ரயில்களில் உணவு மற்றும் பானங்கள் ஆகியவை மலிவான விலையில் கிடைக்கும் என்று நீங்கள் நினைத்துக் கொண்டிருந்தால் உங்களுக்கு அதிர்ச்சி தான் மிஞ்சும். ரயில் பயணத்தின் போது ஒரு கப் டீ அருந்துவதற்காக பயணி ஒருவர் ரூ.70 செலுத்தினார் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? உங்களுக்கு அதிர்ச்சி அளிப்பதாக இருந்தாலும் இது தான் உண்மையில் நடந்தது.
அண்மையில் சதாப்தி விரைவு ரயிலில் பயணம் செய்தவர்களில், பயணி ஒருவர் ஒரு கப் டீ வாங்கினார். அவரிடம் டீ-யின் கட்டணமாக ரூ.20 மற்றும் அதற்கு சேவை கட்டணமாக ரூ.50 என மொத்தம் ரூ.70 வசூல் செய்துள்ளனர். இதற்கான பில்லையும் ரயில் பணியாளர்கள் வழங்கினர். பயணி அந்த பில்-ஐ சமூக வலைதளங்களில் பகிர்ந்த நிலையில், அது வைரல் ஆனது.
பயணம் எப்போது நடந்தது
Also Read : கணவரை வாடகைக்கு விட்டு டிரெண்டான மனைவி... குடும்ப சூழலால் நிகழ்ந்த வினோதம்!
ஆனால், அவரது பதிவிற்கு பதில் அளித்த நெட்டிசன்கள், கூடுதலாக வசூல் செய்யப்பட்டிருப்பது ஜிஎஸ்டி வரி அல்ல, அது சேவைக் கட்டணம் என்று திருத்தம் செய்தனர். அதே சமயம், சேவைக் கட்டணம் என்றாலும் கூட ரூ.50 வசூல் செய்வது என்பது மிக, மிக அதிகம் என்றும் குறிப்பிட்டிருந்தனர்.
புகார்கள் புதிதல்ல
ரயில்களில் உணவு மற்றும் இதர சேவைகளை வழங்கும் ஐஆர்சிடிசி நிறுவனத்தின் மீது இதுபோன்ற புகார்கள் வருவது இது முதல்முறை அல்ல. எண்ணற்ற முறை இதுபோல பல புகார்களை பயணிகள் முன்வைத்துள்ளனர். ஆனால், எந்தவொரு புகாருக்கும் அவர் செவி சாய்க்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
விளக்கம் அளித்த ரயில்வே துறை
பயணியிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டதாகப் புகார் எழுந்த நிலையில் அதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். அதாவது, கடந்த 2018ஆம் ஆண்டில் இந்திய ரயில்வே துறை ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டிருக்கிறது. ராஜ்தானி அல்லது சதாப்தி போன்ற ரயில்களில் பயணம் செய்யும் பயணிகள், டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும்போதே உணவு மற்றும் பானங்களுக்கும் பதிவு செய்துவிட வேண்டும். அவ்வாறு பதிவு செய்யாமல் பயணத்தின் போது நீங்கள் வாங்கும் டீ, காஃபி அல்லது உணவு போன்றவற்றுக்கு சேவைக் கட்டணமாக ரூ.50 வசூல் செய்யப்படும் என்று அந்த சுற்றிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதற்கு முன்பு சதாப்தி மற்றும் ராஜ்தானி ரயில்களில் உணவு ஆர்டர் என்பது கட்டாயமாக இருந்திருக்கிறது. அது விருப்பத்திற்கு உரியதாக மாற்றம் செய்யப்பட்ட பிறகு தான், முன்பதிவு செய்யாமல் பயணத்தின் போது ஆர்டர் செய்யும் பயணிகளிடம் சேவைக் கட்டணம் வசூல் செய்யப்படுகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags:Indian Railways, Trending, Viral