Home / News / trend /

கணவரை வாடகைக்கு விட்டு டிரெண்டான மனைவி... குடும்ப சூழலால் நிகழ்ந்த வினோதம்!

கணவரை வாடகைக்கு விட்டு டிரெண்டான மனைவி... குடும்ப சூழலால் நிகழ்ந்த வினோதம்!

காட்சிப்படம்

காட்சிப்படம்

Trending | இங்கிலாந்தைச்சேர்ந்த பெண் ஒருவர், குடும்ப சூழ்நிலைக்காரணமாக தனது கணவரை வைத்து வித்தியாசமாக வாடகைக்கு விடும் தொழிலை நடத்திவருவது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இதோடு  சோசியல் மீடியாவிலும் இத்தம்பதி டிரெண்டாகியும் வருகின்றனர்

இங்கிலாந்தைச்சேர்ந்த பெண் ஒருவர், குடும்ப சூழ்நிலைக்காரணமாக தனது கணவரை வைத்து வித்தியாசமாக வாடகைக்கு விடும் தொழிலை நடத்திவருவது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இதோடு சோசியல் மீடியாவிலும் இத்தம்பதி டிரெண்டாகியும் வருகின்றனர்.

உலகம் முழுவதும் கொரோனா காலக்கட்டத்திற்கு பிறகு மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியைச் சந்தித்து வருகின்றனர். குறிப்பாக பலர் வேலையை இழந்து தவித்து வரும் நிலையில், புதுமையான யோசனைகளோடு பலர் சுய தொழில் செய்ய ஆரம்பித்துள்ளனர். குறிப்பாக யூடியூப் சேனல்களில் சமையல் வீடியோக்கள் போடுவது, ஆன்லைனில் பொருள்களை வாங்கி விற்பனை செய்வது, வீட்டில் உள்ள பழைய பொருள்களை வைத்து சிறு சிறு கைவினைப்பொருள்கள் செய்து ஆன்லைனில் விற்பனை செய்வது போன்று பல்வேறு வித்தியாசமான முறைகளைக் கையாண்டுவருகின்றனர்.

இதோடு மட்டுமின்றி சில நாம் யோசிக்க முடியாத சில விஷயங்களைப் பயன்படுத்தி வருமானம் பெற்று வருகின்றனர். அப்படி வித்தியாசமான முறையில் தொழிலைத் தொடங்கியதோடு, தற்போது சோசியல் மீடியாவில் டிரெண்டாகியும் வருகிறார் இங்கிலாத்தைச்சேர்ந்த லாரா யங் என்ற பெண்மணி.. அப்படி என்ன செய்தார் தெரியுமா?

தெரிந்தால், நிச்சயம் அனைவரையும் வியப்பில் தான் ஆழ்த்தும்…

இங்கிலாந்தைச்சேர்ந்த லாரா என்ற பெண் தனது கணவர் ஜேம்ஸ்ஸை வாடகைக்கு விட்டு பணம் சம்பாதித்துள்ளாராம்.. அது எப்படின்னு கேட்கிறீங்களா? லாராவின் கணவர் ஜேம்ஸ், வேலைக்கு சென்று விட்டு ஓய்வில் இருக்கும் போதும், எப்போதும் சுறுசுறுப்புடன் இருப்பது, வீட்டை சுத்தம் செய்வது, சின்ன சின்ன அலங்காரம் செய்வது, தோட்டத்தைத் தூய்மையாக வைத்திருப்பது, பழைய பொருள்களைக் கொண்டு வீட்டிற்கு தேவையானப் பொருள்களை செய்வது போன்ற பல்வேறு பணிகளில் ஈடுபடும் பழக்கம் உள்ளவர்.

Also Read : கேன்சர் என பொய் சொல்லி ரூ. 43 லட்சத்தை சுருட்டிய பெண்.. என்ன செய்தார் தெரியுமா?

