Home / News / trichy /

Trichy : திருமண தடை நீக்கும் திருப்பைஞ்ஞீலி பரிகார ஸ்தலம்.. எப்படி வழிபடுவது?

Trichy : திருமண தடை நீக்கும் திருப்பைஞ்ஞீலி பரிகார ஸ்தலம்.. எப்படி வழிபடுவது?

Trichy Thiruppainjeeli Gneelivaneswarar Temple : திருமணம் ஆகாமல் இருப்பவர்களுக்கு விரைவில் தடை நீங்கி திருமணம் கைகூட அருள் பாலிக்கும் திருச்சி  திருப்பைஞ்ஞீலி ஸ்ரீலிவனேஷ்வரர் கோவிலின் சிறப்புகள் குறித்தும் வழிபாட்டு , பரிகார முறைகள் குறித்தும் இத்தொகுப்பில் காணலாம்.

திருச்சி என்றாலே ஆன்மீக திருத்தலங்கள் தான் அதிகம் இருக்கும். இங்கு பல்வேறு தோஷங்களுக்கு பரிகாரம் செய்யும் ஆன்மீக தலங்களும் உள்ளன. அவற்றில் ஒன்றுதான் திருப்பைஞ்ஞீலியில் உள்ள ஞீலிவனேஸ்வரர் ஆலயம். அந்தத் திருத்தலத்தைப் பற்றி தான் இங்கு நாம் பார்க்கப் போகிறோம்.

காவிரி வடகரையில் பாடல் பெற்ற தலங்களில் 61 வது தலமாக விளங்குவது இந்த திருப்பைஞ்ஞீலி அருள்மிகு விசாலாட்சி அம்மன் உடனுறை ஞீலிவனேஸ்வரர் திருக்கோயில். இந்த கோயில் திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் வட்டத்தில் அமைந்துள்ளது. இது  திருமண தடையை நீக்குவதற்கான பரிகார தலமாகும். இந்த கோவில் கிபி ஆறாம் நூற்றாண்டுக்கும் முன்னதான திருக்கோவில் ஆகும். இந்த கோவிலில் முதலாம் ராஜேந்திர சோழன், முதலாம் ராஜாதிராஜ சோழன், சுந்தரபாண்டியன், மகேந்திர பல்லவ வர்மன் உள்ளிட்ட பல்வேறு மன்னர்களும் திருப்பணி செய்து இருக்கின்றனர்.

ஏழு கன்னிமார்களான பிராம்மி, மாகேஸ்வரி, கவுமாரி, வைஷ்ணவி, வாராகி, இந்திராணி, சாமுண்டி ஆகியோர் திருமண வரம் வேண்டி இவ்விடத்தில் தவம் செய்ததாகவும், அப்போது, பார்வதி அவர்கள் முன் தோன்றி, அவர்களுக்கு வரம் அளித்ததுடன், வாழை மர வடிவில் அத்தலத்திலேயே குடி கொண்டதாகவும் வரலாறு கூறுகிறது. பின்னர் அந்த வனத்தின் மத்தியில் சிவனும் லிங்க வடிவில் சுயம்புவாக எழுந்தருளினார் என்று கூறப்படுகிறது.

உங்கள் நகரத்திலிருந்து (திருச்சி)

கடனை திருப்பி கேட்டவரை அரிவாளுடன் துரத்திய திமுக பிரமுகர்- வைரலான வீடியோவால் பரபரப்பு

திருச்சியில் நாளை மின்தடை செய்யப்படும் பகுதிகள்

மூவர்ண நிறத்தில் ஜொலிக்கும் மலைக்கோட்டை நுழைவு வாயில்... இரவிலும் செஃல்பி எடுக்க பிரியப்படும் திருச்சியன்ஸ்..

பழம்பெருமை பேசும் சுமை தாங்கி கல் மேடை.. வயலூர் சாலையில் சென்றால் இதை பார்க்கலாம்..

மணப்பாறை அருகே லாரிகள் மோதி கோர விபத்து... இருவர் உடல் கருகி பலி

விவசாயிகளுக்கு மகிழ்ச்சி செய்தி: திருச்சியில் வேளாண் பொருட்களைப் பதப்படுத்தும் கிடங்குகள்

திருநங்கைகள் முன்னின்று நடத்திய அம்மன் திருவிழா; ஸ்ரீரங்கத்தில் கோலாகலம்

‘வீர் சக்ரா’ விருதுப் பெற்ற தமிழகத்தின் முதல் ராணுவ வீரர் மதலைமுத்து - சொந்த ஊரில் சிலை அமைக்க குடும்பத்தினர் கோரிக்கை

அடுத்தடுத்து விழும் கொள்ளிடம் பழைய பாலத் தூண்கள்.. திருச்சி 'நேப்பியர்' பாலத்திற்கு ஆபத்து...

வேளாண் உட்கட்டமைப்பு நிதி திட்டத்தின் கீழ் தமிழ் நாட்டிற்கு 5990 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு...

டிரங்கு பெட்டி ஞாபகம் இருக்கா? அந்த காலத்து பீரோ இது தான்..!!

