PREVNEXT
ஹோம் / நியூஸ் / விழுப்புரம் /

’நான் தற்கொலை செய்யவில்லை; கணவரே தீ வைத்து எரித்தார்’ - இளம்பெண் மரண வாக்குமூலத்தில் வெளிவந்த பகீர் தகவல்!

’நான் தற்கொலை செய்யவில்லை; கணவரே தீ வைத்து எரித்தார்’ - இளம்பெண் மரண வாக்குமூலத்தில் வெளிவந்த பகீர் தகவல்!

Viluppuram News : விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் அருகே காதல் மனைவிக்கு தீ வைத்த கொடூர கணவன் பெற்ற குழந்தைகளுக்கும் தீ வைத்துவிடுவதாக மிரட்டியதால் பரபரப்பு

மனைவியை கொலை செய்த கணவன்

மனைவியை கொலை செய்த கணவன்

விழுப்புரம் மாவட்டம் காணை அருகே உள்ள ஆசாரங்குப்பம் கிராமத்தை சேர்ந்த சக்திவேல் என்பவரின் மகள் சங்கீதா (24). இவர் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு கண்டமங்கலம் அருகே உள்ள வழுதாவூரை சேர்ந்த லாரி ஓட்டுநரான முத்துக்குமரன் என்பவரை காதலித்து தனது வீட்டாரின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

முத்துக்குமரனை திருமணம் செய்து கொண்ட சங்கீதாவிற்கு தற்போது 5 வயதில் தேவஸ்ரீ என்ற மகளும், 4 வயது லோகேஷ், 1 1/2 வயது தேஷ் ஆகிய இரண்டு மகன்கள் என மூன்று குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில், கடந்த 5ம் தேதி வழுதாவூரில் உள்ள தனது வீட்டில் இருந்து தீக்காயங்களுடன் சங்கீதா மீட்கப்பட்டு, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

உங்கள் நகரத்திலிருந்து (விழுப்புரம்)

ஒன்றரை வயது குழந்தை உட்பட 2 பேரின் உயிரை காவு வாங்கிய கோர விபத்து.. விழுப்புரத்தில் சோகம்!

பிறந்து 50 நாட்களே ஆன குழந்தை கிணற்றில் வீசி கொலை.. இளம்பெண் விபரீத முடிவு - வரதட்சணை கொடுமையா? போலீஸ் விசாரணை

விழுப்புரத்தில் விமரிசையாக கொண்டாடப்பட்ட அழகு நாச்சியம்மன் கோயில் திருவிழா

தமிழ் மொழியில் எழுத, படிக்க தெரிந்தால்போதும்.. விழுப்புரம் தொழிலாளர் உதவி ஆணையர் சொன்ன தகவல்..

“உன் கல்யாணத்துக்காக ரெடி பண்ண ஸ்பெஷல் கிஃப்ட்..!” - மாப்பிள்ளைக்கு நண்பர்கள் கொடுத்த வித்தியாசமான அன்பளிப்பு

கடலோர காவல்படையில் சேர இலவச பயிற்சி வகுப்பு - விழுப்புரம் மாவட்ட மீனவர்களின் வாரிசுகள் விண்ணப்பிக்கலாம்

விழுப்புரத்தில் ஆசிரியருக்கு அரிவாள் வெட்டு.. பள்ளி வளாகத்தில் பகீர் சம்பவம்

கள்ளக்குறிச்சி மாணவியின் செல்போன் விழுப்புரம் நீதிமன்றத்தில் ஒப்படைப்பு

வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் - விழுப்புரம் கலெக்டர் அறிவிப்பு

தென்பெண்ணை ஆற்று திருவிழாவை கொண்டாட விழுப்புரத்தில் குவிந்த 3 மாவட்ட மக்கள்

விதை விற்பனை - விழுப்புரம் மாவட்ட கலெக்டர் விடுத்துள்ள முக்கிய எச்சரிக்கை

தீக்காயம் அடைந்தது தொடர்பாக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு நேரில் சென்று அங்கு சிகிச்சை பெற்று வந்த சங்கீதாவிடம் கண்டமங்கலம் போலீசார் மற்றும் வானூர் நீதிமன்ற நீதிபதி ஆகியோர் விசாரணை நடத்தினர்.

இதையும் படிங்க : சிறையில் உள்ள கிஷோர் கே சுவாமி மீண்டும் கைது.!

