PREVNEXT
ஹோம் / நியூஸ் / தூத்துக்குடி /

மண்ணெண்ணெய் கேன்களை பறித்து கொண்டு ஓடிய காவலர்.. துரத்திய பெண்கள்.. சினிமாவை மிஞ்சும் வகையில் நடந்த சம்பவம்..

மண்ணெண்ணெய் கேன்களை பறித்து கொண்டு ஓடிய காவலர்.. துரத்திய பெண்கள்.. சினிமாவை மிஞ்சும் வகையில் நடந்த சம்பவம்..

மண்ணெண்ணெய் கேன்களை பறித்து கொண்டு ஓடிய காவலர்.. துரத்திய பெண்கள்

மண்ணெண்ணெய் கேன்களை பறித்து கொண்டு ஓடிய காவலர்.. துரத்திய பெண்கள்

வரும் திங்கள் கிழமை இருதரப்பினையும் அழைத்து பேசி விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தை தொடர்ந்து 4 பேரும் போராட்டத்தினை கைவிட்டனர்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் தங்களது விவசாய நிலம் வழியாக தனியார் நிறுவனத்தின் டவர் மூலமாக மின்சார வயர்கள் கொண்டு செல்ல முயற்சி நடந்து வருவதாகவும், அதனை எதிர்த்த தங்களை ரௌடிகளை வைத்து மிரட்டுவதாக கூறி அந்த நிலத்தின் உரிமையாளர்கள் 4 பேர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டது மட்டுமின்றி தீக்குளிக்க மண்ணெணெய் கேன் கொண்டு வந்து இருந்தனர். அந்த கேன்களை தனிப்பிரிவு காவலர் அருண் என்பவர் கைப்பற்றி கொண்டு ஓட, அவரை போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் துரத்த, சினிமாவை விஞ்சும் வகையில் நடைபெற்ற இச்சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள குமாரகிரி கிராமத்தை சேர்ந்தவர் காளியப்ப நாயக்கர். இவருடைய மகள்கள் கவிதா, மகேஸ்வரி, அனிதா. அந்த கிராமத்தில் உள்ள நிலத்தினை காளியப்ப நாயக்கர் 3 மகள்களுக்கும் சீதனமாக கொடுத்துள்ளார்.  இதில் அவர்கள் விவசாயம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் சிந்தலக்கரை பகுதியில் தனியார் நிறுவனத்தின் சார்பில் உற்பத்தி செய்யப்படும் சூரிய ஒளியில் (சோலார்) இருந்து உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தினை வண்டானத்தில் செயல்பட்டு வரும் மின்சார சேமிப்பு நிறுவனத்திற்கு கொண்டு செல்வதற்காக டவர்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. அந்த நிறுவனத்தின் டவர் வயர்கள் கவிதா, மகேஸ்வரி, அனிதா ஆகிய சகோதிரிகள் நிலம் வழியாக கொண்டு செல்ல தனியார் நிறுவனம் முயற்சி செய்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

உங்கள் நகரத்திலிருந்து (தூத்துக்குடி)

வீடு புகுந்து குழந்தையின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி கொள்ளை - தூத்துக்குடியில் பகீர் சம்பவம்

"ஒரு நாடு ஒரு உரம்.." முதல் நிறுவனமாக விநியோகத்தை தொடங்கிய தூத்துக்குடி ஸ்பிக்

விஜய்யின் வாரிசு படத்தை தடுக்கும் உதயநிதி - கடம்பூர் ராஜூ பரபரப்பு குற்றச்சாட்டு

கனிமொழி எம்.பியின் வீட்டில் நுழைந்த மர்ம நபர்... தூத்துக்குடியில் பரபரப்பு..!

தூத்துக்குடி செல்பி பாயிண்ட்டில் “தெம்மா தெம்மா” பாடலுக்கு ஆபாச நடனம்.. இளைஞர்களை தேடும் போலீஸ்

மேடையில் மாறி மாறி புகழ்ந்து கொண்ட கனிமொழி - கடம்பூர் ராஜு..! எதற்கு தெரியுமா?

Themma Themma Reels : ’இனிமேல் வீடியோ போடமாட்டோம்..’ - குத்தாட்டம் போட்டு மன்னிப்பு கேட்ட தூத்துக்குடி 2K கிட்ஸ்! 

