PREVNEXT
ஹோம் / நியூஸ் / Thoothukudi /

மன்னார் வளைகுடாவில் முதன்முறையாக நடந்த கடல் சாகச விளையாட்டுப் போட்டி..

மன்னார் வளைகுடாவில் முதன்முறையாக நடந்த கடல் சாகச விளையாட்டுப் போட்டி..

மன்னார் வளைகுடாவில் முதன்முறையாக நடந்த கடல் சாகச விளையாட்டுப் போட்டி..

மன்னார் வளைகுடாவில் முதன்முறையாக நடந்த கடல் சாகச விளையாட்டுப் போட்டி..

இந்த போட்டியில் கிரேட் அடிப்படையில் முதல் மூன்று இடங்களில் தேர்வு செய்யப்பட்டு தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கங்கள் வழங்கப்பட உள்ளது. 

மன்னார் வளைகுடாவில் முதன்முறையாக நடந்த Kiteboarding  கடல் சாகச விளையாட்டுப் போட்டியில் இந்தியா முழுவதும் இருந்து  கடல் சாகச விளையாட்டு வீரர்கள் கலந்துகொண்டு உற்சாகமாக விளையாடினர்.

வரும் 2024 ஆம் ஆண்டு  ஒலிம்பிக்கில் Kiteboarding என்ற கடல் விளையாட்டு சேர்க்கப்பட்டுள்ளது. இந்த விளையாட்டை இந்திய அளவில் பிரபல படுத்துவதற்காகவும், நமது நாட்டு இளைஞர்கள் மத்தியில் இந்த விளையாட்டு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவும் தூத்துக்குடி மாவட்ட மன்னார் வளைகுடாவில் அதிக அளவு காற்று வீசக்கூடிய இடமான வேப்பலோடை கடல் பகுதியில் தேசிய அளவிலான kiteboarding என்ற  போட்டி நடைபெற்றது.

இந்தப்போட்டியில் கர்நாடகா கோவா மும்பை ஆந்திரா தமிழ்நாடு மற்றும் மொரீசியஸ் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஆண்கள், பெண்கள் என மொத்தம் 15 பேர் கலந்து கொண்டனர். இவர்கள். கடற்கரையிலிருந்து குறிப்பிட்ட தூரம் காற்றோட்டத்திற்கு ஏற்றபடி காத்தாடியை செலுத்தி கடலில் இலக்கை நோக்கி பயணித்தனர்.

உங்கள் நகரத்திலிருந்து (தூத்துக்குடி)

ஆன்லைனில் வெடிமருந்து வாங்கிய கோவில்பட்டி இளைஞரிடம் என்ஐஏ அதிகாரிகள் தீவிர விசாரணை

கனிமொழி எம்.பியின் வீட்டில் நுழைந்த மர்ம நபர்... தூத்துக்குடியில் பரபரப்பு..!

மேடையில் மாறி மாறி புகழ்ந்து கொண்ட கனிமொழி - கடம்பூர் ராஜு..! எதற்கு தெரியுமா?

தனியார் நிறுவனங்கள் ராக்கெட் உருவாக்குவதற்கு வருகின்றன - இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன்

தூத்துக்குடி செல்பி பாயிண்ட்டில் “தெம்மா தெம்மா” பாடலுக்கு ஆபாச நடனம்.. இளைஞர்களை தேடும் போலீஸ்

Themma Themma Reels : ’இனிமேல் வீடியோ போடமாட்டோம்..’ - குத்தாட்டம் போட்டு மன்னிப்பு கேட்ட தூத்துக்குடி 2K கிட்ஸ்! 

பொறந்த குழந்தைய பார்க்க காசு கேட்குறாங்க.. அசிங்கமா பேசுறாங்க - அரசுமருத்துவமனை ஊழியர்களால் பொதுமக்கள் வேதனை

வீடு புகுந்து குழந்தையின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி கொள்ளை - தூத்துக்குடியில் பகீர் சம்பவம்

வல்லநாடு வனத்தில் பட்டாம்பூச்சி திருவிழா.. மான்,மயில்களை ஆர்வமாக கண்டுகளித்த கனிமொழி எம்.பி

"ஒரு நாடு ஒரு உரம்.." முதல் நிறுவனமாக விநியோகத்தை தொடங்கிய தூத்துக்குடி ஸ்பிக்

விஜய்யின் வாரிசு படத்தை தடுக்கும் உதயநிதி - கடம்பூர் ராஜூ பரபரப்பு குற்றச்சாட்டு

இன்று முதல் மூன்று தினங்கள் நடக்கும் இந்த போட்டியில் கிரேட் அடிப்படையில் முதல் மூன்று இடங்களில் தேர்வு செய்யப்பட்டு தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கங்கள் வழங்கப்பட உள்ளது.

இந்த போட்டிகளில் தேர்வாக கூடியவர்கள் தொடர்ந்து ஆசிய விளையாட்டுப் போட்டியிலும் அதனை தொடர்ந்து ஒலிம்பிக் போட்டியிலும் கலந்து கொள்ள வாய்ப்பு அளிக்கப்படும்.

செய்தியாளர் - பி.முரளிகணேஷ்

Tags:Thoothukudi, Tuticorin

சிறந்த கதைகள்