 அப்போது கேஸ் ஸ்டவ் வெடித்து ஏற்பட்ட தீ விபத்தில் காயமடைந்ததாக சங்கீதா வாக்குமூலம் அளித்திருந்தார். இதனால் தற்கொலை முயற்சி என கண்டமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.

இந்நிலையில், கடந்த 20 நாட்களுக்கும் மேலாக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சங்கீதா நேற்று (27ம் தேதி) காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதனிடயே தான் உயிரிழப்பதற்கு முன்பாக தனது செல்போனில் சங்கீதா பேசி பதிவிட்ட வீடியோ தற்போது வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சங்கீதா பேசியுள்ள அந்த வீடியோ பதிவில், “அம்மாவிடம் சென்று பணம் வாங்கி வா” என எனது கணவர் அடிக்கடி அடித்து துன்புறுத்தி வந்ததால் மனவேதனை அடைந்து மண்ணெண்ணெய்யை எடுத்து உடலில் ஊற்றுவது போல நடித்தேன்.

377

அப்போது எனது கணவர் பின்னால் இருந்து மண்ணெண்ணெய் கேனை பிடுங்கி என் மீது ஊற்றி தீ வைத்துவிட்டார். பிறகு அங்கிருந்த தண்ணீரில் தள்ளிவிட்டுவிட்டார். நான் உண்மையை சொன்னால், “உன்னை தீ வைத்து கொளுத்தியது போல, பசங்களையும் தீ வைத்து கொளுத்தி விடுவேன்” என மிரட்டினார்.

இதனால் நான் பயந்து  நீதிபதி, போலீசார், டாக்டர், என் வீட்டார் என எல்லோர் கிட்டயும் பொய் சொன்னேன். இது தான் நடந்த உண்மை என கூறியிருந்தார். புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் மரண படுக்கையில் இருந்தபடியே சங்கீதா பேசி தனது செல்போனில் பதிவிட்ட வீடியோ தற்போது வெளியாகி பலரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

இதன் பிறகே காதலித்து கரம்பிடித்த மனைவியின் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்த கொடூர கணவனின் உண்மை முகம் சுமார் 20 நாட்களுக்கு பிறகு வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்த வீடியோ வெளியான பிறகு சங்கீதாவின் கணவரான முத்துகுமரன் தலைமறைவாகி விட்டதாக கூறப்படுகிறது.

தற்போது உயிரிழந்த சங்கீதாவின் உடல் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் உள்ள பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது. இன்று பிற்பகலில் சங்கீதாவின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு, மாலையில் சங்கீதாவின் சொந்த ஊரான ஆசாரங்குப்பம் கிராமத்தில் தகனம் செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

கூலி தொழிலாளி மகள் 'மிஸ் தமிழ்நாடு’ பட்டம் வென்றது எப்படி?

விபத்து வழக்காக பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில் தற்போது மரணப்படுக்கையில் சங்கீதா வெளியிட்டுள்ள வீடியோ ஆதாரத்தை கொண்டு சங்கீதாவின் உறவினர்கள் கொலை வழக்காக பதிவு செய்து சங்கீதாவின் கணவர் முத்துக்குமரன் மீது நடவடிக்கை எடுக்க கோரி கண்டமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

ஆனால் இதுவரை கண்டமங்கலம் போலீசார் கொலை வழக்காக மாற்றம் செய்யாமல் மெத்தனப் போக்குடன் இருந்து வருவது பல்வேறு தரப்பினரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

சங்கீதாவிற்கு நடந்தைப் போன்ற சம்பவம் இனி எந்த ஒரு பெண்ணுக்கும் நடக்க கூடாது என்றும், தீ வைத்த சங்கீதாவின் கணவர் மீது உரிய நடவடிக்கை எடுத்து சிறையில் அடைக்க வேண்டும் என்றும் அனாதையாக்கப்பட்டுள்ள சங்கீதாவின் மூன்று குழந்தைகளுக்கும் அரசு உதவிட வேண்டும் என்றும் சங்கீதாவின் உறவினர்கள் கண்ணீர் மல்க கோரிக்கை வைத்துள்ளனர்.

இதையும் படிங்க : பாத்ரூமுக்குள் சென்று விளையாடிய ஒன்றரை வயது குழந்தை.. வாளி நீரில் மூழ்கி பரிதாப பலி!

வரதட்சணைக் கொடுமையால் தாயும் இன்றி, தந்தையும் கொலை குற்றவாளியாகி மூன்று குழந்தைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது.

செய்தியாளர் : குணாநிதி - விழுப்புரம்

Tags:Crime News, Local News, Vizhupuram

சிறந்த கதைகள்