PREVNEXT
ஹோம் / நியூஸ் / தூத்துக்குடி /

புகார் அளிக்க வந்த பெண்ணிடம் பாலியல் தொல்லை, பண மோசடி - விளாத்திகுளம் காவல் ஆய்வாளர் சஸ்பெண்ட்

புகார் அளிக்க வந்த பெண்ணிடம் பாலியல் தொல்லை, பண மோசடி - விளாத்திகுளம் காவல் ஆய்வாளர் சஸ்பெண்ட்

பாலியல் தொல்லை

பாலியல் தொல்லை

Thoothukudi : புகார் அளிக்க வந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்து பண மோசடி செய்த விளாத்திகுளம் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் ஆனந்த தாண்டவம் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டார்.

புகார் அளிக்க வந்த பெண்ணிற்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததுடன் பண மோடி செய்ததாக எழுந்த குற்றச்சாட்டு காரணமாக, தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளரும், குளத்தூர், தருவைகுளம் காவல் நிலையங்களின் ஆய்வாளருமான ஆனந்த தாண்டவம் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

மதுரை மாவட்டம் ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த மாரிமுத்து என்பவரின் மனைவி கோமதி (42).  இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு ஒத்தக்கடை மலையாண்டிபுரத்தில் தங்களுக்கு சொந்தமான 4 சென்ட் இடத்தில் புதிதாக வீடு கட்ட திட்டமிட்டு, அதற்கான பணியை மொத்தமாக அலங்காநல்லூரை சேர்ந்த முருகன் என்ற சிவில் இன்ஜினியரிடம் ஒப்படைத்துள்ளனர்.

இன்ஜினியர் முருகன் அதிகபட்சமான தொகையை கோமதியிடமிருந்து வாங்கிக் கொண்டு, கட்டுமான பணிகளை குறித்த நேரத்தில் செய்து முடிக்காமல் காலம் தாழ்த்தி வந்ததாக கூறப்படுகிறது. இந்த பிரச்சனை தொடர்பாக கோமதி, மதுரை மாவட்டம் ஒத்தக்கடை காவல் நிலையத்தில், கடந்த 23.10.2019 அன்று புகார் மனு கொடுத்துள்ளார்.

உங்கள் நகரத்திலிருந்து (தூத்துக்குடி)

Themma Themma Reels : ’இனிமேல் வீடியோ போடமாட்டோம்..’ - குத்தாட்டம் போட்டு மன்னிப்பு கேட்ட தூத்துக்குடி 2K கிட்ஸ்! 

பொறந்த குழந்தைய பார்க்க காசு கேட்குறாங்க.. அசிங்கமா பேசுறாங்க - அரசுமருத்துவமனை ஊழியர்களால் பொதுமக்கள் வேதனை

கனிமொழி எம்.பியின் வீட்டில் நுழைந்த மர்ம நபர்... தூத்துக்குடியில் பரபரப்பு..!

"ஒரு நாடு ஒரு உரம்.." முதல் நிறுவனமாக விநியோகத்தை தொடங்கிய தூத்துக்குடி ஸ்பிக்

வல்லநாடு வனத்தில் பட்டாம்பூச்சி திருவிழா.. மான்,மயில்களை ஆர்வமாக கண்டுகளித்த கனிமொழி எம்.பி

விஜய்யின் வாரிசு படத்தை தடுக்கும் உதயநிதி - கடம்பூர் ராஜூ பரபரப்பு குற்றச்சாட்டு

தனியார் நிறுவனங்கள் ராக்கெட் உருவாக்குவதற்கு வருகின்றன - இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன்

வீடு புகுந்து குழந்தையின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி கொள்ளை - தூத்துக்குடியில் பகீர் சம்பவம்

ஆன்லைனில் வெடிமருந்து வாங்கிய கோவில்பட்டி இளைஞரிடம் என்ஐஏ அதிகாரிகள் தீவிர விசாரணை

மேடையில் மாறி மாறி புகழ்ந்து கொண்ட கனிமொழி - கடம்பூர் ராஜு..! எதற்கு தெரியுமா?

