Home / News / trend /

சிறுத்தைக்கு ராக்கி கட்டிய ராஜஸ்தானிய பெண் - வைரலாகும் புகைப்படம்.!

சிறுத்தைக்கு ராக்கி கட்டிய ராஜஸ்தானிய பெண் - வைரலாகும் புகைப்படம்.!

ராக்கி

ராக்கி

Viral Photo | ராஜஸ்தானை சேர்ந்த பெண் ஒருவர் சிறுத்தைக்கு ராக்கி கட்டும் புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. சிறுத்தைக்கு ராக்கி கட்டும் பெண் என்று சொல்லும் போதே, பல விதங்களில் ஆச்சரியமாகத் தோன்றுகிறது.

வடமாநிலங்களில் மிகவும் விமரிசையாக கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்று ரக்ஷா பந்தன். சகோதர சகோதரிகளுக்கு இடையிலான அன்பையும் பிணைப்பையும் அதிகரித்து சகோதரர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் பாதுகாப்பாகவும் ஆதரவாகவும் இருப்பார்கள் என்பதை கொண்டாடும் ஒரு விழா தான் ரக்ஷாபந்தன். ரக்ஷா பந்தன் அன்று தனது சகோதரருக்கு ராக்கி கட்டி, ஆரத்தி எடுத்து பெண்கள் இனிப்பு வழங்குவார்கள் .

ஆண்கள் தனது சகோதரிகளுக்கு பணம் அல்லது பரிசு கொடுத்து ஆசீர்வாதம் செய்வார்கள், பெரியவர்களாக இருந்தால் ஆசி பெறுவார்கள். வட மாநிலங்களில் பரவலாக இருந்த இந்த பண்டிகை தற்போது  நாடு முழுவதுமே கொண்டாடப்பட்டு வருகிறது. உடன் பிறக்காதவர்களைக் கூட, ராக்கி கட்டி அண்ணனாக அல்லது தம்பியாக ஏற்றுக் கொள்ளும் அழகான நாள் தான் இது. இந்த ஆண்டு ரக்ஷாபந்தன் சில நாட்களுக்கு முன்புதான் பரவலாக கொண்டாடப்பட்டது.

இது போன்ற கொண்டாட்டங்களில், பண்டிகைகளின் போது வித்தியாசமான மற்றும் நெகிழ்ச்சியூட்டும் ஏதேனும் ஒரு புகைப்படமோ, வீடியோவோ இணையத்தில் வைரலாகும். அந்த வகையில் ராஜஸ்தானை சேர்ந்த பெண் ஒருவர் சிறுத்தைக்கு ராக்கி கட்டும் புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. சிறுத்தைக்கு ராக்கி கட்டும் பெண் என்று சொல்லும் போதே, பல விதங்களில் ஆச்சரியமாகத் தோன்றுகிறது.

ஒரு காட்டுவிலங்கான சிறுத்தைக்கு எப்படி ராக்கி கட்ட முடியும் என்ற சந்தேகமும் எழுகிறது.  அதே நேரத்தில் அனைத்து உயிரினங்களுமே ஒன்றோடொன்று சார்ந்து இருக்கிறது என்பது இந்த புகைப்படம் மூலம் அழகாக புரிந்து கொள்ளலாம். சிறுத்தைக்கு ராக்கி கட்டும் புகைப்படத்தை  அதிகாரியான சுசந்தா நந்தா பகிர்ந்துள்ளார்

Also Read : மறைந்திருக்கும் பறவையை 7 வினாடிகளுக்குள் கண்டுபிடித்தால் நீங்கள் கில்லாடிதான்! 

“ பல காலமாக மனிதர்களுடன் மிக நெருக்கமாக மிருகங்களும் வாழ்ந்து வருகிறது. அன்பையும் பாசத்தையும் மனிதர்கள் மிருகங்களுடன் பகிர்ந்து, ஒரு குடும்பமாக வாழ்ந்து வருகிறார்கள். அதை நிரூபிக்கும் வகையில் இந்த புகைப்படத்தில் இருக்கும் ராஜஸ்தானை சேர்ந்த ஒரு பெண்மணி காயம்பட்ட சிறுத்தைக்கு தன்னுடைய அன்பையும் பரிவையும் வெளிப்படுத்த ராக்கி கட்டுகிறார்” என்று சுசந்தா நந்தா ட்விட்டரில் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

377

அந்த புகைப்படத்தில் உடல் நலம் குன்றிய சிறுத்தையை வன அலுவலர்கள் தூக்கி செல்வது போல இருக்கிறது. அவர்கள் அந்த சிறுத்தைக்கு உரிய சிகிச்சை அளிப்பதற்காக கொண்டு செல்லும் போது, சிறுத்தை நலம் பெற வேண்டி, அந்தப் பெண்மணி சிறுத்தைக்கு ராக்கி கட்டி இருக்கிறார்.

Also Read : மலைப்பாம்புடன் போராடி நாயை மீட்ட சிறுவர்கள்.. பார்க்கும் போதே அச்சத்தை ஏற்படும் வீடியோ இணையத்தில் வைரல்!

இவருக்கு மட்டுமல்லாமல் நம்முடைய காடுகளை பாதுகாக்கும் அனைத்து ஊழியர்களுக்கும் நன்றியும் பாராட்டுகளும் தெரிவித்து கொள்கிறேன் என்று இணையம் முழுக்க இவர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. அது மட்டுமல்லாமல் காடுகளும் வனவிலங்குகளும் மற்ற உயிரினங்களும் இல்லை என்றால் மனிதர்கள் வாழ முடியாது. அனைவருமே ஒருவரை ஒருவர் சார்ந்துதான் வாழ்ந்து வருகிறோம். இந்த உலகம் மனிதர்களுக்கு மட்டுமானது அல்ல என்பது அவ்வப்போது நிரூபிக்கப்பட்டு வருகிறது என்று மற்றொரு யூசர் கமெண்ட் செய்திருக்கிறார்.

Tags:Photo, Raksha Bandhan, Trending