PREVNEXT
ஹோம் / நியூஸ் / தூத்துக்குடி /

காதல் திருமணம் செய்த புதுமண தம்பதி வெட்டி படுகொலை.. கோவில்பட்டியில் பரபரப்பு

காதல் திருமணம் செய்த புதுமண தம்பதி வெட்டி படுகொலை.. கோவில்பட்டியில் பரபரப்பு

புதுமண தம்பதி வெட்டி படுகொலை

புதுமண தம்பதி வெட்டி படுகொலை

Thoothukudi : கோவில்பட்டி அருகே உள்ள வீரப்பட்டி கிராமத்தில், காதல் திருமணம் செய்த புதுமண தம்பதியை பெண்ணின் தந்தை கொடூரமாக வெட்டி படுகொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள வீரப்பட்டி கிராமம் சேவியர் நகரில் காதல் திருமணம் செய்த புதுமண தம்பதி மாணிக்கராஜ், ரேஸ்மா இருவரும் வீட்டில் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள வீரப்பட்டி கிராமம் சேவியர் நகரை சேர்ந்தவர் முத்துக்குட்டி (50). லாரி டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவரது மகள் ரேஸ்மா (19), கோவில்பட்டியில் உள்ள கல்லூரியில் 2ஆம் ஆண்டு படித்து வந்தார். அதே ஊரைச் சேர்ந்த வடிவேல் என்பவரது மகன் மாணிக்கராஜ் (28).

வெளிநாட்டில் வேலை பார்த்த மாணிக்கராஜ் ஊருக்கு திரும்பி கூலி வேலை பார்த்து வந்துள்ளார். மேலும் முத்துக்குட்டி, மாணிக்கராஜ்க்கு மாமா முறை என்று கூறப்படுகிறது. மாணிக்கராஜ்க்கும், ரேஸ்மாவுக்கும் காதல் ஏற்பட்டு காதலித்து வந்துள்ளனர். இந்த காதலுக்கு முத்துக்குட்டி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

உங்கள் நகரத்திலிருந்து (தூத்துக்குடி)

கனிமொழி எம்.பியின் வீட்டில் நுழைந்த மர்ம நபர்... தூத்துக்குடியில் பரபரப்பு..!

வீடு புகுந்து குழந்தையின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி கொள்ளை - தூத்துக்குடியில் பகீர் சம்பவம்

பொறந்த குழந்தைய பார்க்க காசு கேட்குறாங்க.. அசிங்கமா பேசுறாங்க - அரசுமருத்துவமனை ஊழியர்களால் பொதுமக்கள் வேதனை

ஆன்லைனில் வெடிமருந்து வாங்கிய கோவில்பட்டி இளைஞரிடம் என்ஐஏ அதிகாரிகள் தீவிர விசாரணை

தனியார் நிறுவனங்கள் ராக்கெட் உருவாக்குவதற்கு வருகின்றன - இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன்

தூத்துக்குடி செல்பி பாயிண்ட்டில் “தெம்மா தெம்மா” பாடலுக்கு ஆபாச நடனம்.. இளைஞர்களை தேடும் போலீஸ்

"ஒரு நாடு ஒரு உரம்.." முதல் நிறுவனமாக விநியோகத்தை தொடங்கிய தூத்துக்குடி ஸ்பிக்

வல்லநாடு வனத்தில் பட்டாம்பூச்சி திருவிழா.. மான்,மயில்களை ஆர்வமாக கண்டுகளித்த கனிமொழி எம்.பி

மேடையில் மாறி மாறி புகழ்ந்து கொண்ட கனிமொழி - கடம்பூர் ராஜு..! எதற்கு தெரியுமா?

விஜய்யின் வாரிசு படத்தை தடுக்கும் உதயநிதி - கடம்பூர் ராஜூ பரபரப்பு குற்றச்சாட்டு

Themma Themma Reels : ’இனிமேல் வீடியோ போடமாட்டோம்..’ - குத்தாட்டம் போட்டு மன்னிப்பு கேட்ட தூத்துக்குடி 2K கிட்ஸ்! 

அத்துடன், தனது மகளுக்கு முத்துக்குட்டி வேறொரு மாப்பிள்ளை பார்த்து வந்துள்ளார். இதற்கிடையில் கடந்த மாதம் வீட்டை விட்டு வெளியேறி மாணிக்கராஜ் மற்றும் ரேஷ்மா இருவரும் கடந்த 28 ஆம் தேதி மதுரை திருமங்கலத்திற்கு சென்று காதல் திருமணம் செய்துள்ளனர். திருமணம் செய்த பிறகு ஊருக்கு வராமல் இருந்த தம்பதியினர் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஊருக்கு திரும்பியுள்ளனர்.

இந்நிலையில் நேற்று மதியம் மாணிக்கராஜ் - ரேஷ்மா வீட்டில் தனியாக இருந்த போது, முத்துக்குட்டி இருவரையும் அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பியோடியதாக கூறப்படுகிறது. இதனால் அந்த தம்பதி, ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இது குறித்து தகவல் கிடைத்தும் எட்டயபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தம்பதியின் உடல்களை மீட்டு உடற்கூறாய்வுக்கு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் எட்டயபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

Must Read : மாற்றுத்திறனாளி மாணவி கோரிக்கையை ஏற்று பேவர் பிளாக் சாலை அமைத்து கொடுத்த தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர்! - குவியும் பாராட்டு

இந்நிலையில், கொலை செய்துவிட்டு தலைமறைவாக உள்ள ரேஷ்மாவின் தந்தை முத்துக்குட்டியை கைது செய்த பின்னர் தான், இந்த கொலைக்கான முழு விபரம் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

Tags:Crime News, Kovilpatti, Murder, Newly married couple

சிறந்த கதைகள்