Home / News / virudhunagar /

திருச்சுழி அருகே அம்மன்பட்டியில் களைகட்டிய வடமாடு மஞ்சுவிரட்டு..!!

திருச்சுழி அருகே அம்மன்பட்டியில் களைகட்டிய வடமாடு மஞ்சுவிரட்டு..!!

Virudhunagar District: திருச்சுழி அருகே உள்ள அம்மன்பட்டியில் ஸ்ரீகாளியம்மன் கோயிலின் வைகாசி பொங்கல் திருவிழாவை முன்னிட்டு மஞ்சுவிரட்டு விழா நடைபெற்றது.

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே அம்மன்பட்டி கிராமத்திலுள்ள ஸ்ரீகாளியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு மஞ்சுவிரட்டு விழா நடைபெற்றது. வடமாடு மஞ்சுவிரட்டு போட்டியில் காளைகளை அடக்கிய வீரர்களுக்கு பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

திருச்சுழி அருகே உள்ள அம்மன்பட்டியில் ஸ்ரீகாளியம்மன் கோயிலின் வைகாசி பொங்கல் திருவிழா கடந்த செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதையடுத்து மறுநாள் பக்தர்கள் அம்மனுக்குப் பொங்கல்வைத்து வழிபட்டனர். இதன்தொடர்ச்சியாக வியாழக்கிழமை சிறப்பு நிகழ்ச்சியாக வடமாடு மஞ்சுவிரட்டு விழா நடைபெற்றது.

சுமார் 50 அடி விட்டம் உள்ள ஒரு பெரிய வட்டத்திற்குள் (எல்லைக்கோடு )  காளையானது, சுமார் 25 அடி நீள கயிற்றால் கட்டப்பட்டிருக்கும். அதை அடக்குவதற்கு காளையர்கள் அடங்கிய ஒரு குழு அனுப்பப்படும். அக்குழுவிற்கு 9 பேர் எனும் வகையில் இடம்பெறும் மாடுபிடி வீரர்கள், களத்தில் இறங்கி மாட்டை அடக்கப் போராடுவார்கள். இதுவே வடமாடு மஞ்சுவிரட்டு ஆகும்.

உங்கள் நகரத்திலிருந்து (Virudhunagar)

அழிவின் விளிம்பில் சைக்கிள் பழுது பார்க்கும் தொழில் - தொழிலாளிகளின் துயரம்..

டாஸ்மாக் கடையில் ரூ.20,000 மதிப்புள்ள மது பாட்டில்கள், பணம் கொள்ளை- விருதுநகரில் அதிர்ச்சி

விருதுநகரில் தொடர் கனமழை, பலத்த சூறாவளியால் வாழை மரங்கள் நாசம் - விவசாயிகள் கவலை

மாணவியிடம் வீடியோவில் நிர்வாணமாக பேசிய சேர்மன் - நர்சிங் கல்லூரி மாணவிகள் போராட்டம்

அருப்புக்கோட்டை செல்வ விநாயகர் திருக்கோயில் மகா கும்பாபிஷேக விழா!

4,000 ஆண்டுகள் பழமையான இரும்பு உருக்கு உலை - ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கண்டுபிடிப்பு

உதவியை எதிர்பார்த்து காத்திருக்கும் சலவைத் தொழிலாளர்கள் - மாவட்ட நிர்வாகம் கருணை காட்டுமா?

விருதுநகர் மாவட்டத்தில் நாளை (ஜூன் 16) எந்தெந்த பகுதிகளில் மின்தடை? - முழு விவரம்

250 ஆண்டு பழமையான மாதா கோயில்... சமய பாகுபாடின்றி, பொங்கல் வைத்து கொண்டாடும் மக்கள்..

விருதுநகர் மாவட்டத்தின் முக்கிய நகரின் பல்வேறு பகுதியில் நாளை (ஜூன் 15) மின்தடை அறிவிப்பு

தேசிய அளவிலான யோகா போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற விருதுநகர் மாணவர்கள்..

இந்த ஆண்டு இத்திருவிழாவில் மொத்தம் 14 காளைகளும், 10 மாடுபிடிவீரர் குழுக்களும் பங்கேற்றனர். வீரர்கள் களம்கண்டபோது, சுற்றிலும் திரண்டிருந்த பொதுமக்கள் விசிலடித்தும் கரவொலி எழுப்பியும் அவர்களை உற்சாகப்படுத்தினர்.போட்டிகளில் வெற்றிபெற்ற மாடுபிடி வீர்கள் மற்றும் மாடுகளுக்கும் சிறப்புப் பரிசுகளாக கட்டில்,சேர்,ரொக்கப் பரிசுப்பணம், ஆகியன வழங்கப்பட்டன.

உடன் இவ்விழாவில், மாவட்ட காவல்கண்காணிப்பாளர் மனோகரன், அருப்புக்கோட்டை கோட்டாட்சியர் கல்யாணக்குமார்,திருச்சுழி வட்டாட்சியர் சிவக்குமார்,அருப்புக்கோட்டை டிஎஸ்பி சகாயஜோஸ் உள்ளிட்ட அதிகாரிகளும், நேரில் கலந்து கொண்டனர். சுமார் 50க்கு மேற்பட்ட போலீசார் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டனர்.

சிவகங்கை, மானாமதுரை, விருதுநகர், மதுரை உள்ளிட்ட சுற்றுவட்ட ஊர்களைச் சேர்ந்த திரளான பொதுமக்கள் விழாவில் நேரில் கலந்து கொண்டனர்.

செய்தியாளர்: அ. மணிகண்டன், விருதுநகர்

Tags:Jallikattu, Virudhunagar