ஞீலிவனேஸ்வரர் திருக்கோயில், திருப்பைஞ்ஞீலி

இந்தக் கோவில் செவ்வாய் தோஷம், புத்திர தோஷம் மற்றும் திருமண திருமண தடை நீக்கும் ஒரு பரிகார தலமாக விளங்கி வருகிறது. எனவே, திருமணம் ஆகாமல் தடைபட்டுக் கொண்டிருக்கும் ஆண்களோ அல்லது பெண்களோ இந்த கோவிலுக்கு வந்து, அர்ச்சனை செய்து, அங்கு இருக்கும் கல்வாழை பரிகார பூஜையை நிறைவேற்றினால், அவர்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும் என்பது பல ஆண்டுகாலமாக ஒரு ஐதிகமாக இருந்து வருகின்றது. கல்வாழை மரத்தில் மாங்கல்யத்தை கட்டி பரிகாரத்தை நிறைவேற்றுவார்கள். மேலும், திருமணம் முடிந்தவுடன் அவர்கள் தம்பதிகளாக வந்து நிவர்த்தி பூஜை செய்வர்.

இத்தனை சிறப்பு வாய்ந்த இந்த கோவிலில், வாரத்தின் அனைத்து நாள்களிலும் பரிகார பூஜை செய்யப்படுகிறது. அதே நேரத்தில், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கூட்டமானது அதிக அளவில் இருக்கும். இங்கு பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வந்து பரிகார பூஜை செய்ய வருகின்றனர்.

ஞீலிவனேஸ்வரர் திருக்கோயில், திருப்பைஞ்ஞீலி

அதோடுமட்டுமல்லாமல், இங்கு கல்வாழை பரிகார பூஜை பொருட்கள் இங்கு திருக்கோயில் நிர்வாகத்தின் சார்பில் வழங்கப்படுகின்றன. எனவே இதற்கான தொகையை செலுத்தி அந்தப் பொருள்களைப் பெற்றுக் கொள்ளலாம். இந்த கோவிலுக்கு மற்றொரு சிறப்பும் உண்டு. அது என்னவென்றால், இந்த கோவிலில் எமதர்மராஜனுக்கு என்று தனி சந்நிதி உள்ளது. திருக்கடையூரில் தாம் காலால் உதைத்தமையால் இறந்த எமதர்மராஜனுக்கு இறைவன் மீண்டும் உயிர் கொடுத்து அதிகாரத்தைத் திரும்ப அளித்த கோவில் இது என்று கூறப்படுகிறது. மேலும், தைப்பூச தினத்தில் எமதர்மராஜனுக்கு சிவபெருமான் உயிர் எடுக்கும் அதிகாரத்தை வழங்கியதால் இங்குள்ள சன்னதி அதிகார வல்லவர் சன்னதி என்றும் அழைக்கப்படுகின்றது.

மத்திய பேருந்து நிலையத்திலிருந்து திருப்பைஞ்ஞீலி செல்லும் பாதயை காட்டும் கூகுள் வரைபடம்..

377

கடன் பிரச்சனையில் இருப்பவர்கள் மற்றும் வேலை இல்லாமல் இருப்பவர்கள் இந்த சன்னதியில் வந்து வழிபட்டால் அதற்கான பலன் கிடைக்கும் என்பது ஐதீகமாகும். மேலும் சனிக்கிழமைகளில் இந்த சன்னதியை வழிபடுவது மிகவும் சிறப்பு வாய்ந்தது என்றும் கூறப்படுகிறது. மேலும் இது தமிழகத்தில் உள்ள பல்வேறு குடைவரைக் கோவில்களில் ஒன்று ஆகும்.

ஞீலிவனேஸ்வரர் திருக்கோயில், திருப்பைஞ்ஞீலி

இக்கோவிலில் சித்திரை திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்த திருவிழா ஆகும். ஆண்டுதோறும் சித்ரா பௌர்ணமி நாளில் இங்கு தேரோட்டம் நடைபெறும். இது வெகு விமரிசையாக இருக்கும். அது மட்டுமல்லாமல், சித்திரை மாதம், அவிட்ட நட்சத்திரத்தன்று அப்பர் திருக்கட்டமுது பெருவிழாவும் நடத்தப்படுகின்றது. இந்த கோவிலில் சனீஸ்வரனுக்கு அதிபதியான எமன் சந்நிதி இருப்பதால் நவகிரகங்கள் கிடையாது. மேலும் இந்த கோவிலில் ஐந்து பிரகாரங்கள், ராவணன் திருவாயில் கோபுரம், மொட்டைக்கோபுரம் ஆகியவை அமைந்துள்ளது. இந்தக் கோயிலுக்கு உள்ளேயும் கோயிலுக்கு வெளிப்பகுதியிலும் சப்த தீர்த்தம், விசாலத் தீர்த்தம், யம தீர்த்தம், கல்யாண தீர்த்தம், அக்னி தீர்த்தம், அப்பர் தீர்த்தம், மணிகர்ணிகை தீர்த்தம் என்று ஏழு தீர்த்தங்கள் உள்ளன. இங்கு இருக்கும் இறைவனை தரிசிக்க நாம் படிக்கட்டுகளில் இருந்து கீழே இறங்கிச் சென்று தரிசிக்க வேண்டும்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

எனவே பல்வேறு வரலாற்று சிறப்புமிக்க இந்த திருத்தலம் ஒரு வரலாற்றுச் சின்னமாகவும் இருக்கும். அதே போன்று திருமணம் ஆகாமல் இருப்பவர்கள் மட்டுமல்லாமல் பல்வேறு பிரச்சனைகள் உள்ளவர்களுக்கு இந்த கோவில் ஒரு சிறந்த தீர்வாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:Hindu Temple, Local News, Trichy