PREVNEXT
முகப்பு / செய்தி / விழுப்புரம் / அதிமுக கிளை செயலாளரை வீடுபுகுந்து கண்மூடித்தனமாக தாக்கிய அதிமுக ஒன்றிய செயலாளர்!

அதிமுக கிளை செயலாளரை வீடுபுகுந்து கண்மூடித்தனமாக தாக்கிய அதிமுக ஒன்றிய செயலாளர்!

கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு சத்துணவு உதவியாளர் வேலை கேட்டு ஒரு லட்சம் ரூபாய் பணம் கொடுத்துள்ளார்.

முதல் படம் அதிமுக ஒன்றிய செயலாளர் பேட்டை முருகன்

முதல் படம் அதிமுக ஒன்றிய செயலாளர் பேட்டை முருகன்

விழுப்புரம் அருகே வேலை வாங்கி தறுவதாகக்கூறி பணம் வாங்கி ஏமாற்றியதை திருப்பி கேட்டவரை வீடு புகுந்து அதிமுக ஒன்றிய செயலாளர் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் கோலியனூர் நல்லரசன் பேட்டை பகுதியை சேர்ந்தவர் உதயசூரியன் இவர் அப்பகுதி அதிமுக கிளைக்கழக செயலாளராக உள்ளார். இவர் கோலியனூர் அதிமுக ஒன்றிய செயலாளராகவும், தற்போது ஆவின் நிறுவனத்தின் தலைவராகவும் உள்ள பேட்டை முருகன் என்பவரிடன் கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு சத்துணவு உதவியாளர் வேலை கேட்டு ஒரு லட்சம் ரூபாய் பணம் கொடுத்துள்ளார். இதனையடுத்து திமுக ஆட்சிக்கு வந்த நிலையில் அவருக்கு வேலை கிடைக்கவில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில் தொடர்ந்து உதயசூரியன் அதிமுக ஒன்றிய செயலாளர் பேட்டை முருகனிடம் தொடர்ந்து பணம் கேட்டு வந்ததால் வாங்கிய பணத்தை திருப்பி தர முடியாத என கிளை செயலாளர் உதயசூரியனிடம் ஒன்றிய செயலாளர் பேட்டை முருகன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். அதனை தொடர்ந்து நேற்று இரண்டு உதயசூரின் மற்றும அவரது குடும்பத்தினர் வீட்டில் உணவருந்திக்கொண்டிருந்தபோது அங்கு அடியாட்களுடன் வந்த அதிமுக ஒன்றிய செயலாளர் பேட்டை முருகன் சண்டையிட்டுள்ளார் அப்போது திடீர் என கத்தி, கடப்பாறை, மண்வெட்டி உள்ளிட்ட ஆயுதங்களால் உதயசூரியன் மற்றும் அவரது குடும்பத்தினரை கண்மூடித்தனமாக தாக்க தொடங்கியுள்ளனர்.

உங்கள் நகரத்திலிருந்து (விழுப்புரம்)

மாற்றுத்திறனாளிகளுக்கு சுய தொழில்.. விழுப்புரத்தில் எளியமுறையில் செய்முறை பயிற்சி!

மரக்காணம் அருகே ரூ.25 கோடியில் பறவைகள் சரணாலயம்.. மகிழ்ச்சியில் விழுப்புரம் மக்கள்!

ரேஷன் கடைகளில் ஏப்ரல் 1 முதல் செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகம் - பொதுமக்களுக்கு விழுப்புரம் ஆட்சியர் விழிப்புணர்வு..

சிறுவர்களுக்கு பிடித்த பாட்ஷா பாய் பெட் ஷாப்.. எங்கு இருக்கு தெரியுமா?

விழுப்புரத்தில் 100 அரங்குகள் கொண்ட மாபெரும் புத்தக திருவிழா!

விழுப்புரத்தில் பெய்த திடீர் ஆலங்கட்டி மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி

ஆதரவற்ற குழந்தைகளை வளர்க்க விரும்புவோர் விண்ணப்பிக்கலாம் - விழுப்புரம் கலெக்டர் அறிவிப்பு!

இ-சேவை மையம் நடத்த ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் - விழுப்புரம் ஆட்சியர் அறிவிப்பு

ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட புதிய அஞ்சலக வங்கி கணக்கை தொடங்குவது எப்படி? - விழுப்புரம் கலெக்டர் விளக்கம்

தென்பேர் கிராமசபை கூட்ட தீர்மானத்தை ஏற்று டாஸ்மாக் கடையை இடமாற்றுவதாக உறுதியளித்த விழுப்புரம் ஆட்சியர்..

கோடை வெயிலால் எலுமிச்சை விலை அதிகரிப்பு.. விழுப்புரம் விவசாயிகள் மகிழ்ச்சி!

இதில் அதிமுக கிளை கழக செயலாளர் உதயசூரியன், அவருடைய மகன்கள் சதீஷ்குமார், சரத்குமார் மற்றும் இரண்டு பெண்களையும் தாக்கியுள்ளனர். இதனால் அப்பகுதியே போர்க்கலம் போல காட்சி அளித்தது. இந்த தாக்குதலில் உதயசூரியன், சதீஷ்குமார், சரத்குமார் மூவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டு மூவரும் விழுப்புரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள வளவனூர் காவல்துறையினர் தாக்குதலில் ஈடுபட்ட கோலியனூர் அதிமுக ஒன்றிய செயலாளர் பேட்டை முருகன் மற்றும் அவரது கூட்டாளிகளை தேடி வருகின்றனர்.

Tags:Crime News, Local News, Villupuram

முக்கிய செய்திகள்