Home / News / trend /

தன்னை தானே கண்ணாடியில் பார்த்து அதிர்ந்த கரடி செய்த செயல்... வைரல் வீடியோ

தன்னை தானே கண்ணாடியில் பார்த்து அதிர்ந்த கரடி செய்த செயல்... வைரல் வீடியோ

Bear

Bear

Bear Mirror Reflection Video | கரடி ஒன்று தன்னை தானே கண்ணாடியில் பார்த்து அதிரும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

மனிதர்களுக்கு விலங்குங்கள், பறவைகள் செய்ய கூடிய சேட்டைகள் மிகவும் பிடிக்கும். இப்படி அவற்றின் சேட்டைகளை தினம்தோறும் ரசிப்பதற்காகவே வீடுகளில் பறவைகள், விலங்குகளை செல்ல பிராணிகளாக வளர்த்து வருவர். அதே போன்று இவை செய்ய கூடிய சேட்டைகளை படம் பிடித்து அதை இணையத்தில் பதிவேற்றி வைரலாக்குவதும் வழக்கம். இது போன்ற வைரல் வீடியோக்கள் ஏராளமானவை இணையத்தில் உள்ளன. இந்த வீடியோக்களை பார்க்கும் யாராக இருந்தாலும் அவர்களின் மனம் மிகவும் இலகுவாகி விடும்.

சில பிராணிகள் தாமாகவே வேடிக்கையான சில விஷயங்களை செய்வது வழக்கம். அதே போன்று, சில செய்கைகள் மனிதர்களால் செய்ய கூடியதாக இருக்கும். தனது செல்ல பிராணியை வைத்து ஏதாவது வேடிக்கையான நிகழ்வுகளை செய்து அதை கிண்டல் செய்வார்கள். இப்படியொரு நிகழ்வு தான் காட்டில் வாழ கூடிய கரடி ஒன்றிற்கு நடந்துள்ளது. இதை வீடியோவாக படம்பிடித்து தற்போது இணையத்தில் பதிவேற்றி உள்ளனர். இந்த வீடியோ இப்போது வைராகி வருகிறது.

இந்த வீடியோவில், கரடி ஒன்று தன்னை தானே கண்ணாடியில் பார்த்து அதிர்கிறது. இது செய்ய கூடிய இந்த செயல் உங்களை நிச்சயம் தரையில் விழுந்து விழுந்து சிரிக்க வைக்கும். கண்ணாடியில் தன்னைப் பார்த்ததும் அந்த கரடி முற்றிலும் வியப்பாக அதிர்ந்து பார்த்தது. யார் அது? தன்னை போலவே உள்ளதே என்று அதிர்ச்சியும், ஆச்சரியமும் கலந்த வண்ணம் அது பார்த்தது. அதன் முகத்தில் தெரிந்த கலவரமான அதிர்ச்சி அப்பட்டமாக இந்த வீடியோவில் பதிவாகி உள்ளது. மேலும் அதன் அழகான செயல்கள் உங்களை சத்தமாக சிரிக்க வைக்கவும் செய்கிறது.

கரடி கண்ணாடியைப் பார்ப்பதையும் அதன் உருவத்தை பார்த்து அதிர்ந்த இந்த வைரல் வீடியோவை பலரும் பார்த்து வருகின்றனர். வீடியோவில் கரடி பயந்து அலறிய காட்சிகளும் இடம் பெற்றுள்ளது. இதை கண்ணாடி பரிசோதனை என்று அழைக்கின்றனர். இந்த பரிசோதனை வீடியோ பலரை சிரிக்க வைத்தாலும், அந்த கரடி அலறியதை குறித்தும், அது பயந்து போனதை குறித்தும் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். சிலர் இந்த கரடியின் வீடியோ தான் தனது இந்த நாளை சந்தோஷப்படுத்தியதாக கமெண்ட் செய்துள்ளனர். சிலர், கரடி அலறியதை பார்த்தால் மிகவும் சிரிப்பாக உள்ளது என்று கூறியுள்ளனர்.

Also Read : மலைப்பாம்புடன் போராடி நாயை மீட்ட சிறுவர்கள்.. பார்க்கும் போதே அச்சத்தை ஏற்படும் வீடியோ

மேலும் சிலர், இது போன்ற விலங்குகளை பயமுறுத்தும் வகையிலான வேடிக்கை பரிசோதனைகள் அவைகளுக்கு ஹார்ட் அட்டாக்கை தர கூடும் என்று கூறியுள்ளனர். இது போன்று விலங்குகளை வேடிக்கை பொருட்களாக மாற்றுவதை குறித்தும் சிலர் கண்டனம் தெரிவித்து கமெண்ட் செய்துள்ளார். இந்த கரடியின் வீடியோ பார்ப்பதற்கு வேடிக்கையாக இருந்தாலும், அது எந்த அளவிற்கு பயந்திருக்கும் என்பதையும் நாம் யோசிக்க வேண்டும். எல்லா உயிரினங்களையும் நம்மை போலவே நேசிக்க வேண்டுமே தவிர, அவற்றின் வேதனையில் நாம் நமது சந்தோஷத்தை பெற கூடாது.

Tags:Trending, Viral Video