Home / News / virudhunagar /

வத்திராயிருப்பு போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்ட மின்வாரிய ஊழியர்கள் - விருதுநகர் மாவட்ட செய்திகள் (மே 19)

வத்திராயிருப்பு போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்ட மின்வாரிய ஊழியர்கள் - விருதுநகர் மாவட்ட செய்திகள் (மே 19)

இன்றைய விருதுநகர் மாவட்டத்தின் முக்கிய செய்திகள்

இன்றைய விருதுநகர் மாவட்டத்தின் முக்கிய செய்திகள்

Virudhunagar District: வத்திராயிருப்பு போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்ட மின்வாரிய ஊழியர்கள் - விருதுநகர் மாவட்ட செய்திகள் (மே 19)

விருதுநகர் மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்வுகள் மற்றும் செய்திகளை தொகுப்பாக காணலாம்..

1. ஸ்ரீகாளியம்மன் கோயில் வைகாசி பொங்கல் திருவிழா- வடமாடு மஞ்சுவிரட்டு-சீறிப்பாய்ந்த காளைகள்

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே அம்மன்பட்டி கிராமத்திலுள்ள ஸ்ரீகாளியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு மஞ்சுவிரட்டு விழா நடைபெற்றது. வடமாடு மஞ்சுவிரட்டு போட்டியில் காளைகளை அடக்கிய வீரர்களுக்கு பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

உங்கள் நகரத்திலிருந்து (Virudhunagar)

அருப்புக்கோட்டை செல்வ விநாயகர் திருக்கோயில் மகா கும்பாபிஷேக விழா!

மாணவியிடம் வீடியோவில் நிர்வாணமாக பேசிய சேர்மன் - நர்சிங் கல்லூரி மாணவிகள் போராட்டம்

அழிவின் விளிம்பில் சைக்கிள் பழுது பார்க்கும் தொழில் - தொழிலாளிகளின் துயரம்..

விருதுநகர் மாவட்டத்தின் முக்கிய நகரின் பல்வேறு பகுதியில் நாளை (ஜூன் 15) மின்தடை அறிவிப்பு

விருதுநகரில் தொடர் கனமழை, பலத்த சூறாவளியால் வாழை மரங்கள் நாசம் - விவசாயிகள் கவலை

4,000 ஆண்டுகள் பழமையான இரும்பு உருக்கு உலை - ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கண்டுபிடிப்பு

டாஸ்மாக் கடையில் ரூ.20,000 மதிப்புள்ள மது பாட்டில்கள், பணம் கொள்ளை- விருதுநகரில் அதிர்ச்சி

தேசிய அளவிலான யோகா போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற விருதுநகர் மாணவர்கள்..

உதவியை எதிர்பார்த்து காத்திருக்கும் சலவைத் தொழிலாளர்கள் - மாவட்ட நிர்வாகம் கருணை காட்டுமா?

விருதுநகர் மாவட்டத்தில் நாளை (ஜூன் 16) எந்தெந்த பகுதிகளில் மின்தடை? - முழு விவரம்

250 ஆண்டு பழமையான மாதா கோயில்... சமய பாகுபாடின்றி, பொங்கல் வைத்து கொண்டாடும் மக்கள்..

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ள அம்மன்பட்டியில் ஸ்ரீகாளியம்மன் கோயிலின் வைகாசி பொங்கல் திருவிழா கடந்த செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதையடுத்து மறுநாள் பக்தர்கள் அம்மனுக்குப் பொங்கல்வைத்து வழிபட்டனர்.இதன்தொடர்ச்சியாக வியாழக்கிழமை சிறப்பு நிகழ்ச்சியாக மஞ்சுவிரட்டு விழா நடைபெற்றது.அப்போது சுமார் 50 அடி விட்டம் உள்ள ஒரு பெரிய வட்டத்திற்குள் ( எல்லைக்கோடு ) ஒரு காளையானது, சுமார் 25 அடி நீள கயிற்றால் கட்டப்பட்ட நிலையில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும்.அதை அடக்குவதற்கு ஒரு குழு அனுப்பப்படும்.

