இந்தியாவில் "திருமண சீசன்" விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதன் வழியாக திருமணம் தொடர்பான இந்தியாவின் கலாச்சாரம் மற்றும் திருமண விழாக்களை மிகவும் சுவாரஸ்யமாகவும் வேடிக்கையாகவும் மாற்றும் பாரம்பரியமான சடங்குகளின் அழகை காட்டும் வீடியோக்களும், போட்டோக்களும் தொடர்ச்சியாக வெளிவந்த வண்ணம் உள்ளன.
இருப்பினும், ஒரு திருமண விழாவில் கலந்தது கொண்ட விருந்தினர்களால் பகிரப்படும் எல்லா வீடியோக்களுமே மற்றும் எல்லா புகைப்படங்களுமே நம் மனதைக் கவருவதில்லை, எல்லாமே வேடிக்கையானவைகளாக இருப்பதில்லை. சில நேரங்களில் சில சங்கடமான திருமண நிகழ்வுகளின் வீடியோ கிளிப்புகளும் ஆன்லைனில் வெளியாகி வைரல் ஆகின்றன.
அப்படியாக மணமேடையில் மணமகனும், மணமகளும் ஒருவரை ஒருவர் மாற்றி மாற்றி அறைந்து கொள்ளும் ஒரு வீடியோ கிளிப், தற்போது சமூக வலைதளங்களில் படு வைரலாகி வருகிறது. குறிப்பிட்ட வீடியோவின் தொடக்கத்திலேயே மணமகள் மணமகனுக்கு இனிப்புகளை வழங்க முயற்சிப்பதை பார்க்க முடிகிறது, ஆனால் மணமகனோ தன் மனைவி மீதும் அவர் வழங்கும் இனிப்பின் மீது கவனம் செலுத்துவதை விட அதை அவர் உண்ணும் போது அது சரியாக புகைப்படம் எடுக்கப்படுவதை உறுதி செய்ய தொடர்ந்து புகைப்பட கலைஞரிடம் பேசிக்கொண்டே இருக்கிறார், கொடுக்கப்படும் இனிப்பை புறக்கணித்து கொண்டே இருக்கிறார். மணமகனுக்கு பலமுறை இனிப்பு வழங்க முயற்சித்த பிறகு, மணமகள் தன் பொறுமையை இழந்து தன் கையில் இருக்கும் இனிப்பை மணமகனின் முகத்தில் வைத்து தேய்த்து விடுகிறார்.
"புது" மனைவியின் இந்த செயலை கண்டு கோபமடையும் மணமகன், மணமகளின் கன்னத்தில் ஒரு அறை விடுகிறார். உடனே பதிலுக்கு மணமகளும் கணவனின் கன்னத்தில் ஒரு அறை விடுகிறார். இப்படியாக இவ்விருவரும் மாற்றி மாற்றி 3 முறை தத்தம் கன்னங்களில் அறை வாங்கி கொண்டனர். பிறகு அவர்கள் கைகலப்பில் ஈடுபட தொடங்குகின்றனர், அதோடு அந்த வீடியோ முடிவடைகிறது.
இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் நிலையில், இதை பிரபல நகைச்சுவை நடிகர் ஆன சுனில் குரோவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள நிலையில், குறிப்பிட்ட வீடியோ உண்மையான சம்பவம் அல்ல என்று தெரியவந்துள்ளது. இது ஒரு 'ஸ்க்ரிப்ட்ட' யூட்யூப் வீடியோவில் இருந்து கட் செய்யப்பட்ட ஒரு கிளிப் ஆகும்.
இதுவொரு ஸ்கிரிப்டட் வீடியோ என்றாலும் கூட இது இணையத்தில் பயங்கரமாக வைரல் ஆகி வருகிறது. இது 3.9 மில்லியனுக்கும் அதிகமான வியூஸ்களையும் 4 லட்சத்திற்கும் அதிகமான லைக்ஸ்களையும் பெற்றுள்ளது. மேலும் நாடு முழுவதிலுமிருந்தும் பல இண்டர்நெட் யூசர்கள் இந்த வீடியோவிற்கு பல வகையான பெருங்களிப்புடைய கமெண்ட்களை பதிவு செய்த வண்ணம் உள்ளனர். அதில் இன்ஸ்டாகிராம் யூசர் ஒருவரின் "முதல் இரவுக்கு முன் முதல் சண்டை" என்கிற கமெண்ட் - ஹைலைட்!
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags:Trending Video, Viral Video