Home / News / trend /

குழந்தையும் தெய்வமும் ஒண்ணு.. நடுத்தெருவில் கொட்டிய இந்த பழங்களே அதற்கு சாட்சி!

குழந்தையும் தெய்வமும் ஒண்ணு.. நடுத்தெருவில் கொட்டிய இந்த பழங்களே அதற்கு சாட்சி!

குழந்தைகள் வைரல் வீடியோ..

குழந்தைகள் வைரல் வீடியோ..

Viral Video | கருணை மற்றும் கண்ணியத்தின் முக்கியத்துவத்தையும் அழகையும் எடுத்துரைக்கும், அதே சமயம் நம் பலரின் மனதைக் கவரும் ஒரு வீடியோ - சீனாவில் இருந்து வெளியாகி - உலகம் முழுவதுமான சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

கருணை மற்றும் கண்ணியத்தின் முக்கியத்துவத்தையும் அழகையும் எடுத்துரைக்கும், அதே சமயம் நம் பலரின் மனதைக் கவரும் ஒரு வீடியோ - சீனாவில் இருந்து வெளியாகி - உலகம் முழுவதுமான சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. கருணை உள்ளம் கொண்டவர்களில் குழந்தைகள் மிகவும் திறமையானவர்கள் என்பதையும், "கருணை காட்டுவது" என்று வந்துவிட்டால் குழந்தைகளுக்கு அது மிகவும் எளிதாக மற்றும் இயல்பாக வந்துவிடும் என்பதையும் மேற்க்குறிப்பிட்ட வீடியோ நிரூபிக்கிறது.

குறிப்பிட்ட வீடியோவில், ஒருவர் பழங்கள் நிறைந்த ஒரு ட்ராலியை தெருவில் வைத்து மெதுவாக தள்ளிக்கொண்டே வருகிறார். ஒரு கட்டத்தில் நிலைத்தவறி அந்த ட்ராலி சாய்ந்துவிட, அதில் இருந்த பழங்கள் அனைத்துமே கீழே கொட்டி விடுகின்றன. அதே தெருவின் மறுபக்கத்தில் இருந்து சைக்கிள்களில் வரும் ஒரு "குழந்தைகள் கூட்டம்" இந்த சம்பவத்தை கவனிக்கிறது. பழங்கள் கொட்டிய நிலையில், செய்வது அறியாமல் நிற்கும் அந்த நபருக்கு உதவும் நோக்கத்தில் அந்த குழந்தைகள் அவரை நோக்கி ஓடிவந்து, கீழே கொட்டிய பழங்களை எடுத்து கொடுக்க தொடங்குகின்றனர்; குழந்தைகளின் இந்த செயலை பார்த்த சில பெரியவர்களும் ஆங்காங்கே சிதறிக் கிடக்கும் பழங்களை எடுக்க தொடங்குகின்றனர்.

உங்கள் முகத்தில் நிச்சயம் ஒரு புன்னகையை வரவழைக்கும் இந்த வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கமான குட் நியூஸ் மூவ்மென்ட் பகிர்ந்துள்ளது. இருப்பினும், இது முதலில் டேனி டெரானியால் பகிரப்பட்ட ஒரு ட்விட்டர் போஸ்ட் ஆகும். அறியாதோர்களுக்கு டேனி டெரானி ஒரு புகழ்பெற்ற பொழுதுபோக்கு விளம்பரதாரர் ஆவார். மேலும் குறிப்பிட்ட வீடியோவிற்கு இவர் "ஒரு கண்ணியமான நபராக இருப்பதற்கான செலவு $0.00" என்று ஒரு சுவாரசியமான கேப்ஷனையும் வைத்துள்ளார்.

Read More : திருமண மேடையில் ஒருவரை ஒருவர் சராமாரியாக அறைந்து கொண்ட மணமக்கள் - வைரல் வீடியோ

இன்ஸ்டாகிராம் யூசர்கள் பலரும், குழந்தைகளின் இந்த சிந்தனைமிக்க செயலை பார்த்து மற்றும் அவர்கள் உதவ முன்வந்த வேகத்தை பார்த்து பலவகையான பாராட்டுகளை கமெண்ட்களின் வழியாக பதிவிட்ட வண்ணம் உள்ளனர். ஒருவர் "எதிர்காலம் பிரகாசமாக இருக்கிறது" என்று கமெண்ட் செய்து உள்ளார். இன்னொரு இன்ஸ்டாகிராம் யூசர், "கருணையுடன் இருப்பது மிகவும் கூலான விடயம்" என்று கமெண்ட் செய்து உள்ளார்.

377

மற்றொருவர் இந்த செயலுக்காக குழந்தைகளின் பெற்றோரைப் பாராட்டி உள்ளார், அதாவது "இது அனைத்தும் வீட்டிலிருந்து தொடங்குகிறது" என்று கூறி உள்ளார். மற்றொரு யூசர் பலருடன் எதிரொலிக்கும் ஒரு கருத்தை சொல்லி இருக்கிறார் - "ஊடகங்கள் மிகவும் அழிவாகவும் இருளாகவும் இருக்கலாம், உலகில் இன்னும் நல்லவர்கள் இருக்கிறார்கள் என்பதை நினைவூட்டுவது மிகவும் முக்கியம்" என்று கமெண்ட் செய்து உள்ளார்.

குறிப்பிட்ட வீடியோ சீனாவின் டாங்ஷன் ஹெபே நகரத்தில் நடந்து, பதிவாகி உள்ளது. எங்கிருந்து வந்தால் இந்த காணொளி நிச்சயமாக உங்கள் எதிர்காலம் மற்றும் நம் குழந்தைகளின் மீதான நம்பிக்கையை அதிகரிக்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம்!

 

Tags:Trending, Viral