
- News18 Tamil
- Last Updated: April 22, 2021, 12:15 IST
கடந்த 1970-ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் உலக பூமி தினம் ஏப்ரல் 22-ம் தேதி கொண்டாடப்படுகிறது. பூமியைப் பாதுகாப்பதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலேயே ‘பூமி தினம்’ கொண்டாடப்பட்டு வருகிறது.
1969-ம் ஆண்டு அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் உள்ள சாண்டா பார்பரா நகரை ஒட்டிய கடல் பகுதியில் எண்ணெய்க் கசிவு ஏற்பட்டது. அமெரிக்க வரலாற்றின் மிகப்பெரிய கொடூர நிகழ்வின் தாக்கமாக 1970-ம் ஆண்டு அமெரிக்க மக்கள் ஒன்றிணைந்து சுகாதாரமான சுற்றுச்சூழல் பாதுகாப்பு வேண்டுமென என கடலோரமாகவே ஊர்வலம் சென்றனர்.
அந்த ஆண்டிலிருந்து உலக பூமி தினம் ஆண்டுதோறும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. பூமியின் பாதுகாப்பை நாம்தான் உறுதி செய்யவேண்டுமென ஐநா இந்தத் தினத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.
\1\6ALSO READ : உங்களுக்கு செடி வளர்க்க ஆசை, ஆனா வீட்டில் குறைந்த இடமே உள்ளதா..? இப்படி செஞ்சு பாருங்க..!
இதற்காக கூகுள் கூட ஒரு சிறப்பு டூடுள் வெளியிட்டுள்ளது கவனத்திற்குரியது. இதற்காக கூகுள் தனது முகப்பு பக்கத்தில் இந்த ஆண்டு வெளியிட்டுள்ள டூடுளில் சிறுமி ஒருவர் மரக்கன்று நட்டு வைக்கின்றார்.
அது வளர்ந்து மரமான பின்னர் அவருக்கே நிழல் , ஆக்சிஜன் தருகின்றது. அதில் இருந்து ஒரு சிறு மரக்கன்றை எடுத்து அவரது தலைமுறை வைக்க அந்த மரம் பின்னாளில் வளர்ந்து அவரது சந்ததிக்கே பலன் அளிக்கின்றது. இவ்விதம் தொடர்ந்து அனைவரும் மரம் நடத் தொடங்குகின்றனர். நட்டமரம் அனைத்தும் வளர்ந்து பலன் தரும் விதமாக டூடுளில் கூகுள் விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளது.
மரம் நடுவதை இயல்பாக்குவோம் என நடிகர் விவேக் கூறிவிட்டு 33 லட்சம் மரங்களை நட்டு அனைவருக்கும் ரியல் ஹீரோவாக மாறி மறைந்தாலும் அவர் நினைவாக தற்போது வரை பலர் மரம் நட்டு வருகின்றனர். மரம் நடுதலை தமிழகத்தில் இயல்பாகக்கொள்ள வேண்டும் என கூறிய நடிகர் விவேக் இறந்து சில நாட்களே ஆன நிலையில் தற்போது பலரும் இந்த பூமி நாளை மரம் நட்டு இணையத்தில் பதிவிட்டும் வருகின்றனர்.