Home / News / trend /

ஆலியா பட்டுக்கே டப் கொடுக்கும் பூனை: ‘கங்குபாய் சத்தியவாடி’ கெட்டப்பில் வைரலாகும் போட்டோ!

ஆலியா பட்டுக்கே டப் கொடுக்கும் பூனை: ‘கங்குபாய் சத்தியவாடி’ கெட்டப்பில் வைரலாகும் போட்டோ!

ஆலியா பட்டுக்கே டப் கொடுக்கும் பூனை: ‘கங்குபாய் சத்தியவாடி’ கெட்டப்பில் வைரலாகும் போட்டோ!

ஆலியா பட்டுக்கே டப் கொடுக்கும் பூனை: ‘கங்குபாய் சத்தியவாடி’ கெட்டப்பில் வைரலாகும் போட்டோ!

Alia Bhatt Viral | வெள்ளைப்புடவை, ஸ்டைலாக கூலிங் கிளாஸ் உடன் செம்ம கெத்தாக வலம் வரும் கங்குபாய் கதாபாத்திரம் சோசியல் மீடியாவில் செம்ம ட்ராண்டானது.

பாலிவுட்டில் ‘பாஜிராவ் மஸ்தானி’, ‘பத்மாவத்’ உள்ளிட்ட பிரம்மாண்ட படங்களை இயக்கிய சஞ்சய் லீலா பன்சாலியின் அடுத்த படைப்பு ‘கங்குபாய் கத்தியவாடி’. மும்பையின் சிவப்பு விளக்கு பகுதியான காமாட்டிபுராவின் டானாக வலம் வந்தவர் கங்குபாய் கொத்தேவாலி, இந்த கதையின் நாயகியாக பாலிவுட்டின் முன்னணி நடிகையான ஆலியா பட் நடித்திருந்தார்.

கிராமத்தைச் சேர்ந்த அமைதியான பெண்ணான கங்கா சிவப்பு விளக்கு பகுதியில் விற்கப்பட்டு, அதன் பின்னர் கங்குபாயாக மாறுவது தான் கதை. இதில் வெகுளியான பெண்ணாகவும், சிவப்பு ஏரியாவின் தலைவியாகவும் ஆலியா பட் வெளுத்து வாங்கியிருப்பார். வெள்ளைப்புடவை, ஸ்டைலாக கூலிங் கிளாஸ் உடன் செம்ம கெத்தாக வலம் வரும் கங்குபாய் கதாபாத்திரம் சோசியல் மீடியாவில் செம்ம ட்ராண்டானது.

இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் அஜய் தேவ்கன் நடித்துள்ளார். கொரோனா காணமாக ஒத்திவைக்கப்பட்ட நிலையில், பிப்ரவரி 25-ம் தேதி படம் வெளியானது. நெட்பிலிக்ஸ் ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாகி வரும் இந்த படம் அதிகம் பேரால் கண்டுரசிக்கப்பட்ட டாப் 10 படங்களின் பட்டியலிலும் இணைந்துள்ளது.

இந்த படத்தில் பாலிவுட் நடிகை ஆலியா பட்டின் நடிப்பு ரசிகர்களைக் கடந்து திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களிடமிருந்தும் பாராட்டுக்களை வாரிக்குவித்தது. அதேசமயத்தில் சமூக சேவகியான தனது தாயை விலைமாதுவாக சித்தரித்ததாக இப்படத்தின் உண்மையான கதாபாத்திரமான கங்குபாய் கொத்தேவாலியின் வளர்ப்பு மகன் புகார் தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. மும்பை நீதிமன்றத்தில் படத்தை வெளியிட தடைக்கோரி வழக்கு தொடரப்பட்டது. ஆனால் படத்தின் தயாரிப்பாளர்கள் மீதான அவதூறு வழக்குகளுக்கு இடைக்காலத் தடை விதித்ததை அடுத்து படம் வெளியானது.

படத்தின் மீதான எதிர்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக ஆலியா பட் நடிப்பில் அசத்தியிருந்தார். ஆலியா பட்டின் நடிப்பால் கவர்ந்திழுக்கப்பட்ட ரசிகைகள் பட்டாளம் அதே கெட்டப்பில் ரீல்ஸ் வீடியோக்களில் வலம் வந்தனர். எப்போதுமே சஞ்சய் லீலா பன்சாலி உருவாக்கும் சரித்திர கதாநாயகிகளின் கெட்டப் இளம் பெண்கள், இல்லத்தரசிகள் உள்ளிட்ட ரசிகர்கள் பட்டாளத்தை கவர்ந்திழுப்பது வழக்கமான ஒன்று. தற்போது கங்குபாய் கெட்டப்பில் இருக்கும் பூனையின் வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Read More : கண்ணி வெடியில் கால்களை இழந்த முன்னாள் ராணுவ வீரரின் உயரிய சாதனை!

377

வெள்ளை நிற துப்பாட்டாவை புடவை போல் அணிவித்து சிவப்பு நிற பொட்டு, கழுத்தில் சின்ன முத்துமாலை, மூக்குத்தி என பூனையை அச்சு அசலாக கங்குபாய் வேடத்திற்கு அதன் உரிமையாளர் மாற்றியுள்ளார். பார்த்த முதல் நிமிடத்திலேயே ஆச்சர்யத்தையும், புன்னகையையும் தரக்கூடிய இந்த போட்டோ சோசியல் மீடியாவில் லைக்குகளையும், கமெண்ட்களையும் குவித்து வருகிறது.

இந்த படம் ட்விட்டரில் வைரலான போதிலும், அதை பதிவிட்ட பயனர் அதனை தான் ஒரு ஃபேஸ்புக் குழுவில் கண்டுபிடித்ததாக கூறியுள்ளார். பலரும் ஆலியா பட்டை விட பூனையின் கெட்அப் மிகவும் அழகாக இருப்பதாக கமெண்ட் செய்து வருகின்றனர். பெரும்பாலானோர் இந்த போட்டோவை பார்த்த மாத்திரத்திலேயே விழுந்து விழுந்து சிரித்துவிட்டேன் என கமெண்ட் செய்துள்ளனர்.

 

Tags:Alia Bhatt, Trending, Viral