PREVNEXT
ஹோம் / நியூஸ் / ட்ரெண்டிங் /

பூனைகள் மத்தியில் மறைந்திருக்கும் எலியை 9 வினாடிகளில் உங்களால் கண்டுபிடிக்க முடியுமா!

பூனைகள் மத்தியில் மறைந்திருக்கும் எலியை 9 வினாடிகளில் உங்களால் கண்டுபிடிக்க முடியுமா!

ஆப்டிகல் இல்யூஷன் சவால்: பூனைகள் மத்தியில் மறைந்திருக்கும் எலியை உங்களால் கண்டுபிடிக்க முடியுமா!

ஆப்டிகல் இல்யூஷன் சவால்: பூனைகள் மத்தியில் மறைந்திருக்கும் எலியை உங்களால் கண்டுபிடிக்க முடியுமா!

இன்னும் மறைந்திருக்கும் எலியை கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் உங்களுக்காக ஒரு சிறிய க்ளூ

குழந்தைகளை மட்டுமின்றி பெரியவர்களையும் கவர கூடியவையாக சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகின்றன ஆப்டிகல் இல்யூஷன்கள். சோஷியல் மீடியாக்களில் ஆப்டிகல் இல்யூஷன்கள் மிகவும் பிரபலமானவையாக இருக்க காரணம், இதில் மறைந்திருக்கும் புதிர்களை கண்டறிய கண்களையும், மூளையையும் ஒரே நேரத்தில் பயன்படுத்த வேண்டி இருக்கிறது.

இதனால் ஏற்படும் சுவாரஸ்யம் நெட்டிசன்களுக்கு பிடித்துள்ளதால் ஆப்டிகல் இல்யூஷன் சவால்களை ஏற்று கொண்டு அதை தீர்ப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். பொதுவாக புதிர்களுடன் வரும் ஆப்டிகல் இல்யூஷன்கள் கண்களுக்கும், மூளைக்கும் நல்ல வேலை கொடுக்கின்றன. மேலும் நமது கவனிக்கும் திறன்களை மேம்படுத்துகின்றன. இவை உண்மையில் எப்போதும் நாம் பார்ப்பதை விட வித்தியாசமாக இருக்கும். முதல் பார்வையில் ஒரு விஷயமாக தெரியும் ஆப்டிகல் இல்யூஷன்களை சற்று கூர்ந்து பார்த்தால் வேறு பல விஷயங்கள் புலப்படும். அதே போல நம் கண்களுக்கு நேரடியாக புலப்படும் விஷயங்களை மட்டுமின்றி வேறு சில விஷயங்களும் ஆப்டிகல் இல்யூஷன்களில் மறைந்திருக்கும்.

சில சமயத்தில் மண்டையை காய வைக்கும் வகையிலான ஆப்டிகல் இல்யூஷன்களும் வைரலாகி வருகின்றன. கடைசி வரையில் அவற்றில் மறைந்திருக்கும் உருவங்களையே கண்டறிய முடியாமல் பலரும் திணறும் நிலை ஏற்படுகிறது. இப்படிப்பட்ட ஒரு ஆப்டிகல் இல்யூஷன் இமேஜ் ஒன்றை தான் இப்போது நாம் பார்க்க போகிறோம். தற்போது வைரலாகி வரும் ஆப்டிகல் இல்யூஷனில் கருப்பு நிறத்தில் உள்ள பூனைகள் சிறிதும், பெரிதுமாக காணப்படுகின்றன. இந்த பூனைகளின் கூட்டத்தில் ஒரு எலி மறைந்துள்ளது. அந்த எலியை தான் நீங்கள் கண்டுபிடிக்க வேண்டும். அதுவும் வெறும் ஒன்பதே வினாடிகளில். கடினமான ஒரு டாஸ்க் தான். முயற்சி செய்து பாருங்கள்.

நீங்கள் விடை கண்டுபிடிக்க வேண்டிய ஆப்டிகல் இல்யூஷன் இமேஜ் கீழே உள்ளது.

பூனைகள் கூட்டத்தை உரு உற்று பார்த்து கண்கள் களைத்து விட்டதா.?

நீங்கள் இன்னும் மறைந்திருக்கும் எலியை கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் உங்களுக்காக ஒரு சிறிய க்ளூவை இங்கே தருகிறோம். பச்சை கலர் பேக்ரவுண்டில் இருக்கும் பூனைகள் கூட்டத்தில் சிறிய மற்றும் பெரிய பூனைகள் இருக்கிறதல்லவா?

இவற்றில் நீங்கள் இரு அளவிலான பூனைகளையும் உன்னிப்பாக பார்க்க தேவை இல்லை. இந்த ஆப்டிகல் இல்யூஷன் இமேஜில் உள்ள சிறிய சைஸ் பூனைகளை மட்டும் நன்கு கவனமாக உற்று பார்த்தாலே போதும். கண்ணுக்கு எளிதில் புலப்படாமல் இருக்கும் எலியை எளிதாக கண்டுபிடித்து விட முடியும் என்கிறார்கள் இதற்கான விடை தெரிந்தவர்கள். பூனைகளுக்கு மத்தியில் மறைந்திருக்கும் எலியை உங்களால் கண்டுபிடிக்க முடிகிறதா என்று முயற்சித்து பார்த்து விட்டு பதில் தெரிந்தால் கமெண்டில் சொல்லுங்கள்.

Tags:Optical Illusion

சிறந்த கதைகள்