தூத்துக்குடி செல்பி பாயிண்ட்டில் “தெம்மா தெம்மா” பாடலுக்கு ஆபாச நடனம்.. இளைஞர்களை தேடும் போலீஸ்

இந்தப் மனுவை விசாரிப்பதற்காக அப்போது அங்கு காவல் ஆய்வாளராக இருந்த ஆனந்த தாண்டவம், இன்ஜினியர் முருகன் மற்றும் கோமதி ஆகியோரை வரவழைத்து கோமதியின் புகார் மனு குறித்து விசாரணை செய்துள்ளார். இந்த விசாரணையின் போது காவல் ஆய்வாளர் ஆனந்த தாண்டவத்திற்கும், புகார்தாரரான கோமதிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், வீடு கட்டும் பணத்தினை தன்னிடம் தருமாறு ஆனந்த தாண்டவம் கூறியதால், அதை ஏற்று தனது கணவர் வங்கி கணக்கில் இருந்த 4 லட்சத்து 40 ஆயிரம் ரூபாயையும், நேரில் 1 லட்சத்து 10 ஆயிரம் என, மொத்தம் 5 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை கோமதி கொடுத்தாக தெரிவித்துள்ளார்.

இந்தப் பழக்கத்தின் அடிப்படையில், கோமதி வீட்டிற்கு சென்ற ஆனந்த தாண்டவம், அவருக்கு வலுக்கட்டயமாக பாலியல் தெந்தரவு கொடுத்ததுடன், அவரை சட்டத்திற்கு புறம்பாக யாருக்கும் தெரியாமல் நரசிங்கம் பெருமாள் கோவிலில் வைத்து வற்புறுத்தி தாலி கட்டியதாகவும் சொல்லப்படுகிறது.

அத்துடன், தன்னை பாலியல் இச்சைக்கு உட்படுத்தியதாக குற்றம் சாட்டியுள்ள கோமதி, வீட்டு வேலையையும் முடிக்கமால் பணத்தினையும் தரமால் இருந்ததால் ஆனந்த தாண்டவத்தால், தான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி இரண்டு முறை தற்கொலைக்கு முயற்சி செய்தபோது, அங்கிருந்தவர்களால், தான் காப்பாற்றப்பட்டதாக தெரிவித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஆய்வாளர் ஆனந்த தாண்டவத்தின் பேச்சை நம்பி என் வாழ்க்கையும், என் கணவரின் பணம் ரூபாய் 5,50,000 -த்தையும் இழந்துவிட்டதாகவும் தற்போது எந்த பக்கம் சென்று தன் வாழ்வை காப்பாற்றுவேன் என்று தெரியாமல்  நிற்கதியாய் நிற்கிறேன் என்றும் குறிப்பிட்டு கோமதி தமிழக முதல்வரின் தனிப்பிரிவு முதல், மனித உரிமை ஆணைய தலைவர், தென்மண்டல காவல்துறை தலைவர், மாவட்ட ஆட்சியர், தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையர் என பலரிடம் அஞ்சல் வழியில் புகார் மனு அளித்துள்ளார்.

Must Read : தவறான உறவால் பிறந்த குழந்தை கொன்று புதைப்பு.. தாய் மற்றும் பாட்டி கைது

377

இந்நிலையில், கோமதியின் புகார்மனு குறித்து விசாரணை நடைபெற்று வந்த நிலையில், தற்போது விளாத்திகுளம் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளரும் குளத்தூர் மற்றும் தருவைக்குளம் காவல் நிலையங்களில் ஆய்வாளராகவும் பொறுப்பு வகித்து வந்த ஆனந்த தாண்டவம் அதிரடியாக தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இது குறித்து ஆனந்த தாண்டவத்திடம் கேட்ட போது, இது பொய்யனான வழக்கு என்று மட்டும் கூறினார்.

Tags:Police suspended, Sexual harassment, Thoothukudi

சிறந்த கதைகள்