அக்குழுவிற்கு 9 பேர் எனும் வகையில் இடம்பெறும் மாடுபிடி வீரர்கள்,களத்தில் இறங்கி மாட்டை அடக்கப் போராடுவார்கள்.இதுவே மஞ்சுவிரட்டு விழா எனப்படும்.இந்த ஆண்டு இத்திருவிழாவில் மொத்தம் 14 காளைகளும், 10 மாடுபிடிவீரர்கள் குழுக்களும் இடம்பெற்றன.வீரர்கள் களம்கண்டபோது, சுற்றிலும் திரண்டிருந்த பொதுமக்கள் விசிலடித்தும் குரல்எழுப்பியும் அவர்களை உற்சாகப்படுத்தினர்.போட்டிகளில் வெற்றிபெற்ற மாடுபிடி வீர்கள் மற்றும் மாடுகளுக்கும் சிறப்புப் பரிசுகளாக கட்டில்,சேர்,ரொக்கப் பரிசுப்பணம், ஆகியன வழங்கப்பட்டன.

உடன் இவ்விழாவில்,மாவட்ட காவல்கண்காணிப்பாளர் மனோகரன், அருப்புக்கோட்டை கோட்டாட்சியர் கல்யாணக்குமார்,திருச்சுழி வட்டாட்சியர் சிவக்குமார்,அருப்புக்கோட்டை டிஎஸ்பி சகாயஜோஸ் உள்ளிட்ட அதிகாரிகளும், நேரில் கலந்து கொண்டனர்.சுமார் 50க்கு மேற்பட்ட போலீசார் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டனர்.

சிவகங்கை,மானாமதுரை,விருதுநகர்,மதுரை உள்ளிட்ட சுற்றுவட்ட ஊர்களைச் சேர்ந்த திரளான பொதுமக்கள் விழாவில் நேரில் கலந்து கொண்டனர்.

2.அரசு நெல் கொள்முதல் நிலையம் தொடங்கப்படாததால் விவசாயிகள் அவதி

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு தாலுகாவிற்கு உட்பட்ட வத்திராயிருப்பு, கூமாபட்டி. கான்சாபுரம், மகாராஜபுரம், சுந்தரபாண்டியம் உள்ளிட்ட பகுதிகளில் கோடை கால நெல் சாகுபடி செய்து கடந்த ஒரு வார காலத்திற்கு மேலாக அறுவடை பணியினை விவசாயிகள் தொடங்கியுள்ளனர்.

377

இப்பகுதியில் அரசு நெல் கொள்முதல் நிலையம் தொடங்கப்படாததால் விவசாயிகள் அறுவடை செய்யப்படும் நெற்பயிர்களை தனியார் வியாபாரிகளிடம் விற்பனை செய்து வருவதாக கூறுகின்றனர்.

இது குறித்து இப்பகுதியில் உள்ள விவசாயிகள் கூறும்போது,

வத்திராயிருப்பு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கிராம பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் கோடை கால நெல் சாகுபடி செய்து தற்போது கடந்த ஒரு வார காலமாக அறுவடை பணியை தொடங்கியுள்ளோம்.இப்பகுதியில் அறுவடை தொடங்கிய உடனே அரசு நெல் கொள்முதல் நிலையம் செயல்பட வேண்டும் என கோரிக்கை விடுத்தும் தற்போது வரை அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.

இப்பகுதியில் அரசு நெல் கொள்முதல் நிலையம் இல்லாததால் அறுவடை செய்யப்படும் நெற்பயிர்களை தனியார் வியாபாரிகளிடம் குறைந்த விலைக்கு விற்பனை செய்து வருகிறோம்.அரசு நெல் கொள்முதல் நிலையம் இல்லாததால் வியாபாரிகள் கேட்கும் விலைக்கே நாங்கள் நெற்பயிர்களை விற்பனை செய்வதால் போதிய லாபத்தினை அடைய முடியவில்லை.

எனவே இப்பகுதி விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு உடனடியாக வத்திராயிருப்பு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு அரசு நெல் கொள்முதல் நிலையத்தை அமைத்து திறக்க வேண்டும் என்பதே எங்களின் விருப்பம் என்று இப்பகுதி விவசாயிகள் தெரிவித்தனர்.

3. இளம்பெண் கடத்தல்-பெண்ணின் தாய் போலீசில் புகார்

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள மாங்கு ளத்தைச் சேர்ந்தவர் மல்லிகார்ஜூனன். இவரது மனைவி பாண்டிச்செல்வி. இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர். மூத்த மகளுக்கு திருமணமாகி விட்டது. 2-வது மகள் அதே பகுதியில் உள்ள மில்லில் வேலை பார்த்து வருகிறார்.