வல்லநாடு வனத்தில் பட்டாம்பூச்சி திருவிழா.. மான்,மயில்களை ஆர்வமாக கண்டுகளித்த கனிமொழி எம்.பி

பொறந்த குழந்தைய பார்க்க காசு கேட்குறாங்க.. அசிங்கமா பேசுறாங்க - அரசுமருத்துவமனை ஊழியர்களால் பொதுமக்கள் வேதனை

ஆன்லைனில் வெடிமருந்து வாங்கிய கோவில்பட்டி இளைஞரிடம் என்ஐஏ அதிகாரிகள் தீவிர விசாரணை

தனியார் நிறுவனங்கள் ராக்கெட் உருவாக்குவதற்கு வருகின்றன - இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன்

தங்களிடம் எவ்வித அனுமதி பெறாமல் தங்கள் நிலம் வழியாக கொண்டு செல்ல தனியார் நிறுவனம் முயற்சி செய்து வருவதாகவும், காவல்துறையினை வைத்து பேரம் பேசிவருவதாக நிலத்தின் உரிமையாளர்கள் குற்றம்சாட்டியது மட்டுமின்றி கடந்த மாதம் 24ந்தேதி கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தினை முற்றுக்கையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மனுவினை பெற்றுக்கொண்ட கோட்டாட்சியர் மகாலட்சுமி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இந்நிலையில் அந்த தனியார் நிறுவனம் சார்பில் தங்களது நிலம் அருகே பணிகள் தொடங்கியுள்ளதாகவும், அந்த டவர் வயர்கள் தங்கள் நிலத்தின் வழியாக செல்ல வழி இருப்பதாகவும், தங்கள் எதிர்ப்பு தெரிவித்தற்கு எதிர்ப்பு தெரிவித்து ரௌடிகளை வைத்து மிரட்டுவதாக கூறி நிலத்தின் உரிமையாளர்கள் மகேஸ்வரி, கவிதா, மற்றும் உறவினர்கள் பாலாஜியம்மாள், பீமாராஜா ஆகிய 4 பேரும் கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் கோட்டாட்சியர் வந்தததும் அவர் முன் தீக்குளிக்க 4 பேரும் தயராக இருந்தாக தெரிகிறது. இது குறித்து தகவல் தெரிந்ததும் 4 பேரும் வந்த ஆம்னி காரில் இருந்த மண்ணெண்ணெய் கேன்களை தனிப்பிரிவு காவலர் அருண் என்பவர் கைப்பற்றினர். இதனை பார்த்த போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் காவலர் அருணிடம் இருந்த மண்ணெண்ணெய் கேன்களை பறிக்க ஒடிவந்தனர்.

அவர்கள் ஒடிவருவதை பார்த்த தனிப்பிரிவு காவலர் ஓட, அவரை அந்த பெண்கள் விடமால் துரத்தினார். மேலும் தங்களது மண்ணெண்ணெய் கேனை கொடு, இல்லை என்றால் நாசமாக போய்விடுவாய் என்று கத்திக்கொண்டே தூரத்தினர் ஒரு கட்டித்தில் தனிப்பிரிவு காவலர் கையில் இருந்த மண்ணெண்ணெய் கேனை பிடுங்க முயற்சி செய்ய அவர் அதை தூக்கி எறிந்தார்.

இதையடுத்து, தங்கள் பிரச்சினைக்கு நடவடிக்கையும் எடுக்கவில்லை, தங்களை சாகவும் விடவில்லை என்று கூறி 4 பேரும் எட்டயபுரம் சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையெடுத்து போலீசார், கோட்டாட்சியர் அலுவலர்கள் 4 பேரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். வரும் திங்கள் கிழமை இருதரப்பினையும் அழைத்து பேசி விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தை தொடர்ந்து 4 பேரும் போராட்டத்தினை கைவிட்டனர்.

சினிமாவை மிஞ்சம் சம்பவம் போல அடுத்தடுத்து நடைபெற்ற சம்பவங்களால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

377

தங்களுடை விவசாய நிலம் வழியாக டவர் மற்றும் டவர் மின்சார வயர்கள் செல்லக்கூடாது என்று தமிழக முதல்வர், மாவட்ட ஆட்சியர் மற்றும் சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளிடம் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கை இல்லை என்றும், 35க்கும் மேற்பட்ட ரௌடிகளை வைத்து கொண்டு பணிகளை மேற்கொண்டு வருவதாகவும், எங்கள் புகாருக்கும் நடவடிக்கை இல்லை, எங்களையும் சாகாவும்விடவில்லை என்றும், இனியும் தங்களது பிரச்சினைக்கு தீர்வு இல்லை என்றால் வீட்டில் இருந்து மண்ணெணெய் ஊற்றிக்கொண்டு வந்து தீக்குளித்து உயிரிழப்போம் என்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து சம்பந்தபட்ட தனியார் நிறுவன ஊழியர்களிடம் பேசிய போது, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் நிலத்தின் வழியாக தாங்கள் எவ்வித பணிகளையும் மேற்கொள்வில்லை என்றும், தவறாக புரிந்து கொண்டு தங்கள் பணிகளை செய்யவிடமால் தடுத்து வருவதாகவும், இது தொடர்பாக ஏற்கனவே எட்டயபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளதாகவும் கூறியுள்ளனர்.

Tags:Tuticorin

சிறந்த கதைகள்