எனவே கணவரின் இதுப்போன்ற திறமைகளை வைத்து எப்படி பணம் சம்பாதிப்பது? போன்ற யோசித்துள்ளார் லாரா. அப்போது தான் தனது கணவரின் திறமையை தனது வீட்டிற்கு மட்டுமில்லாமல், ஏன் மற்றவர்களுக்கு பயன்படுத்தக்கூடாது என திட்டமிட்டுள்ளார். இதனையடுத்து திறமையுள்ள எனது கணவர் விற்பனைக்கு என்று அதாவது Rent my Handy husband என்ற இணையதளம் ஒன்றை உருவாக்கி வீடுகளுக்கு வேலைக்கு அனுப்பியுள்ளார்.

இப்படி மற்ற வீடுகளுக்கு செல்லும் லாராவின் கணவர் ஜேம்ஸ், தன்னுடைய திறமையின் மூலம் பழைய பொருள்களைக் கொண்டு புதிய கைவினைப் பொருள்களை உருவாக்கியுள்ளார்.

377

கணவரை வாடகைக்கு விடும் முடிவு ஏன்?

லாரா- ஜேம்ஸ் தம்பதியினருக்கு உள்ள 3 குழந்தைகளில் இருவருக்கு ஆட்டிசம் பாதிப்பு இருந்துள்ளது. இவர்களின் அத்தியாவசியத் தேவைகளை பூர்த்தி செய்யவே, நிறுவனம் ஒன்றில் இரவு நேர தொழிலாளியாகப் பணிபுரிந்து வந்துள்ளார். ஆனால் இவருடைய வருமானம் போதியதாக இல்லை. இந்த சூழலில் தான் சரியான வேலையும் இல்லாமல் தவித்து வந்த நிலையில், லாரா அவரின் திறமையை வைத்து இப்படி ஒரு தொழிலை ஆரம்பித்துள்ளார். இதற்குக் கட்டணமாக 35 பவுண்ட்கள் அதாவது இந்திய மதிப்பில் ரூ.3, 365 ஆகும் என்று தெரிய வந்துள்ளபோது, இது குறித்து லாரா தெரிவிக்கையில், சின்ன வேலைகளுக்கு பில்டர்ஸ்கள் யாராலும் வர மாட்டார்கள் என்பதால் தன்னுடைய கணவர் அந்த பணிகளை எளிமையாக மேற்கொள்கிறார். இதன் மூலம் நல்ல வருமானமும் கிடைப்பதாகவும் நெகிழ்வுடன் கூறியுள்ளார்.

இந்த வருமானம் ஆட்டிசம் பாதித்த குழந்தைகளைப் பராமரிக்க உதவுவதோடு, மேற்படிப்பு படிக்கவும் உதவியாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இதோடு பகுதி நேர வேலைக்கான வருமானம் அனைவருக்கும் பொருந்துவதில்லை எனவும், பணம் கொடுக்க வசதியில்லாத குடும்பத்தினர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் வயதானவர்களுக்கு குறைந்த கட்டணத்தில் அவர்கள் கேட்கும் வேலையை செய்துக்கொடுப்போம் என்றும் கூறியுள்ளார்.

லாராவின் கணவர் ஜேம்ஸ் தெரிவிக்கையில், பகுதி நேரமாக வேலைப்பார்ப்பதன் மூலம் கிடைக்கும் வருமானம் தனது குடும்பத்திற்கு உதவுவதோடு, மனைவிக்கு உதவியாக குழந்தைகளைப்பாராமரிக்க முடிகிறது எனவும் கூறுகிறார்.

தனது குடும்ப சூழலுக்காக புதுவிதமான தொழிலை மேற்கொண்டுவந்தாலும், முடியாதவர்களுக்கு உதவ வேண்டும் என்ற மனநிலையில் உள்ள இத்தம்பதியினர் நிச்சயம் பாராட்டுதலுக்குரியவர்கள் தான்…

 

Tags:England, Trending, Viral