசுதா, எஸ்.வி.ராமதாஸ் உள்பட ஒரு நட்சத்திரப் பட்டாளமே நடித்தது. எம்.எஸ்.விஸ்வநாதனின் இசையில் இந்திய நாடு  என் வீடு... பாடல் இன்றும் தேச ஒற்றுமையை வலியுறுத்தி பாடிக் கொண்டிருக்கிறது.

6/ 8

சிவாஜிக்கும் மற்ற நடிகர்களுக்கும் உள்ள வித்தியாசம், ஒரு படம் ஓடி முடிந்த பிறகே மற்றவர்களின் அடுத்தப் படம் வெளியாகும். ஆனால், சிவாஜிக்கு அப்படியல்ல. திரையரங்கில் இரண்டு மூன்று படங்கள் ஓடிக் கொண்ருக்கும் போதே இன்னும் இரண்டு படங்கள் வெளியாகும்.

7/ 8

1972 செப்டம்பர் இறுதியில் வசந்த மாளிகை வெளியாகி சக்கைப்போடு போட்டுக் கொண்டிருக்கையில், டிசம்பரில் நீதி படம் வெளியாகிறது. இரண்டுமே திரையரங்கில் ஓடிக் கொண்டிருக்கையில் 1973 மார்ச் இறுதியில் பாரத விலாஸ் வெளியாகிறது. அது வெளியான அடுத்த வாரம், அதாவது ஏழே நாளில் ராஜராஜன் படம் திரைக்கு வருகிறது.

8/ 8

இதில் வசந்த மாளிகை வெள்ளி விழா. நீதி 100 நாள்கள். பாரத விலாஸ் 100 நாள்கள். ராஜ ராஜனும் கமர்ஷியல் ஹிட். இப்படியெல்லாம் வெற்றிகள் கொடுக்க இன்றுவரை வேறு நடிகர்களால் முடிந்ததில்லை. 1973 மார்ச் 24 வெளியான பாரத விலாஸ் இன்று 50 வது வருடத்தை நிறைவு செய்கிறது.

Published by: Vinothini Aandisamy
First published: March 25, 2023, 12:58 IST

அண்மைச்செய்தி

முக்கிய செய்திகள்