ஹோம் » போடோகல்லெரி » பொழுதுபோக்கு
PREVNEXT
News18 Tamil | December 01, 2022, 14:44 IST

பெங்களூருவில் வெள்ளி விழா கொண்டாடிய கமலின் 8 திரைப்படங்கள்

மணிரத்னம் இயக்கத்தில் கமலுடன் சரண்யா, ஜனகராஜ், நிழல்கள் ரவி பிரதான வேடங்களில் நடித்த இந்தத் திரைப்படம் தமிழிலேயே கர்நாடகாவில் வெளியாகி அங்கும் நல்ல வரவேற்பை பெற்றது.

   பெங்களூருவில் வெள்ளி விழா கொண்டாடிய கமலின் 8 திரைப்படங்கள் சாதனைகள் பலவிதம். அதில் ஒன்று வெளி மாநிலங்களில் வெற்றிக்கொடி நாட்டுவது. சிவாஜி, கமல், ரஜினி என பலரது படங்கள் வெளிமாநிலங்களிலும் வெள்ளி விழா கொண்டாடியுள்ளன. அதில் கமலின் சாதனை தனித்துவமானது. கர்நாடகா தலைநகர் பெங்களூருவில் கமல் நடித்த எட்டு திரைப்படங்கள் வெள்ளிவிழா கொண்டாடியுள்ளன. அதாவது பெங்களூருவில் 25 வாரங்கள் கமலின் எட்டு திரைப்படங்கள் ஓடி சாதனை படைத்துள்ளன. 1. மரோசரித்திரா (1978 தெலுங்கு) பாலச்சந்தர் இயக்கத்தில் கமல், சரிகா, மாதவி நடித்த மரோசரித்ரா திரைப்படம் 1978 இல் வெளியானது. தெலுங்கில் எடுக்கப்பட்ட இந்தத் திரைப்படம் தமிழ்நாடு கர்நாடகா இரு மாநிலங்களிலும் தெலுங்கிலே வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்றது. சென்னையில் 500 தினங்களுக்கு மேல் சபையர் திரையரங்கில் ஓடிய திரைப்படம், பெங்களூரு கல்பனா திரையரங்கில் 693 நாட்கள் ஓடி சாதனை படைத்தது. இந்த சாதனையை இதுவரை எந்த தமிழ் நடிகராலும் முறியடிக்க முடியவில்லை.
  1/ 8

  2/ 8

  2. சிகப்பு ரோஜாக்கள் (1978 தமிழ்) அதே 1978 தமிழில் வெளியான சிகப்பு ரோஜாக்கள் தமிழகத்தில் மட்டுமின்றி பிற மாநிலங்களிலும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. பாக்யராஜ் கதை, திரைக்கதையில் பாரதிராஜா இயக்கிய இந்தத் திரைப்படத்தில் கமலுடன் ஸ்ரீதேவி நடித்திருந்தார். வித்தியாசமான கதையாம்சத்துடன் வந்த இந்தத் திரைப்படம் பெங்களூருவில் 175 தினங்களை கடந்து ஓடி வெற்றியை பதிவு செய்தது.

  3/ 8

  3. சனம் தேரி கசம் (1982 இந்தி) 1982ல் கமல் நடிப்பில் ஹிந்தியில் வெளியான திரைப்படம் சனம் தேதி கசம். நரேந்திர பேடி இயக்கத்தில் கமலுடன் ரீனாராய் நடித்திருந்தார். ஆர் டி பர்மன் இசையில் அனைத்துப் பாடல்களும் சூப்பர் ஹிட் ஆகின. இந்தப் படம் பெங்களூருவில் 175 தினங்களை கடந்து ஓடி மாபெரும் வெற்றியை பெற்றது.

