தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு வனப்பகுதியில் வண்ணத்துப்பூச்சி திருவிழாவை பாராளுமன்ற திமுக குழு துணை தலைவரும் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினருமான கனிமொழி எம்பி தொடங்கி வைத்தார்.
தென் மாவட்டங்களில் முதன்முறையாக தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு வனப்பகுதியில் வண்ணத்துப்பூச்சி திருவிழா தொடங்கியுள்ளது. இதையொட்டி பல்வேறு போட்டிகளும் நடக்கிறது. இயற்கை தந்த அழகுகளில் வண்ணத்துப்பூச்சிகளும் ஒன்று. அதுவும் கூட்டமாக பறக்கும் வண்ணத்துப்பூச்சிகளையும் மலர்களையும் சுற்றி வரும் போது இறக்கை அழகும், தேன் உண்ணும் காட்சியும் கண்களுக்கு குளுமையும் மனதுக்கு மகிழ்ச்சியையும் தரும். அவற்றின் இயற்கை வர்ணங்கள் கற்பனை செய்ய முடியாத காட்சியாக இருக்கிறது.
பட்டாம்பூச்சி என்று அழைக்கப்படும் இந்த வண்ணத்துப்பூச்சிகள் அனைத்து பகுதிகளிலும் உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 20000 வகை வண்ணத்துப்பூச்சி இனங்கள் உள்ளன. அந்த வகையில் தான் தூத்துக்குடி மாவட்ட வனத்துறை சார்பில் தூத்துக்குடி மாவட்டம் வல்லநாட்டில் வெளிமான் சரணாலயம் அமைக்கப்பட்டு இங்கு வெளிமாண்கள் பல்வேறு விதமான பறவை இனங்கள் மற்றும் 80 வகையான வண்ணத்துப்பூச்சிகள் காணப்படுகின்றன.
மழை வேண்டி மரங்களுக்கு திருமணம்.. வடை, பாயாசத்துடன் விருந்து வைத்த கிராமம்..!
காங்கிரஸூம் கமலும்.. ஜீரோ ப்ளஸ் ஜீரோ ஃபார்முலாதான் - எச்.ராஜா கருத்து
தூத்துக்குடியில் சமூகஆர்வலரை கொலை செய்ய முயற்சி.. வெளியான அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்
தமிழுக்கு முதல் எதிரி திராவிடம் தான் - எச்.ராஜா விமர்சனம்
பிரபல உணவகத்தில் புகுந்து ஷவர்மாவை ருசிபார்த்த தெரு நாய்... தூத்துக்குடியில் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி..
கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோவில் தைப்பூசத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
நெல்லையில் கொள்ளையடித்து திரும்பும்போது விபத்து.. போலீசில் வசமாக சிக்கிய கொள்ளை கும்பல்
கோவில்பட்டி : டாஸ்மாக் கடையில் ரூ 1.5 லட்சம் கொள்ளை.. குண்டர் சட்டத்தில் இருவர் கைது
காதலனை கரம்பிடிக்க வீட்டைவிட்டு மகள் ஓட்டம்.. மனமுடைந்த பெற்றோர் தற்கொலை.. தூத்துக்குடியில் அதிர்ச்சி!
தூத்துக்குடியில் 10 கிலோ போலி ஹெராயின் வைத்திருந்தவரிடம் போலீசாரிடம் தீவிர விசாரணை..
பிளாஸ்டிக் லைட்டர்கள் தடை செய்யப்படுமா..? தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் வைத்த கோரிக்கை..!
தொடர்ந்து வல்லநாடு வெளிமான் சரணாலயத்தில் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மான்கள், பட்டாம்பூச்சிகள், மயில்கள் அனைத்தையும் தொலைநோக்கி மூலமாகவும் கண்காணிப்பு கோபுரங்களில் இருந்தும் பார்வையிட்ட கனிமொழி எம்பி இது குறித்து அதிகாரியிடம் கேட்டு அறிந்தார்.
தொடர்ந்து கிள்ளிகுளம் வேளாண்மை கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கனிமொழி எம்.பி பள்ளி மாணவ மாணவிகள் சார்பில் வண்ணத்துப்பூச்சி குறித்த விழிப்புணர்வு பாடல்கள் மற்றும் நாடகங்களை பார்வையிட்டார். தொடர்ந்து வண்ணத்துப்பூச்சி குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அமைக்கப்பட்ட புகைப்பட கண்காட்சியையும் பார்வையிட்ட அவர் பள்ளி மாணவி மாணவிகள் எடுத்துக் கொண்டார். வண்ணத்துப்பூச்சிகள் குறித்த புத்தகத்தையும் கனிமொழி எம்பி வெளியிட்டார்.
மேலும் இங்கு அமைக்கப்பட்ட வண்ணத்துப் பூச்சிகள் குறித்த கண்காட்சியையும் ஏராளமான பள்ளி கல்லூரி மாணவ மாணவியர் பார்வையிட்டனர். இந்த நிகழ்ச்சியில் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா, தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் செந்தில்ராஜ், தூத்துக்குடி மாவட்ட வன அலுவலர் அபிஷேக் தோமர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்: முரளி கணேஷ் (தூத்துக்குடி)
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags:Kanimozhi, Local News, Tamil News, Tuticorin