சம்பவத்தன்று மல்லிகார்ஜூனன்- பாண்டிச்செல்வி ஆகியோர் 2-வது மகளுடன் வெளியே புறப்பட்டுச் சென்றனர். மாங்குளம் கண்மாய் பகுதியில் சென்றபோது அதே ஊரைச் சேர்ந்த குருசாமி மகன் மாரிச்செல்வம் என்பவர் மோட்டார் சைக்கிளில் வந்து மல்லிகார்ஜூனனின் 2-வது மகளை கடத்திச் சென்றார். இதனை தடுக்க முயன்றும் பலனில்லை.

இதுகுறித்து பாண்டிச்செல்வி கொடுத்த புகாரின் பேரில் எம்.ரெட்டியபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து இளம்பெண்ணையும், அவரை கடத்திச் சென்ற மாரிச்செல்வத்தையும் தேடி வருகின்றனர்.

4. ராஜபாளையம்-தென்காசி இணைப்பு சாலை விரிவாக்க பணியை எம்.எல்.ஏ. ஆய்வு

சங்கரன்கோவில் ரோடு ராஜபாளையம் புதிய பேருந்து நிலையம் முதல் தென்காசி ரோடு சக்தி கண் மருத்துவமனை எதிர்புறம் வரையிலான இணைப்புசாலை அமைய இருக்கும் இடத்தை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கோட்ட பொறியாளர் மற்றும் உதவி கோட்ட பொறியாளர் ஆகியோர் முன்னிலையில் தங்கபாண்டியன்எம்.எல்.ஏ நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது தனி டி.ஆர்.ஓ. மற்றும் தனி தாசில்தார் உட்பட பலர் உடன் இருந்தனர். 30 மீட்டர் அகலத்தில் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு இடம் கையகபடுத்தி 10.50 மீட்டர் அகலத்தில் சாலை அமைத்து,பொது மக்கள் அச்சமின்றி இரவு நேரங்களில் வந்து செல்வதற்கு வசதியாக சாலையின் இருபுறமும் மின் விளக்குகள் அமைத்து விரிவான திட்ட மதிப்பீடு தயார் செய்து பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.அதிகாரிகளும் விரைந்து பணியை முடிப்பதாக உறுதி அளித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் நகர செயலாளர்கள் ராமமூர்த்தி, மணிகண்டராஜா, பொதுக்குழு உறுப்பினர் கனகராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

5.  ஆண்களுக்கான நவீன குடும்ப நல கருத்தடை சிகிச்சை சிறப்பு முகாம்

பெண்களுக்கு செய்யும் குடும்ப நல கருத்தடை அறுவை சிகிச்சையை விட ஆண்களுக்கான கருத்தடை சிகிச்சை மிக எளிமையானது, மிகவும் பாதுகாப்பானது, பயப்பட தேவையில்லை, மயக்கு மருந்து கொடுப்பதில்லை

5 நிமிடங்களில் செய்யப்படுகிறது.

அறுவை சிகிச்சை கிடையாது, தையல் போடுவது கிடையாது.

மருத்துவமனையில் தங்க வேண்டியது இல்லை. சிகிச்சை முடிந்த உடன் வீடு திரும்பலாம். குழந்தை பிறப்பிற்கு மட்டுமே தடை. இல்லற இன்பத்திற்கு எவ்வித தடையும் கிடையாது. எப்போதும் போல் இல்லற உறவு கொள்ளலாம்.

அரசு தரும் தொகை ரூ.1100 வழங்கப்படும், ஊக்குவிப்பாளருக்கு ரூ.200-ம் உடன் வழங்கப்படும். மாவட்ட கலெக்டரால் வழங்கப்படும் ரூ.4 ஆயிரம் பயனாளிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். ஆகை யால் முகாமிற்கு வரக்கூடிய நபர்கள் அனைவரும் தங்களது அல்லது தங்கள் மனைவி வங்கி கணக்கு புத்தகத்தின் நகல்களை கொண்டு வர வேண்டும்.

மேற்கண்ட தகவலை மாவட்ட கலெக்டர் மேகநாத ரெட்டி தெரிவித்துள்ளார்.

6. போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு மின்வாரிய ஊழியர்கள் போராட்டம்

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு மின்வாரிய அலுவலகத்தில் மின் கணக்கீட்டாளராக பணியாற்றி வருபவர் நிர்மல் பிரபாகரன். இவர் நேற்று முன்தினம் வ.புதுப்பட்டி பகுதியில் மின் கணக்கீடு செய்து கொண்டிருந்த போது வ.புதுப்பட்டியில் இருந்து கான்சாபுரம் செல்லும் சாலையில் உள்ள போலீஸ்காரர் வேலுச்சாமி வீட்டிலும் மின் கணக்கீடு செய்ய சென்றுள்ளார்.

அவரது வீடு 3 நாட்களாக பூட்டி இருந்ததாகவும் ,அதனால் கணக்கீடு செய்ய முடியாமல் திரும்பி சென்றதாகவும், போலீஸ்காரர் வேலுச்சாமியிடம் நிர்மல் பிரபாகரன் தெரிவித்துள்ளார். அப்போது வேலுச்சாமி, மின் கணக்கீட்டாளர் நிர்மல் பிரபாகரனை அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது .

இந்த நிலையில் வேலுச்சாமி மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி 50-க்கும் மேற்பட்ட மின்வாரிய ஊழியர்கள் வத்திராயிருப்பு போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உடனே போலீசார் அவர்களை சமாதானம் செய்து சம்மந்தப்பட போலீஸ்காரர் மீது உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதைத்தொடர்ந்து மின்வாரிய ஊழியர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

7. 2 பேர் விஷம் குடித்து தற்கொலை

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள பாட்டக்குளத்தைச் சேர்ந்தவர் முத்துராஜ் (61). மது பழக்கத்துக்கு அடிமையான இவரை குடும்பத்தினர் கண்டித்துள்ளனர். சம்பவத்தன்று வாழ்க்கையில் விரக்தியடைந்த முத்துராஜ் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

விருதுநகர் அருகே உள்ள வி.சுந்தரலிங்காபுரத்தைச் சேர்ந்தவர் பெருமாள்சாமி (47). சில மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட விபத்தில் பெருமாள்சாமி கால் முறிந்து ஆபரேசன் செய்யப்பட்டது. ஆனால் இயல்பு நிலைக்கு திரும்ப முடியவில்லை. இதில் விரக்தியடைந்த பெருமாள்சாமி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

8. சிவகாசி சாத்தூர் பட்டாசு ஆலைகளில்

சிபிஐ அதிகாரிகள் தீவிர விசாரணை

விருதுநகர் மாவட்டத்தில் 950-க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த ஆலைகளில் உற்பத்தி செய்யப்படும் பட்டாசுகள் தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கும் அனுப்பப்பட்டு வருகிறது. பட்டாசு வெடிப்பதால் காற்றில் மாசு ஏற்படுவதாக தொடரப்பட்ட வழக்கில் பட்டாசு உற்பத்தியாளர்கள் பசுமை பட்டாசுகளை மட்டுமே தயாரிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து சிவகாசி, சாத்தூர் அருகே தாயில்பட்டி மற்றும் வெம்பக்கோட்டை பகுதிகளில் செயல்பட்டு வரும் பட்டாசு ஆலைகளில் சுப்ரீம் கோர்ட்டு அறிவுரையின்படி பட்டாசு தயாரிக்கப்படுகிறதா? என சி.பி.ஐ. அதிகாரிகள் 3 நாட்களாக தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

சமீபத்தில் வெடிப்பொருட்கள் கட்டுப்பாட்டு அலுவலர் தியாகராஜன் நடத்திய சோதனையில் தடைசெய்யப்பட்ட பட்டாசுகள் மற்றும் சரவெடி தயாரிக்கப்படுவதை கண்டுபிடித்து இதுபற்றி தலைமை அலுவகத்திற்கு தகவல் தெரிவித்தார். இதை தொடர்ந்து சுப்ரீம் கோர்ட்டு சி.பி.ஐ. அதிகாரிகள் பட்டாசு ஆலைகளில் நேரடியாக சோதனை நடத்தி உண்மை நிலையை கண்டறிய வேண்டும் என்று உத்தரவிட்டது.

