PREVNEXT
ஹோம் / நியூஸ் / ட்ரெண்டிங் /

மலைப்பாம்புடன் போராடி நாயை மீட்ட சிறுவர்கள்.. பார்க்கும் போதே அச்சத்தை ஏற்படும் வீடியோ இணையத்தில் வைரல்!

மலைப்பாம்புடன் போராடி நாயை மீட்ட சிறுவர்கள்.. பார்க்கும் போதே அச்சத்தை ஏற்படும் வீடியோ இணையத்தில் வைரல்!

Trending

Trending

Viral Video | ராட்சத மலைப்பாம்பிடம் சிக்கிக்கொண்ட தங்களது நாயைக் காப்பாற்ற 3 சிறுவர்கள் தைரியமாக செயல்பட்ட விதம் தான் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

சமீப காலங்களாக இணையத்தை பல டிரெண்டிங் வீடியோக்கள் ஆக்கிரமித்து வருகிறது. தினமும் எண்ணிலடங்கா வீடியோக்கள் பகிரப்படும் நிலையில், குழந்தைகளின் க்யூட் ரியாக்சன் வீடியோக்கள் மற்றும் வனங்களில் விலங்குகளுக்கு இடையிலான போராட்டம் தொடர்பான வீடியோக்கள் வைரலாகும். இந்த வீடியோக்களைப் பார்ப்பதற்கே அச்சத்தையும், வியப்பையும் ஏற்படுத்துவதாக அமைந்திருக்கும். அப்படிப்பட்ட ஒரு வீடியோ ஒன்று தான் தற்போது இணையத்தில் வைரலாகிறது.

“பாம்பைக் கண்டால் படையும் நடுங்கும் என்பார்கள்“ ஆனால் ராட்சத மலைப்பாம்பிடம் சிக்கிக்கொண்ட தங்களது நாயைக் காப்பாற்ற 3 சிறுவர்கள் தைரியமாக செயல்பட்ட விதம் தான் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. பார்ப்பதற்கே பயத்தை ஏற்படுத்தும் அந்த வீடியோவில், ஒரு நாயை மலைப்பாம்பு ஒன்று லாவகமாக சுற்றி வளைத்திருப்பதைக் காணலாம். பொதுவாக மலைப்பாம்புகள் உயிருடன் இரையை விழுங்கும் ஆற்றல் கொண்டது. இந்நிலையில் தன்னிடம் சிக்கிக்கொண்ட நாயை விழுங்குவதற்கு ஆயுத்தமாகியது. ஆனாலும் தங்களது நாயைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக அச்சமின்றி களத்தில் இறங்கினார்கள் சிறுவர்கள்.

மலைப்பாம்பிடம் சிக்கியிருந்த நாயைக்காக்கும் முயற்சியில் இரண்டு சிறுவர்கள் முதலில் ஒரு புறம் இருந்து பாம்மை இழுக்கின்றனர். மற்றொரு சிறுவர் குச்சி ஒன்றினால் மலைப்பாம்பு தலையை தரையில் தள்ள முயற்சிக்கிறார். இருந்த போதும் மலைப்பாம்பு நாயை இறுக்கி அதைக் கொல்ல முயற்சிக்கும் போது, நாயிடம் இருந்து மலைப்பாம்பை பிரிக்க முயற்சி செய்கிறார். தொடர்ந்து கையில் வைத்திருக்கும் கம்பியை வைத்து பாம்பின் தலையைக் கட்டுப்படுத்துகிறார்கள். இருந்தப்போதும் தன் பிடியை ஒரு போதும் பாம்பு விடவில்லை. உடனே 3 சிறுவர்களும் பாம்பை எதிர்திசையில் இருந்து இழுத்து நாயை விடுவிக்கப் போராடுகின்றனர். இறுதியில் பாம்பின் பிடியிலிருந்து நாய் தப்பிச் செல்கிறது.

டிவிட்டரின் வெளியான இந்த வீடியோவை இதுவரை 9.2 மில்லியன் பார்வையாளர்கள் கண்டு ரசித்துள்ளனர். மேலும் வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள், தைரியான குழந்தைகள், இவர்களது முயற்சிக்கு பெரும் பாராட்டுகள் என்பது போன்ற கருத்துக்களை டிவிட் செய்து வருகின்றனர். குழந்தைகள் அச்சமில்லாமல் இந்த செயலை செய்தாலும் கவனமுடன் இருக்க வேண்டும் எனவும் நெட்டிசன்கள் அறிவுறுத்துகின்றனர். இது பழைய வீடியோ என்றாலும் துணிச்சலோடு குழந்தைகள் மேற்கொண்ட செயல் தற்போதும் நெட்டிசன்களைக் கவர்ந்துள்ளது.

Also Read : கை குழந்தையை டிராக்டர் முன் வீசிய தாய்… வைரலாகும் ஷாக்கிங் வீடியோ!

பொதுவாக வனங்களில் உள்ள மக்கள் பாம்புகளை செல்லப்பிராணியாக வளர்ந்து வருகின்றனர். குறிப்பாக மகாராஷ்டிரா மாநிலம் சோலாப்பூர் மாவட்டத்தின் மோஹோல் தாலுகாவிற்கு உட்பட்ட ஷெட்பால் கிராமத்தில் உள்ள மக்கள் அச்சமின்றி தங்களது கூரை வீட்டின் மேற்பகுதியில் பாம்புகள் வசிப்பதற்கான தனித்துவமான இடத்தை செய்து கொடுக்கின்றனர். எவ்வித பயமும் இல்லாமல் பாம்புகளை கடவுளாகவும் வணங்கி பாம்புகளுடனே வசித்து வருகின்றனர்.

Also Read : பாகுபலி ராஜமாதா போல் தனது குழந்தையை மக்களுக்கு காட்டிய கொரில்லா - வைரல் வீடியோ

377

இங்கு சுமார் 2600 கிராம மக்கள் வசிக்கும் நிலையில், பாம்பு கடித்துவிட்டதாக ஒரு புகாரும் இதுவரை பதிவாகவில்லை என்பது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. மேலும் இங்கு வசிக்கும் பாம்புகளைக் காண்பதற்கு பார்வையாளர்கள் வருகிறார்கள். மேலும் ஷெட்பால் என்ற கிராமத்தில் வசிக்கும் மக்கள் தங்களது வீடுகளுக்குள் நாகப்பம்பு வந்து செல்வதற்கான வசதிகளை ஏற்படுத்தியுள்ளனர். இதையெல்லாம் பார்க்கும் போது மலைப்பகுதிகள் மற்றும் காடுகளில் வளரும் குழந்தைகள் தைரியமாகத் தான் இருப்பார்கள் என்பதை உணர்த்துகிறது.

Tags:Snake, Trending, Viral Video

சிறந்த கதைகள்