PREVNEXT
ஹோம் / நியூஸ் / தூத்துக்குடி /

திருச்செந்தூர் அருகே நடுக்கடலில் சூறைக்காற்றால் படகு கவிழ்ந்து விபத்து - 2 மீனவர்கள் மாயம்

திருச்செந்தூர் அருகே நடுக்கடலில் சூறைக்காற்றால் படகு கவிழ்ந்து விபத்து - 2 மீனவர்கள் மாயம்

திருச்செந்தூர்

திருச்செந்தூர்

Thoothukudi district News : தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே மீன்பிடிக்க சென்றபோது நடுக்கடலில் வீசிய சூறைக்காற்றில் படகு கவிழ்ந்து கடலுக்குள் 4 மீனவர்களை தவறி விழுந்த நிலையில் இருவர் மட்டுமே மீட்கப்பட்டனர்.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ளது மீனவர் கிராமம் அமலிநகர். இங்குள்ள மீனவர்கள் தினமும் நள்ளிரவு பைபர் படகில் மீன்பிடித் தொழிலுக்கு சென்று விட்டு அன்று மாலையில் கரை திரும்புவது வழக்கமாக இருந்து வருகிறது.

அதேபோல் மீனவர்கள் நள்ளிரவு மீன்பிடித் தொழிலுக்கு சென்றுள்ளனர். அவர்கள் சென்ற படகுகள் ஒவ்வொன்றாக கரைக்கு வந்து நிலையில், அதே பகுதியை சேர்ந்த அஸ்வின் (32), பிரசாத் (40), பால்ராஜ் (22), நித்தியானந்தம் (42) ஆகியோர் சென்ற படகு மட்டும் கரை திரும்பவில்லை.

அந்த படகு பலத்த காற்று காரணமாக கடலில் கவிழ்ந்தது தெரியவந்தது. இதில் பால்ராஜ், நித்தியானந்தம் ஆகியோர் கடலில் தத்தளித்ததை பார்த்த மற்ற படகில் சென்ற மீனவர்கள் காப்பாற்றினர். மேலும் அஸ்வின், பிரசாத் ஆகியோரை தேடி பார்த்தும் அவர்கள் கிடைக்கவில்லை.

உங்கள் நகரத்திலிருந்து (தூத்துக்குடி)

கனிமொழி எம்.பியின் வீட்டில் நுழைந்த மர்ம நபர்... தூத்துக்குடியில் பரபரப்பு..!

வல்லநாடு வனத்தில் பட்டாம்பூச்சி திருவிழா.. மான்,மயில்களை ஆர்வமாக கண்டுகளித்த கனிமொழி எம்.பி

தூத்துக்குடி செல்பி பாயிண்ட்டில் “தெம்மா தெம்மா” பாடலுக்கு ஆபாச நடனம்.. இளைஞர்களை தேடும் போலீஸ்

வீடு புகுந்து குழந்தையின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி கொள்ளை - தூத்துக்குடியில் பகீர் சம்பவம்

பொறந்த குழந்தைய பார்க்க காசு கேட்குறாங்க.. அசிங்கமா பேசுறாங்க - அரசுமருத்துவமனை ஊழியர்களால் பொதுமக்கள் வேதனை

Themma Themma Reels : ’இனிமேல் வீடியோ போடமாட்டோம்..’ - குத்தாட்டம் போட்டு மன்னிப்பு கேட்ட தூத்துக்குடி 2K கிட்ஸ்! 

மேடையில் மாறி மாறி புகழ்ந்து கொண்ட கனிமொழி - கடம்பூர் ராஜு..! எதற்கு தெரியுமா?

தனியார் நிறுவனங்கள் ராக்கெட் உருவாக்குவதற்கு வருகின்றன - இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன்

"ஒரு நாடு ஒரு உரம்.." முதல் நிறுவனமாக விநியோகத்தை தொடங்கிய தூத்துக்குடி ஸ்பிக்

விஜய்யின் வாரிசு படத்தை தடுக்கும் உதயநிதி - கடம்பூர் ராஜூ பரபரப்பு குற்றச்சாட்டு

ஆன்லைனில் வெடிமருந்து வாங்கிய கோவில்பட்டி இளைஞரிடம் என்ஐஏ அதிகாரிகள் தீவிர விசாரணை

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கடலில் காற்றின் வேகம் அதிக அளவில் இருந்ததால் மீட்கப்பட்ட இரண்டு பேரை மட்டும் கரைக்கு அழைத்து வந்தனர். இந்த தகவலறிந்த அமலிநகர் மீனவர்கள் 7 படகில் சுமார் 30 க்கும் மேற்பட்டோர் கடலுக்கு சென்று தேடும் பணியில் ஈடுபட்டனர்.

Must Read : காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய காட்டு யானை.. பதைபதைக்க வைக்கும் வீடியோ காட்சிகள்

மாயமான அஸ்வினுக்கு மோனிகா என்ற மனைவியும், ஒரு ஆண், ஒரு பெண் குழந்தைகள் உள்ளனர். பிரசாந்திற்கு ஸ்டெபிலா என்ற மனைவியும், மூன்று மகள்களும் உள்ளனர். மீனவர்கள் மாயமான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

செய்தியாளர் - பி.முரளிகணேஷ்.

Tags:Fishermen, Thoothukudi, Tiruchendur

சிறந்த கதைகள்