அதன் அடிப்படையில் வெடிப்பொருட்கள் கட்டுப்பாட்டு அலுவலர் தியாகராஜன் தலைமையில் சி.பி.ஐ. அதிகாரிகள் கடந்த 17-ந்தேதி முதல் ஆய்வு நடத்தி வருகின்றனர். முதல்கட்டமாக பட்டாசு விற்பனை நிலையங்களில் பட்டாசுகளை பார்வையிட்டு பாதுகாப்பான பட்டாசுகளை தயாரிக்காத நிறுவனங்கள் முகவரிகளை தெரிந்து கொண்டு நேற்று சம்மந்தப்பட்ட பட்டாசு ஆலைகளில் ஆய்வு நடத்தினர்.

இன்று 3-வது நாளாக சாத்தூர் மற்றும் சிவகாசி பகுதிகளில் செயல்பட்டு வரும் பட்டாசு ஆலைகளை சி.பி.ஐ. அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு பேரியம் நைட்ரேட் (பச்சை உப்பு) பயன்படுத்தாமல் பாதுகாப்பான முறையில் பசுமை பட்டாசுகள் தயாரிக்கப்படுகிறதா? அல்லது கோர்ட்டு உத்தரவை பின்பற்றாமல் பட்டாசுகள் தயாரிக்கப்படுகிறதா? என்று ஆய்வு செய்தனர்.

அப்போது பட்டாசு ஆலை உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்களிடம் பல்வேறு ஆலோசனைகளை வழங்கி காற்றில் மாசு ஏற்படாத வகையிலான பட்டாசுகள் மட்டுமே தயாரிக்கப்பட வேண்டும். அதனை கடைபிடிக்க தவறினால் உரிமம் ரத்து செய்யப்படும் என்று எச்சரிக்கை விடுத்தனர். இந்த ஆய்வு நாளை (20-ந்தேதி) வரை தொடர்ந்து நடைபெறும் என்றும் சி.பி.ஐ. அதிகாரிகள் தெரிவித்தனர். இதுபற்றி அறிந்த சில பட்டாசு ஆலை உரிமையாளர்கள் தங்களது பட்டாசு ஆலைகளை பூட்டி வைத்துள்ளனர். அவைகள் குறித்தும் சி.பி.ஐ. அதிகாரிகள் கணக்கெடுப்பு நடத்தி வருகின்றனர். சி.பி.ஐ. அதிகாரிகளின் இந்த அதிரடி நடவடிக்கை பட்டாசு ஆலை உரிமையாளர்களை கலக்கமடைய வைத்துள்ளது.

9. அரசின் விதிகளை மீறி ஆண் குழந்தையை தத்தெடுத்து வளர்த்த தம்பதி மீது வழக்கு

விருதுநகர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலகத்திற்கு கடந்த 17-ம் தேதி தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர் ராஜபாளையம் வடக்கு மலையடிப்பட்டி பகுதியில் ஒரு தம்பதியினர் சட்டவிரோதமாக குழந்தையை தத்து எடுத்து வளர்த்து வருவதாக தெரிவித்தார்.

இதையடுத்து பாதுகாப்பு நல அலுவலர் முனியசாமி சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார். அப்போது ராஜபாளையம் அருகே உள்ள வடக்கு மலையடிப்பட்டி முருகன் கோவில் தெருவைச் சேர்ந்த பரமசிவன் என்ற பரமன், அவரது மனைவி செல்வி ஆகியோர் 10 மாத ஆண் குழந்தையை சட்டவிரோதமாக தத்தெடுத்து வளர்த்து வந்தது தெரியவந்தது.

10 மாதங்களுக்கு முன்பு ஒரு நபர் பிறந்த ஏழு நாட்கள் ஆன குழந்தையை தங்களிடம் கொடுத்துவிட்டு சென்றதாகவும், அவர் குறித்த விவரங்கள் தெரியாது எனவும் தம்பதியினர் தெரிவித்தனர். மேலும் குழந்தைக்கு கோபி ராஜ் என பெயரிட்டு தம்பதியினர் வளர்த்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் அந்த தம்பதிகளிடமிருந்து 10 மாத குழந்தை மீட்கப்பட்டு அரசு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டது. அரசின் விதிகளை பின்பற்றாமல் ஆண் குழந்தையை சட்டம் விரோதமாக வளர்த்து வந்த பரமசிவன், செல்வி ஆகியோர் மீது ராஜபாளையம் குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதனைத் தொடர்ந்து கோர்ட்டு உத்தரவின்படி கணவன், மனைவி மீது ராஜபாளையம் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

செய்தியாளர்: அ. மணிகண்டன், விருதுநகர்

Tags:Virudhunagar