Home / News / trend /

நீண்ட நேரம் ஃபோன் பயன்படுத்த வேண்டாம் - இப்படிக்கு செல்போனை கண்டுபிடித்த மார்டின் கூப்பர்

நீண்ட நேரம் ஃபோன் பயன்படுத்த வேண்டாம் - இப்படிக்கு செல்போனை கண்டுபிடித்த மார்டின் கூப்பர்

மார்டின் கூப்பர்

மார்டின் கூப்பர்

Trending | செல்போனில் ஸ்க்ரோலிங் செய்வதிலேயே அதிக நேரத்தை செலவிடுபவர்களுக்கு சில வெளிப்படையான ஆலோசனைகளை வழங்கியுள்ளார் உலகின் முதல் மொபைல் ஃபோனை கண்டுபிடித்தவர்.

செல்போனில் ஸ்க்ரோலிங் செய்வதிலேயே அதிக நேரத்தை செலவிடுபவர்களுக்கு சில வெளிப்படையான ஆலோசனைகளை வழங்கியுள்ளார் உலகின் முதல் மொபைல் ஃபோனை கண்டுபிடித்தவர்.

93 வயதான அமெரிக்க பொறியியலாளர் மார்ட்டின் கூப்பர், ஒரு நாளைக்கு ஐந்து மணிநேரத்திற்கு மேல் தங்கள் தொலைபேசிகளைப் பயன்படுத்துபவர்கள் "உங்களுக்கான வாழ்க்கையைப் பெறுங்கள்!" என அட்வைஸ் செய்துள்ளார். பெத்த அம்மா, அப்பா சொல்லியே கேக்கல… இவர் யாரு சொல்றது என்று நீங்கள் நினைக்கலாம். செல்போன் எனும் சாதனத்தை முதன்முதலில் கண்டுபிடித்தவர் இவர்தான். இவரேதான் தற்போது, உங்கள் முன்னுரிமைகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என சொல்கிறார்.

இந்த வார தொடக்கத்தில் பிபிசிக்கு அளித்த பேட்டியில், கூப்பர் தான் செல்போனில் நேரத்தை செலவிடுவதில்லை என்று கூறினார்.

"நான் எனது மொபைல் ஃபோனை எனது தினசரி நேரத்தில் 5 சதவீதத்திற்கும் குறைவாகவே பயன்படுத்துகிறேன் என்று யூகிக்கிறேன்." என்றும் அவர் தெரிவித்துள்ளார். யோசித்துப் பாருங்கள்.., ஒரு நாளைக்கு சராசரியாக ஒரு மணி நேரம் மட்டும் தான் அவர் தனது செல்போனை பயன்படுத்துகிறார். ஆனால், நாமோ 20 நிமிடத்தில் முழுவதுமாக சார்ஜ் ஆகும் QWICK CHARGE வகை போன்களை வாங்குகிறோம்… அப்படிப்பட்ட போனில் கூட சார்ஜ் போட்டுக் கொண்டே ஃபோனை நோண்டுபவர்களும் நம்மில் இருக்கத்தான் செய்கிறார்கள்.

Also Read : கேன்சர் என பொய் சொல்லி ரூ. 43 லட்சத்தை சுருட்டிய பெண்.. என்ன செய்தார் தெரியுமா?

”ஒரு நாளில் ஐந்து மணிநேரத்திற்கும் அதிகமாக செல்போனில் செலவழிப்பவர்களிடம் நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள் என்று கேட்டதற்கு, அதற்கு அவர் நேர்மையாக இவ்வாறு பதிலளித்துள்ளார்.

"நீங்கள் உண்மையில் ஒரு நாளைக்கு ஐந்து மணிநேரம் செலவிடுகிறீர்களா?" அப்படி எனில் "உங்களுக்கான உண்மையான ஒரு வாழ்க்கையைப் பெறுங்கள்!" என்று தான் நான் கூறுவேன் என பதிலளித்துள்ளார்.

செல்போனின் கண்டுபிடிப்பாளராக இருந்தபோதிலும், கூப்பர் பிபிசி-யிடம், மக்கள் தங்கள் தொலைபேசிகளில் குறைந்த நேரத்தை செலவிட வேண்டும் என்றும் கொஞ்சம் வாழ வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

377

செல்போன் பயன்பாட்டு கண்காணிப்பு நிறுவனமான App Annie இன் தரவுப்படி, மக்கள் ஒரு நாளைக்கு சராசரியாக 4.8 மணிநேரம் தங்கள் செல்போன்களில் செலவிடுகிறார்கள். இது வாரத்திற்கு 33.6 மணிநேரமும், மாதத்திற்கு 144 மணிநேரமும் ஆகும்.

1973 ஆம் ஆண்டில், கூப்பர் மோட்டோரோலா டைனாடாக் 8000X என்ற முதல் வயர்லெஸ் செல்லுலார் கருவியைக் கண்டுபிடித்தார்.

இதன் உருவாக்கம் பற்றி சிபிஎஸ் செய்தி நிறுவனத்திடம் பேசியபோது அவர், "ஃபோன் SWITCH OFF ஆவதற்கு முன்பு நீங்கள் 25 நிமிடங்கள் வரை பேசலாம்." என்றார்.

கூப்பர் செல்போனைக் கண்டுபிடிக்கும் போது, மக்கள் அது எப்படி வேலை செய்யும் என்று யோசிப்பதற்கு முன்பே அது எப்படி இருக்கும் என்று கற்பனை செய்ததாகவும் அவர் கூறினார்.

"உங்கள் பாக்கெட்டில் வைக்கும் அளவுக்கு சிறியது, உங்கள் காதுகளுக்கும் வாய்க்கும் இடையில் செல்லும் அளவுக்கு பெரியது," என்று அவர் கூறினார்.

மோட்டோரோலாவில் பணிபுரியும் போது, முதல் கையடக்க போலீஸ் RADIO SYSTEM உட்பட பல தயாரிப்புகளை கண்டுபிடிக்க உதவினார்.

கூப்பர் சிகாகோவில் உள்ள இல்லினாய்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் (IIT) 1950 ஆம் ஆண்டு மின் பொறியியலில் இளங்கலைப் பட்டம் பெற்றார். பின் அவர் அமெரிக்க கடற்படையில் சேர்ந்து, கொரிய போரின் போது பணியாற்றினார். போருக்குப் பிறகு, அவர் Teletype Corporation இல் சேர்ந்தார், மேலும் 1954ம் ஆண்டு முதல் அவர் மோட்டோரோலாவில் பணியாற்றத் தொடங்கினார்.

 

Tags:Mobile phone, Trending, Viral