Home / News / virudhunagar /

பயிர்க் காப்பீட்டுத் தொகை வழங்க விவசாயிகள் கோரிக்கை

பயிர்க் காப்பீட்டுத் தொகை வழங்க விவசாயிகள் கோரிக்கை

பயிர்க்காப்பீடு முறையாக விவசாயிகளுக்கு வழங்க மறுக்கும் தோட்டக்கலை மற்றும் விவசாய வேளாண் துறை அதிகாரிகளை கண்டித்து மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே வெம்பக்கோட்டை சுற்று வட்டார பகுதியை சேர்ந்த 30க்கும் மேற்பட்ட கிராம விவசாயிகள் அமெரிக்கன் படைப்புழு தாக்குதல் காரணமாக சேதமடைந்த மக்காச் சோளம் சூரியகாந்தி பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கக்கோரி விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகிலுள்ள வெம்பக்கோட்டை சுமார் 48 பஞ்சாயத்துக்களை உள்ளடக்கியது. விஞ்ஞான கிராமங்களையும் விவசாயிகள் பகுதிகளையும் கொண்ட பகுதியாகும் இந்தநிலையில் கடந்த வருடத்தில் அறுவடை செய்யவேண்டிய நேரத்தில் மழை பெய்து வீணாகிப்போன பயிருக்கும் அமெரிக்கன் படைபுழு தாக்கி சேதம் அடைந்த மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்களுக்கும் சூரியகாந்தி உள்ளிட்ட பயிர்களுக்கும் உரிய இழப்பீடு கேட்டு பலமுறை தோட்டக்கலைத் துறை மற்றும் வேளாண்துறை புகார் அளித்தும் மனு கொடுத்தும் எவ்வித பயனும் இல்லாததாலும் பயிர்க்காப்பீடு முறையாக விவசாயிகளுக்கு வழங்க மறுக்கும் தோட்டக்கலை மற்றும் விவசாய வேளாண் துறை அதிகாரிகளை கண்டித்து மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது.

எனினும் இது வரை பயிர் காப்பீடு வழங்க தமிழக அரசை கண்டித்து இன்று பல்வேறு விவசாய சங்கங்கள் சார்பில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். விவசாயிகளிடம் சாத்தூர் டிஎஸ்பி நாகராஜ் வெம்பக்கோட்டை இன்ஸ்பெக்டர் சுந்தரபாண்டியன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

உங்கள் நகரத்திலிருந்து (Virudhunagar)

விருதுநகரில் தொடர் கனமழை, பலத்த சூறாவளியால் வாழை மரங்கள் நாசம் - விவசாயிகள் கவலை

விருதுநகர் மாவட்டத்தில் நாளை (ஜூன் 16) எந்தெந்த பகுதிகளில் மின்தடை? - முழு விவரம்

டாஸ்மாக் கடையில் ரூ.20,000 மதிப்புள்ள மது பாட்டில்கள், பணம் கொள்ளை- விருதுநகரில் அதிர்ச்சி

அருப்புக்கோட்டை செல்வ விநாயகர் திருக்கோயில் மகா கும்பாபிஷேக விழா!

உதவியை எதிர்பார்த்து காத்திருக்கும் சலவைத் தொழிலாளர்கள் - மாவட்ட நிர்வாகம் கருணை காட்டுமா?

அழிவின் விளிம்பில் சைக்கிள் பழுது பார்க்கும் தொழில் - தொழிலாளிகளின் துயரம்..

தேசிய அளவிலான யோகா போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற விருதுநகர் மாணவர்கள்..

மாணவியிடம் வீடியோவில் நிர்வாணமாக பேசிய சேர்மன் - நர்சிங் கல்லூரி மாணவிகள் போராட்டம்

4,000 ஆண்டுகள் பழமையான இரும்பு உருக்கு உலை - ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கண்டுபிடிப்பு

250 ஆண்டு பழமையான மாதா கோயில்... சமய பாகுபாடின்றி, பொங்கல் வைத்து கொண்டாடும் மக்கள்..

விருதுநகர் மாவட்டத்தின் முக்கிய நகரின் பல்வேறு பகுதியில் நாளை (ஜூன் 15) மின்தடை அறிவிப்பு

பேச்சுவார்த்தைக்கு பின்னர் சாலை மறியலை கைவிட்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் 10 நாட்களுக்குள் வெம்பக்கோட்டை சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த 30 கிராமங்களுக்கு மக்காச்சோளம்பயிர் கடன் முழுமையாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லாவிட்டால் மீண்டும் சாலை மறியலில் ஈடுபடுவோம் விருதுநகர் மாவட்டத்திற்கு வருகை தரும் தமிழக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கருப்பு கொடி காட்டி தொடர் போராட்டம் நடைபெறும் என விவசாய சங்கத்தினர் தெரிவித்தனர்.

செய்தியாளர்:அ. மணிகண்டன், விருதுநகர்

Tags:Virudhunagar