PREVNEXT
ஹோம் / நியூஸ் / தூத்துக்குடி /

இடிந்து விழும் நிலையில் அரசுப்பள்ளி கழிவறை கட்டடம்.. குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப அச்சப்படும் பெற்றோர் - விளாத்திக்குளம் அவலம்

இடிந்து விழும் நிலையில் அரசுப்பள்ளி கழிவறை கட்டடம்.. குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப அச்சப்படும் பெற்றோர் - விளாத்திக்குளம் அவலம்

ஆபத்தான கழிவறை கட்டிடம்... விளாத்திகுளம் அருகே பள்ளிக்கு குழந்தைகளை அனுப்ப அச்சப்படும் பெற்றோர்கள்...

ஆபத்தான கழிவறை கட்டிடம்... விளாத்திகுளம் அருகே பள்ளிக்கு குழந்தைகளை அனுப்ப அச்சப்படும் பெற்றோர்கள்...

தூத்துகுடி மாவட்டம் விளாத்திகுளம் அருகேயுள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் கழிவறை கட்டிம் சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் இருக்கிறது. இதனால்  பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப அச்சமடைந்து வருகின்றனர். இது குறித்து பல முறை கூறியும் நடவடிக்கை எடுக்காததால் குழந்தைகளை வேறு பள்ளியில் சேர்க்க மாற்றுச்சான்றிதழ் கேட்டு பள்ளியை முற்றுக்கையிட்டுள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகேயுள்ள மேலநம்பிபுரம் கிராமத்தில் கடந்த 1938ம் ஆண்டு முதல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. 80 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த பள்ளியில் 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இப்பள்ளி வளாகத்தில் குழந்தைகளுக்கு என்று தனியாக கழிவறை உள்ளது. இந்த கழிவறை முற்றிலுமாக சேதமடைந்து இடிந்து கீழே விழும் நிலை உள்ளது.

இந்த கட்டிடத்தினை அகற்றி விட்டு புதிய கழிவறை கட்டிடம் கட்ட வேண்டும் என்று பலமுறை பெற்றோர்கள் பள்ளி நிர்வாகம் மற்றும் அரசு அலுவலர்களிடம் மனு அளித்துள்ளனர். ஆனால் தற்பொழுது வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும் மழைக்காலம் நெருங்கி வருவதால் கழிவறை இடிந்து விழுந்து விடுமோ என்ற அச்சம் பெற்றோர்களுக்கு ஏற்பட்டுள்ளதால் தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதற்கு தயக்கம் காட்டி வருகின்றனர். ஒரு சிலர் அச்சத்துடன் அனுப்பி வைத்து வருகின்றனர்.

தொடர்ந்து நடவடிக்கை எடுக்காமல் தமாதப்படுத்தி வருவதால் தங்கள் குழந்தைகளின் உயிர் தான் முக்கியம் என்பதால் வேறு பள்ளியில் தங்களது குழந்தைகளை சேர்த்துக்கொள்கிறோம். பள்ளி மாற்றுச்சான்றிதழை தாருங்கள் என்று பெற்றோர்கள் தினந்தோறும் பள்ளியை முற்றுகையிட்டு வரும் நிலை உள்ளது.

உங்கள் நகரத்திலிருந்து (தூத்துக்குடி)

விஜய்யின் வாரிசு படத்தை தடுக்கும் உதயநிதி - கடம்பூர் ராஜூ பரபரப்பு குற்றச்சாட்டு

"ஒரு நாடு ஒரு உரம்.." முதல் நிறுவனமாக விநியோகத்தை தொடங்கிய தூத்துக்குடி ஸ்பிக்

வல்லநாடு வனத்தில் பட்டாம்பூச்சி திருவிழா.. மான்,மயில்களை ஆர்வமாக கண்டுகளித்த கனிமொழி எம்.பி

தூத்துக்குடி செல்பி பாயிண்ட்டில் “தெம்மா தெம்மா” பாடலுக்கு ஆபாச நடனம்.. இளைஞர்களை தேடும் போலீஸ்

மேடையில் மாறி மாறி புகழ்ந்து கொண்ட கனிமொழி - கடம்பூர் ராஜு..! எதற்கு தெரியுமா?

பொறந்த குழந்தைய பார்க்க காசு கேட்குறாங்க.. அசிங்கமா பேசுறாங்க - அரசுமருத்துவமனை ஊழியர்களால் பொதுமக்கள் வேதனை

ஆன்லைனில் வெடிமருந்து வாங்கிய கோவில்பட்டி இளைஞரிடம் என்ஐஏ அதிகாரிகள் தீவிர விசாரணை

கனிமொழி எம்.பியின் வீட்டில் நுழைந்த மர்ம நபர்... தூத்துக்குடியில் பரபரப்பு..!

தனியார் நிறுவனங்கள் ராக்கெட் உருவாக்குவதற்கு வருகின்றன - இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன்

வீடு புகுந்து குழந்தையின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி கொள்ளை - தூத்துக்குடியில் பகீர் சம்பவம்

Themma Themma Reels : ’இனிமேல் வீடியோ போடமாட்டோம்..’ - குத்தாட்டம் போட்டு மன்னிப்பு கேட்ட தூத்துக்குடி 2K கிட்ஸ்! 

Also see... பள்ளியில் இருந்து எடுத்து சென்ற பொருட்களை ஒப்படையுங்கள்

நெல்லையில் கழிவறை கட்டிடம் இடிந்து மாணவர்கள் உயிரிழந்தது போன்று இங்கும் உயிரிழப்பு ஏற்பட்ட பின்னர் தான் அரசு நடவடிக்கை எடுக்குமா என்று பெற்றோர்கள் ஆதங்கத்துடன் கூறியுள்ளனர். அரசு விரைந்து சேதமடைந்த கழிவறை கட்டிடத்தினை அகற்றி விட்டு புதிய கட்டிடம் தர வேண்டும் என்பதுதான் அனைவரின் விருப்பம்.

Tags:School, Thoothukodi

சிறந்த கதைகள்