Home / News / trend /

ஈரானில் இருந்து இந்தியா வந்த பார்சிகளின் நவ்ரோஸ் புத்தாண்டு இன்று...!

ஈரானில் இருந்து இந்தியா வந்த பார்சிகளின் நவ்ரோஸ் புத்தாண்டு இன்று...!

பார்சிகளின் நவ்ரோஸ் புத்தாண்டு

பார்சிகளின் நவ்ரோஸ் புத்தாண்டு

Navroz: இந்தியாவின் மகாராஷ்டிரா மற்றும் குஜராத்தில் இரு மாநிலங்களிலும் கணிசமான பார்சி மக்கள் வசிக்கும் காரணத்தால் அந்த மாநிலங்களில் மிக முக்கியமான விழாவாக நவ்ரோஸ் கொண்டாடபடுகின்றன

பார்சி புத்தாண்டு இன்று. நவ்ரோஸ்  திருவிழா ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களுக்கு இடையில் வருகிறது, பாரசீக மொழியில் 'நவ்' என்பது 'புதிய' என்பதைக் குறிக்கிறது, 'ரோஸ்' என்றால் 'நாள்' என்று பொருள்படும்.

பார்சி புத்தாண்டைக் கொண்டாடும் இந்த பாரம்பரியம் ஈரானிய நாட்காட்டியின் தொடக்கத்தைக் குறிக்கும் வகையில் கடந்த 3,000 ஆண்டுகளாக ஈரானியர்கள் மற்றும் ஜோராஸ்தியரால் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

சரதுசம்/ Zoroastrianism, உலகின் பழைமை வாய்ந்த சமயங்களில் ஒன்றாகும். சிறுபான்மையாக இது மசுதயசுனா, மயியானியம், சரத்துசரின் நெறி என்றும் அழைக்கப்படுகிறது. ஈரானிய இறைதூதர் சொராட்டிரரின் போதனைகளை அடிப்படையாகக் கொண்டு, பேரறிவு வடிவமான அகுரா மஸ்தா எனும் இறைவனைப் போற்றுவதாக அமைந்துள்ளது. இந்த மதவழி வந்த, பார்சி சமயத்தவர் கி.பி. 7-8 -ஆம் நூற்றாண்டுகளில் பாரசீகத்திலிருந்து இந்தியாவில் குடியேறியவர்களின் மரபுவழி வந்தவர்கள்.

தேதி:

உலகளவில் மார்ச் மாதத்தில் கொண்டாடப்பட்டாலும், நவ்ரோஸ் 200 நாட்களுக்குப் பிறகு இந்தியாவில், ஆகஸ்ட் மாதத்தில் கொண்டாடப்படுகிறது. ஏனெனில் இங்குள்ள பார்சிகள், லீப் வருடங்களைக் கணக்கில் கொள்ளாத ஷாஹென்ஷாஹி(Shahenshahi) நாட்காட்டியைப் பின்பற்றுகிறார்கள்.

உண்ணாவிரதம் என்னும் ஆயுதம் மூலம் போராட்டங்களை தடுத்து நிறுத்திய காந்தியின் வளர்ப்பு மகள் பீபி சலாம் பற்றித் தெரியுமா?

அதோடு சுவாரஸ்யமாக, இந்தியாவில் மக்கள் இதை வருடத்திற்கு இரண்டு முறை கொண்டாடுகிறார்கள் - முதலில் ஈரானிய நாட்காட்டியின் படியும்  இரண்டாவது ஷஹென்ஷாஹி நாட்காட்டியின் படியும் கொண்டாடப்படுகிறது. பாகிஸ்தானில் உள்ளவர்களும் இந்த முறையையே பின்பற்றுகிறார்கள்.

இந்த ஆண்டு, ஆகஸ்ட் 16, செவ்வாய் அன்று இந்தியாவில் நவ்ரோஸ் கொண்டாடப்படுகிறது.

வரலாறு:

நவ்ரோஸ் அல்லது ஜாம்ஷெட்-இ-நவ்ரோஸ் அல்லது ஜாம்ஷெட்-இ-நூரோஸ் திருவிழா பாரசீக மன்னரான ஜம்ஷெட்டின் பெயரால் உருவாக்கப்பட்டது, அவர் பாரசீக ஷாஹென்ஷாஹி நாட்காட்டியை உருவாக்கிய பெருமைக்குரியவர். புராணத்தின் படி, ஜம்ஷெட் குளிர்காலத்தின் வடிவத்தில் வந்த ஒரு பேரழிவிலிருந்து உலகைக் காப்பாற்றினார்.

377

ஜம்ஷெட் மன்னன் விலையுயர்ந்த ரத்தினங்கள் பதிக்கப்பட்ட சிம்மாசனத்தைப் பயன்படுத்தினான். அதன் ஒளியில் சூரியனை விட பிரகாசமாக பிரகாசித்தார், அதனால் ஒரு புதிய நாள் பிறந்தது, அதற்கு நவ்ரோஸ் என்று பெயரிடப்பட்டது. அதையே திருவிழாவின் பெயராகவும் வைத்துவிட்டனர்.

கொண்டாட்டங்கள்:

இந்தியாவின் மகாராஷ்டிரா மற்றும் குஜராத்தில் இரு மாநிலங்களிலும் கணிசமான பார்சி மக்கள் வசிக்கும் காரணத்தால் அந்த மாநிலங்களில் மிக முக்கியமான விழாவாக நவ்ரோஸ் கொண்டாடபடுகின்றன. இந்த நாளில் மக்கள் தங்கள் வீடுகளில் உள்ள குப்பைகளையும் மனதில் உள்ளத் தீய எண்ணங்களையும் சுத்தம் செய்து இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறார்கள்.

பார்சிகள் தங்கள் பாரம்பரிய உடையில் உடுத்தி, தங்கள் வீடுகளை விளக்குகள் மற்றும் ரங்கோலிகளால் அலங்கரித்து, சுவையான தின்பண்டங்களைத் தயார் செய்து சுற்றத்துடன் பகிர்ந்து உண்டு  மகிழ்கின்றனர்.

இறால், மோரி தார், பத்ரா நி மச்சி, ஹலீம், அகூரி, ஃபலூடா, அம்பகல்யா, தன்சாக், ராவோ, சாலி போட்டி, குங்குமப்பூ புலாவ் போன்ற சுவையான உணவுகள் பார்சி நவ்ரோஸ் நாளின் விருந்தாகும்.

Tags:Festival, India and Pakistan, Iran