PREVNEXT
ஹோம் / நியூஸ் / விழுப்புரம் /

மது போதையில் அரசு பள்ளியை சேதப்படுத்திய கல்லூரி மாணவர்.. விழுப்புரத்தில் அதிர்ச்சி!

மது போதையில் அரசு பள்ளியை சேதப்படுத்திய கல்லூரி மாணவர்.. விழுப்புரத்தில் அதிர்ச்சி!

வீடியோ வைரலான நிலையில் போலீசார் அவர்களை கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

பள்ளியை சேதப்படுத்திய கல்லூரி மாணவர் கைது

பள்ளியை சேதப்படுத்திய கல்லூரி மாணவர் கைது

விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் அருகே மது போதையில் அரசு பள்ளியை சேதப்படுத்திய கல்லூரி மாணவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபும் அருகிலுள்ளா வீரங்கிபுரம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு அதே ஊரை சேர்ந்த 5 இளைஞர்கள் மது அருந்தியுள்ளனர்.

அப்போது மதுபோதை தலைக்கேரிய நிலையில் இளைஞர்கள் வகுப்பறை கட்டிடத்தை உடைத்து சேதப்படுத்தினர். மேலும் பெரிய கருங்கல்லை தூக்கி வகுப்பறை கதவின் மீது வீசி உடைக்க முயற்சித்துள்ளனர்.

உங்கள் நகரத்திலிருந்து (விழுப்புரம்)

ஒன்றரை வயது குழந்தை உட்பட 2 பேரின் உயிரை காவு வாங்கிய கோர விபத்து.. விழுப்புரத்தில் சோகம்!

தென்பெண்ணை ஆற்று திருவிழாவை கொண்டாட விழுப்புரத்தில் குவிந்த 3 மாவட்ட மக்கள்

பிறந்து 50 நாட்களே ஆன குழந்தை கிணற்றில் வீசி கொலை.. இளம்பெண் விபரீத முடிவு - வரதட்சணை கொடுமையா? போலீஸ் விசாரணை

வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் - விழுப்புரம் கலெக்டர் அறிவிப்பு

விதை விற்பனை - விழுப்புரம் மாவட்ட கலெக்டர் விடுத்துள்ள முக்கிய எச்சரிக்கை

கடலோர காவல்படையில் சேர இலவச பயிற்சி வகுப்பு - விழுப்புரம் மாவட்ட மீனவர்களின் வாரிசுகள் விண்ணப்பிக்கலாம்

விழுப்புரத்தில் விமரிசையாக கொண்டாடப்பட்ட அழகு நாச்சியம்மன் கோயில் திருவிழா

விழுப்புரத்தில் ஆசிரியருக்கு அரிவாள் வெட்டு.. பள்ளி வளாகத்தில் பகீர் சம்பவம்

தமிழ் மொழியில் எழுத, படிக்க தெரிந்தால்போதும்.. விழுப்புரம் தொழிலாளர் உதவி ஆணையர் சொன்ன தகவல்..

“உன் கல்யாணத்துக்காக ரெடி பண்ண ஸ்பெஷல் கிஃப்ட்..!” - மாப்பிள்ளைக்கு நண்பர்கள் கொடுத்த வித்தியாசமான அன்பளிப்பு

கள்ளக்குறிச்சி மாணவியின் செல்போன் விழுப்புரம் நீதிமன்றத்தில் ஒப்படைப்பு

இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வளைதலங்களில் வேகமாக பரவிய நிலையில் பல தரப்பிலும் கடும் கண்டனங்கள் எழுந்துள்ளது.

ALSO READ | தனியாக இருக்கும் பெண்கள் தான் ஒரே குறி.. சினிமா பாணியில் கைவரிசை காட்டி வந்த நபர் கைது

இந்த நிலையில் பள்ளியின் தலைமை ஆசிரியர் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த கண்டாச்சிபுரம் காவல்துறையினர் அதே ஊரை சேர்ந்த கல்லூரி இரண்டாம் ஆண்டு படிக்கும் ஏழுமலை(20) என்ற இளைஞரை கைது செய்துள்ளனர்.

மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய பிரபாகரன், நாராயணான் ஆகியோரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

செய்தியாளர்: ஆ.குணாநிதி, விழுப்புரம்.

Tags:Local News, Viluppuram S22p13

சிறந்த கதைகள்