  4/ 8

  4. சாகர சங்கமம் (1983 தெலுங்கு) கமல் நடிப்புக்கு உதாரணமாக திகழும் படங்களில் ஒன்று சலங்கை ஒலி. கே. விஸ்வநாத் தெலுங்கில் சாகர சங்கமும் என்ற பெயரில் எடுத்தத் திரைப்படத்தின் தமிழ் மொழி மாற்றம் சலங்கை ஒலி. 1983இல் கமல், ஜெயப்ரதா நடிப்பில் இளையராஜாவின் இசையில் வெளியான சாகர சங்கமம் திரைப்படம் கர்நாடகா பொங்களூருவில் தெலுங்கில் வெளியாகி 175 நாட்களை கடந்து ஓடி சாதனை படைத்தது

  5/ 8

  5. சுவாதி முத்யம் (1986 தெலுங்கு) கே விஸ்வநாத் இயக்கத்தில் கமல் ராதிகா நடிப்பில் 1986இல் சுவாதி முத்யம் திரைப்படம் தெலுங்கில் வெளியானது. இந்தத் திரைப்படம் தமிழில் சிப்பிக்குள் முத்து என்ற பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டு தமிழகத்தில் வெளியிடப்பட்டது. சுவாதி முத்யம் கன்னடத்தில் மொழிமாற்றம் செய்யப்படாமல் தெலுங்கில் பெங்களூருவில் வெளியாகி 175 தினங்களை கடந்து ஓடி வெள்ளி விழா கண்டது.

  6/ 8

  6. நாயகன் (1987 தமிழ்) கமலின் பெஞ்ச் மார்க் திரைப்படமான நாயகன் 1987இல் வெளியானது. மணிரத்னம் இயக்கத்தில் கமலுடன் சரண்யா, ஜனகராஜ், நிழல்கள் ரவி பிரதான வேடங்களில் நடித்த இந்தத் திரைப்படம் தமிழிலேயே கர்நாடகாவில் வெளியாகி அங்கும் நல்ல வரவேற்பை பெற்றது. குறிப்பாக பெங்களூருவில் இந்தத் திரைப்படம் 175 தினங்களைக் கடந்து சாதனை படைத்தது.

  7/ 8

  7. புஷ்பக விமானம் (1987 தெலுங்கு) 1987 சசிங்கீதம் சீனிவாச ராவ் கன்னடத்தில் புஷ்பக விமான திரைப்படத்தை இயக்கினார். கமல் அமலா நடித்த இந்தத் திரைப்படம் வசனங்கள் இல்லாமல் உருவானது. மௌன பட காலத்திற்குப் பிறகு வசனமே இல்லாமல் உருவான இந்தியாவின் முதல் திரைப்படமாக அது அமைந்தது. நடிப்புக்கு சவாலாக அமைந்த இந்தத் திரைப்படம் கர்நாடகா மட்டுமின்றி ஆந்திரா கேரளா தமிழகம் வடமாநிலங்கள் என இந்தியா முழுக்க வெளியானது. கர்நாடகா பெங்களூருவில் இந்த் திரைப்படம் 175 தினங்களை கடந்து ஓடி சாதனை படைத்தது.

  8/ 8

  8. அபூர்வ சகோதரர்கள் (1989 தமிழ்) கமலின் இண்டஸ்ட்ரி ஹிட் திரைப்படமான அபூர்வ சகோதரர்கள் சந்தான பாரதி இயக்கத்தில் கிரேசி மோகன் வசனத்தில் 1989 வெளியானது. கமல் இதில் மூன்று வேடங்களில் நடித்திருந்தார். அதில் குள்ள அப்புவாக நடித்த வேடம் இந்திய அளவில் பேசப்பட்டது. இந்தத் திரைப்படம் பெங்களூருவில் 175 தினங்களை கடந்து ஓடியது. ஒரு நடிகரின் படம் பிற மாநிலத்தில் வெள்ளி விழா காண்பதே அரிது. கமலின் எட்டு திரைப்படங்கள் கர்நாடகாவின் பெங்களூருவில் வெள்ளி விழா கண்டுள்ளன. இது வேறு எந்த இந்திய நடிகருக்கும் இல்லாத சிறப்பாகும்.

  Published by: Shalini C
  First published: December 01, 2022, 14:44 IST

  அண்மைச்செய்தி

  Top Stories