குழந்தைகளோடு சல்லிக்கட்டு விளையாடும் காளைமாடு ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது. அடேய் என்னடா பண்றிங்க.. அது சல்லிக்கட்டு மாடுடா.. என இணையத்தில் பதிவிட்டுள்ளனர். மூன்று குழந்தைகள் ஒன்று சேர்ந்து பெரிய காளை மாட்டுடன் இணைந்து மாட்டின் கொம்பினை பிடித்துக் கொண்டு மாடு பிடி மாடு என கூறிக்கொண்டு விளையாடி மகிழ்கின்றனர். மழலை மனம் கொண்ட காலை மாடு அவர்களிடம் சேர்ந்து விளையாடுகிறது. இந்த வீடியோ இணையத்தில் பலரின் மனம் கவர்ந்துள்ளது.
ஏறு தழுவல், மஞ்சு விரட்டு அல்லது சல்லிக்கட்டு (ஜல்லிக்கட்டு) என்பது தமிழர்களின் மரபுவழி விளையாட்டுகளில் ஒன்றாகும். ஏறு என்பது காளை மாட்டைக் குறிக்கும். மாட்டை ஓடவிட்டு அதை மனிதர்கள் அடக்குவது, அல்லது கொம்பைப் பிடித்து வீழ்த்துவதான விளையாட்டு. புதுக்கோட்டை மாவட்டம் சல்லிக்கட்டின் "சொர்க்க பூமியாக "இன்றளவும் திகழ்ந்து வருகிறது.
தமிழர்களின் வீர விளையாட்டுகளில் ஒன்றாகக் கருதப்படும் இவ்விளையாட்டு, மதுரை மாவட்டம் அவனியாபுரம் , அலங்காநல்லூர் மற்றும் பாலமேடு எனும் ஊர்களிலும் , திருச்சி பெரிய சூரியூர் , நாமக்கல் மாவட்டம் அலங்காநத்தம் , சேலம் மாவட்டம் தம்மம்பட்டி , கூலமேடு , தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் , புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை , வேலூர் மாவட்டம் திருவண்ணாமலை மாவட்டம் ஆதமங்கலம் புதூர் மற்றும் தேனீமலை, தேனி மாவட்டம் போன்ற ஊர்களில் , ஆண்டுதோறும் தை மாதத்தில் பொங்கல் திருநாளையொட்டி நடத்தப் பெறுகின்றன.
இதிலிருந்து கி.மு. 2000 ஆண்டு அளவிலேயே ஏறுதழுவல் வழக்கத்தில் இருந்தது என்று ஐராவதம் மகாதேவன் போன்ற அறிஞர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
Tags:Trending, Viral Video