Home / News / trend /

5 நாட்களுக்கு மட்டும் இந்த வேலையை பாத்தா போதும், ஐந்து லட்சம் சம்பளமாம்!

5 நாட்களுக்கு மட்டும் இந்த வேலையை பாத்தா போதும், ஐந்து லட்சம் சம்பளமாம்!

காட்சி படம்

காட்சி படம்

Trending | ஐந்து நாட்களுக்கு நிறுவனம் நாய்க்கு தயாரிக்கப்படும் உணவுகளை மட்டுமே சாப்பிட வேண்டும் மற்றும் இதற்கான சம்பளமாக ₹5,00,000 தருவதாக அறிவித்துள்ளது.

உலகில் பல விதமான விநோதமான வேலைகள் இருக்கின்றன. அதில் ஒரு சில வேலைகளுக்கு கரும்பு தின்ன கூலியா என்பது போல அவ்வளவு சௌகரியமாகவும் வசதியாகவும் இருக்கும். உதாரணமாக, உணவுகளை டெஸ்ட் செய்து சுவை எப்படி இருக்கிறது என்பதை கூறும் வேலைகள் உள்ளன. அதேபோல மெத்தையில் படுத்து உறங்கி தூக்கம் நன்றாக வருகிறதா, ஆழ்ந்து தூங்க முடிகிறதா என்பது பற்றி ரிப்போர்ட் செய்யும் வேலையும் இருக்கின்றன. இவ்வகையான வேலைகள் எல்லாம் மிகவும் சௌகரியமாக இருக்கும் நிலையில், நாய்களுக்கான உணவு மட்டுமே சாப்பிடும் வேலை ஒன்றை யூகேவில் உள்ள ஒரு நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த வேலைக்கு சம்பளமாக இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட ₹5,00,000 வழங்கப்படுகிறது.

இங்கிலாந்தில் உள்ள OMNI என்ற செல்லப்பிராணிகளுக்கான உணவு தயாரிக்கும் நிறுவனம் ஒன்று, சமீபத்தில் தாங்கள் நாய்களுக்காக தயாரித்த உணவை மனிதர்கள் சுவைத்துப் பார்த்து எப்படி இருக்கிறது என்பதைப் பற்றி தெரிவிக்க வேண்டும் என்ற ஒரு புதிய வேகன்ஸியை அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பின் படி ஐந்து நாட்களுக்கு நிறுவனம் நாய்க்கு தயாரிக்கப்படும் உணவுகளை மட்டுமே சாப்பிட வேண்டும் மற்றும் இதற்கான சம்பளமாக ₹5,00,000 தருவதாக அறிவித்துள்ளது.

ஐந்து நாட்கள் நாய்க்கான உணவை மட்டுமே சாப்பிடும் நபர், அந்த உணவு பற்றிய தனது அனுபவத்தை பதிவு செய்ய வேண்டும். சுவை எப்படி இருக்கிறது, உணவு சாப்பிடுவதற்கு முன்பும் பின்பும் உள்ள எனர்ஜி லெவல், மனநிலை மாற்றங்கள் மற்றும் செரிமானம் சரியாக இருக்கிறதா என்ற பல்வேறு அளவுகோல்களை விளக்கமாக பதிவுசெய்யவேண்டும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. நிறுவனம் தயாரித்திருப்பது நாய்க்கான உணவு, அதை எப்படி மனிதர்களால் தொடர்ந்து சாப்பிட முடியும் என்ற சந்தேகம் ஏற்படலாம்.

Read More : முகூர்த்த நேரத்தில் குடித்து கும்மாளம் போட்ட மணமகன்...மணமகள் எடுத்த நச் முடிவு

OMNI நிறுவனம் தயாரித்திருப்பது முழுக்க முழுக்க சைவ உணவுதான். இந்த உணவில் சர்க்கரை வள்ளிக் கிழங்கு, பருப்பு வகைகள், பிரௌன் அரிசி, பூசணி, ப்ளூபெர்ரி, பட்டாணி மற்றும் கிரான்பெர்ரி ஆகிய உட்பொருட்கள் சேர்க்கப்பட்டுள்ளன என்பதை நிறுவனம் கூறியுள்ளது.

இந்த வேலைக்கு எந்தவிதமான கல்வித் தகுதியும் தேவையில்லை. ஆனால் வேறு சில விதிகளை நிறுவனம் தெரிவித்துள்ளது. விண்ணப்பதாரர்களுக்கு எந்த அலர்ஜியும் இருக்கக்கூடாது. நாய்களுக்கு தயாரிக்கப்படும் உணவை சாப்பிடுவதன் மூலம் அலர்ஜி ஏற்படுவதை தவிர்ப்பதற்காக இந்த விதிமுறை சேர்க்கப்பட்டுள்ளது. விண்ணப்பத்தில் அலர்ஜி இல்லை என்பதை உறுதி செய்ய வேண்டும். மேலும் இந்த வேலை, யூகேவில் வசிக்கும் நபர்களுக்கு மட்டுமானது. விண்ணப்பதாரர்களுக்கு 18 வயது நிரம்பி இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்பட்டு உணவு டெஸ்ட்டருக்கு, ரெசிபிக்கள் பகிரப்பட்டு அதிலிருந்து அவர் தேர்வு செய்யலாம். அதுமட்டுமின்றி பதிவு செய்யப்பட்ட ஒரு ஊட்டச்சத்து நிபுணரின் ஆலோசனையும் அவருக்கு வழங்கப்படும்.

377

OMNI யின் இணை நிறுவனரான ஷிவ் சிவகுமார், OMNI என்பது ஒரு ஆரோக்கியமான உயர் தர உணவு வகைகளைக் குறிக்கும், அதாவது இதில் எந்த விதமான இரகசியமான உட்பொருட்கள் உள்ளது மர்மமான உட்பொருட்கள் சேர்க்கப்படுவதில்லை. மனிதர்கள் எந்த அளவுக்கு தரமான உணவுகளை சாப்பிடுகிறார்களோ அதே தரத்தில் நாய்களுக்கான உணவும் இருக்க வேண்டும். ஆனால் பல பிராண்டுகளும் விலை மலிவான மற்றும் பயன்படுத்தாமல் எஞ்சி இருக்கும், அல்லது காலாவதியான உணவுகளிலிருந்து தான் நாய்களுக்கான உணவுகளை தயாரிக்கிறார்கள்.

நாய்களுக்காக தயாரிக்கப்பட்டாலும் எங்கள் நிறுவனத்தின் உணவு மனிதர்களும் சாப்பிடக்கூடிய தரத்தில் இருக்கிறது என்பதை வெளிப்படுத்தும் முயற்சி இது. இதனால் தான் நாங்கள் ஒரு மனிதரை நாய்களுக்கான உணவை சாப்பிடும் சோதனை முயற்சியில் இந்த அறிவிப்பை மேற்கொண்டுள்ளோம். எங்களைப் போல வேறு எந்த பிராண்டும் அல்லது செல்லப்பிராணி உணவுகள் உற்பத்தியாளரும் முயற்சி செய்து கூட பார்க்க மாட்டார்கள் என்று என்னால் உறுதியாக கூற முடியும்” என்று தெரிவித்தார்.

Tags:Trending, UK, Viral