Home / News / trend /

உணவுப் பிரியர்களே இணையத்தை கலக்கும் 'ஹெலிகாப்டர் பேல்' பற்றி தெரியுமா.?

உணவுப் பிரியர்களே இணையத்தை கலக்கும் 'ஹெலிகாப்டர் பேல்' பற்றி தெரியுமா.?

Trending

Trending

Helicopter Bhel | சாலையோரத்தில் பேல்பூரி கடை நடத்தும் நபரின் ‘ஹெலிகாப்டர் பேல்’ வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது...

உணவுப் பிரியர்களின் தேடலுக்கு சவால் விடும் வகையில் ஏராளமான உணவு சம்பந்தமான வீடியோக்கள் சோசியல் மீடியாக்களில் கொட்டிக்கிடக்கின்றன. ஃபுட் ரிவ்யூவர்கள் பலரும் தினந்தோறும் புதுமையான உணவுகளைக் கண்டுபிடித்து சோசியல் மீடியாவில் வீடியோக்களை பதிவிட்டு வருகின்றனர். பல்வேறு இடங்களுக்குப் பயணம் செய்து, அனைத்து வகையான தனித்துவமான உணவுகளையும் யூ-டியூப், இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு, புது ட்ரெண்ட்டை உருவாக்கி வருகின்றனர்.

குறிப்பாக இன்ஸ்டாகிராம் பக்கம் போனாலே சாக்லெட் மேகி, மேகி நூடுல்ஸ் ஐஸ்கிரீம் ரோல், ஃபேன்டா மேகி, மேகி பானி பூரி, பீட்சா தோசை, பறக்கும் தோசை, 100க்கும் அதிகமான வகைகளில் இட்லி என வித்தியாசமான ரெசிபி வீடியோக்கள் வைரலாகி வருகின்றன. சமீபத்தில் இணையத்தில் மும்பையில் உள்ள ஸ்ரீபாலாஜி கடையின் பறக்கும் தோசை வீடியோ தாறுமாறு வைரலானது. அதில் தோசை சுடும் இளைஞர் ஸ்டைலாக அதனை எடுத்து வீச, அது வாடிக்கையாளர்களின் தட்டுக்கே போய் விழும் வீடியோ லைக்குகளை வாரி குவித்தது.

இந்நிலையில் தற்போது சாலையோரத்தில் பேல்பூரி கடை நடத்தும் நபரின் ‘ஹெலிகாப்டர் பேல்’ வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. @Trollgramofficial என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அந்த வீடியோ “தீப்பொறி பறக்குது” என்ற டேக்லைன் உடன் பதிவிடப்பட்டுள்ளது. அந்த வீடியோவில் சாலையோர பேல்பூரி கடைக்காரர் ஒருவர், ஒரு பாத்திரத்தில் பொறி, வேர்க்கடலை, உருளைக்கிழங்கு, வெங்காயம், தக்காளி மற்றும் காரமான சட்னிகளை சேர்த்து காற்றை விட வேகமாக அவற்றை எல்லாம் கலக்குகிறார். பாத்திரத்திற்குள் கரண்டியை விட்டு அவர் சுற்றும், சுற்றைப் பார்க்கும் போதே கண்ணை கட்டுகிறது. கண் இமைக்கும் நேரத்தில் அனைத்தையும் சேர்த்து கலந்து, பார்க்கவே நாவூற பேல்பூரியை தட்டில் வைத்து பரிமாறுகிறார்.

மின்னல் வேகத்தில் தயாரிப்பு முறைகளை செய்வதால் இதனை நெட்டிசன்கள் ‘ஹெலிகாப்டர் பேல்’ என செல்லப்பெயர் வைத்து அழைத்து வருகின்றனர். இணையத்தில் தீயாய் பரவி வரும் இந்த வீடியோ இதுவரை 94.2 ஆயிரத்திற்கும் அதிகமான பார்வையாளர்களையும், 3 ஆயிரத்திற்கும் அதிகமான லைக்குகளையும் பெற்றுள்ளது.

Also Read : மணமேடையில் ஆக்ரோஷமாக சண்டையிட்டுக் கொண்ட மணமக்கள் - வைரல் வீடியோ

மேலும் பேல்பூரி விற்பனையாளரின் திறமையை பார்த்து வியந்து போய் நெட்டிசன்கள் பலரும் அவரை பாராட்டி வருகின்றனர். இன்ஸ்டாகிராம் யூஸரில் ஒருவர் "இன்னும் சிறிது நேரம் இப்படியே செய்து கொண்டிருந்தார் என்றால், மின்சாரமே உருவாக்கியிருக்கும்” என கடைக்காரரின் வேகத்தை பாராட்டியுள்ளார். மற்றொருவரோ இந்த சத்தம் சற்றே எரிச்சலூட்டும் விதமாக இருப்பதாக கமெண்ட் செய்துள்ளார். பறக்கும் வட பாவ், பறக்கும் தயிர் வடை ஆகியவற்றின் வரிசையில் இந்தியர்களின் விருப்பமான நொறுக்குத் தீனியான ஹெலிகாப்டர் பேலும் தற்போது இணைந்துள்ளது.

Tags:Food, Trending, Viral Video