புதிர் விளையாட்டுகள் நம் மனதிற்கு புத்துணர்ச்சி அளிக்கும் பொழுதுபோக்கு அம்சமாக இருப்பதோடு மட்டுமல்லாமல் நமது சிந்தனை திறனுக்கு சவால் விடுப்பதாகவும் அமைகின்றன. அதேபோல புதிர்களுக்கு விடை காணுவது மற்றவர்கள் மத்தியில் நம் திறமைக்கு ஒரு சவால் விடுப்பதைப் போல அமையும்.
இந்தச் செய்தியிலும் அத்தகைய புதிர் வினா ஒன்று கேட்கப்பட்டுள்ளது. அதாவது நாம் இயல்பாக பார்க்கும் சாதாரண நட்சத்திர வடிவம் தான் இதுவும். ஆனால், இதில் எத்தனை முக்கோணங்கள் இடம்பெற்றுள்ளது என்பதை கண்டுபிடிக்க வேண்டும். அதுவும், மணிக்கணக்கில் யோசித்து இதற்கு பதில் தரக் கூடாது.
கற்பனை கண்ணோட்டத்துடன் பார்க்கவும்
உங்கள் கண் முன்னே இருக்கும் படத்தை ஒரு கற்பனை கண்ணோட்டத்துடன் பார்க்கவும். படத்தை கொஞ்சம் மாறுபட்ட கண்ணோட்டத்துடன் அலசுங்கள். குறிப்பாக அவுட் ஆஃப் பாக்ஸ் சிந்தனை முறையில் படத்தை பார்க்கவும். இது 5 பாயிண்ட் கொண்ட நட்சத்திரம் ஆகும்.
அவ்வளவு எளிதில் பதில் கிடைக்காது
30 நொடிகளில் இந்த கேள்விக்கான பதிலை சொல்பவர்கள் மிகுந்த புத்திசாலிகள் தான். ஆனால், மிகுந்த புத்திகூர்மை உடையவர்கள் தவிர்த்து, எல்லோராலும் சரியான பதிலை இந்த கால வரையறைக்குள் சொல்லிவிட முடியாது என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.
ராஜ நாகத்தை விட மிக பயங்கரமான விஷத்தன்மை கொண்ட நத்தை! இதை பற்றி உங்களுக்கு தெரியுமா?
விடையை விரைவாக சொல்லிவிட வேண்டும் என்ற வேகத்தில், கடகடவென முக்கோணங்களை நீங்கள் எண்ணிக் கொண்டிருப்பீர்கள். ஆனால், எப்படியாகினும் உங்கள் கணிப்பில் சில முக்கோணங்கள் விடுபட்டு விடக் கூடும். ஆகவே, விடை சொல்வதற்கு முன்னால் இந்தப் படத்தை ஒரு கனம் ஆழ்ந்து உற்று நோக்கி பார்க்கவும்.
மிகப் பெரிய ஹிண்ட்
இந்த 5 பாயிண்ட் ஸ்டார் என்பது பெண்டகன் வடிவம் கொண்டதாகும். ஆம், நீங்கள் ஆழ்ந்து உற்று நோக்கி பார்த்தால் இந்த நட்சத்திரமானது ஒரு பெண்டகன் வடிவத்தில் இருக்கும். இந்த பெண்டகனில் மொத்தம் 10 வெர்டிசைஸ் இருக்கின்றன. 5 வெர்டிசைஸ் வெளிபுறத்திலும், மேலும் 5 வெர்டிசைஸ் உள்புறத்திலும் இருக்கின்றன.
விடை இதுதான்
இந்த பெண்டகன் வடிவம் கொண்ட நட்சத்திரத்தில் மொத்தம் 10 முக்கோணங்கள் இருக்கின்றன. உங்கள் சிந்தனை திறனையும், கற்பனை திறனையும் பயன்படுத்தி இந்த புதிருக்கான விடையை கண்டுபிடிக்க முடிந்ததா? இந்தப் புதிர் சற்று சவால் மிகுந்தது என்றாலும் கூட சற்று ஆழ்ந்து சிந்தித்தால் எளிதில் விடை கிடைத்துவிடும். இப்போது இதே படத்தை உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு அனுப்பி வைத்து அவர்களது சிந்தனை திறனுக்கு சவால் விடுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.