PREVNEXT
ஹோம் / நியூஸ் / Thoothukudi /

"நெய்தல் கலை விழா" குறித்த விழிப்புணர்வு.. கடலுக்குள் சென்று கடல் உணவுகளை சாப்பிட்டவாரே மீனவருடன் கலந்துரையாடிய கனிமொழி எம்.பி

"நெய்தல் கலை விழா" குறித்த விழிப்புணர்வு.. கடலுக்குள் சென்று கடல் உணவுகளை சாப்பிட்டவாரே மீனவருடன் கலந்துரையாடிய கனிமொழி எம்.பி

 "நெய்தல் கலை விழா" குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்திய கனிமொழி எம்.பி

"நெய்தல் கலை விழா" குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்திய கனிமொழி எம்.பி

தூத்துக்குடியில் நடைபெற உள்ள "நெய்தல் கலை விழா" குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதத்தில் கனிமொழி எம்பி படகில் கடலுக்குள் சென்று கடல் உணவுகளை சாப்பிட்டுக் கொண்டே நிகழ்ச்சியின் முக்கியத்துவம் குறித்து மீனவருடன் கலந்துரையாடினார்.

திமுக மகளிரணி செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி தலைமையில் 'நெய்தல்' கலை விழா தூத்துக்குடி வ.உ.சி., மைதானத்தில் வரும் 7, 8, 9 மற்றும் 10 ஆகிய நான்கு நாட்கள் நடைபெற உள்ளது. இந்த  விழாவில்,  தமிழர்களின் பண்பாட்டு நிகழ்வுகளான கரகம், பறையாட்டம், தேவராட்டம், பொய்க்கால் குதிரை, கும்மி-கோலாட்டம், வில்லுப்பாட்டு, தம்பிரான் கூத்து உள்ளிட்ட பல்வேறு பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளும், உணவுத்திருவிழா மற்றும் புத்தகங்களை வாங்கிச் செல்லும் வகையிலான புத்தகக் கடைகளும் இணைந்த பெருவிழா நடைபெற உள்ளது.

கடலும் கடல் சார்ந்த இடமுமான தூத்துக்குடியில் ‘நெய்தல்’ தமிழர்களின் மிகச்சிறந்த கலைக் கொண்டாட்டம். ஆதித் தமிழரின் கலை, இசை, பண்பாடு, வாழ்க்கை, மற்றும் உணவு முறை ஆகியவற்றின் திரளே இந்தத் திருவிழா. 300-க்கும் மேற்பட்ட கலைஞர்கள், தூத்துக்குடி நகரைக் கலை நகரமாக அலங்கரிக்க உள்ளனர். மேலும், பாரம்பரிய உணவு அரங்குகள், தமிழகத்தின் முன்னணி புத்தக அரங்குகள், கைவினைப்பொருள் கண்காட்சி, சுவரோவியம், சிறுவர்கள் முதல் பெரியவர்களுக்கான கவரும் கிராமிய விளையாட்டுகள், பொழுதுபோக்கு அம்சங்கள் உள்ளிட்ட பல்வேறு அரங்குகளும் அமைக்கப்பட்டு உள்ளது.

இந்த கலை விழா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதத்தில், தூத்துக்குடியில் மீனவர்களின் வாழ்க்கையையும் மீனவர்களின் உணவு முறைகள் குறித்து  சக்திவேல் என்ற மீனவர் தூத்துக்குடி மீனவன் என்ற youtube சேனலில் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். இவருடன் தூத்துக்குடி எம்.பி கனிமொழி பைபர் படகில் தூத்துக்குடி புதிய துறைமுக கடற்கரை பகுதியில் கடலில் பயணித்த வாரே மீன் உணவுகளை சாப்பிட்டுக்கொண்டு அந்த மீனவரிடம் நெய்தல் கலை விழா குறித்து கலந்துரையாடி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

உங்கள் நகரத்திலிருந்து (தூத்துக்குடி)

ஆன்லைனில் வெடிமருந்து வாங்கிய கோவில்பட்டி இளைஞரிடம் என்ஐஏ அதிகாரிகள் தீவிர விசாரணை

"ஒரு நாடு ஒரு உரம்.." முதல் நிறுவனமாக விநியோகத்தை தொடங்கிய தூத்துக்குடி ஸ்பிக்

பொறந்த குழந்தைய பார்க்க காசு கேட்குறாங்க.. அசிங்கமா பேசுறாங்க - அரசுமருத்துவமனை ஊழியர்களால் பொதுமக்கள் வேதனை

கனிமொழி எம்.பியின் வீட்டில் நுழைந்த மர்ம நபர்... தூத்துக்குடியில் பரபரப்பு..!

மேடையில் மாறி மாறி புகழ்ந்து கொண்ட கனிமொழி - கடம்பூர் ராஜு..! எதற்கு தெரியுமா?

விஜய்யின் வாரிசு படத்தை தடுக்கும் உதயநிதி - கடம்பூர் ராஜூ பரபரப்பு குற்றச்சாட்டு

தனியார் நிறுவனங்கள் ராக்கெட் உருவாக்குவதற்கு வருகின்றன - இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன்

வல்லநாடு வனத்தில் பட்டாம்பூச்சி திருவிழா.. மான்,மயில்களை ஆர்வமாக கண்டுகளித்த கனிமொழி எம்.பி

தூத்துக்குடி செல்பி பாயிண்ட்டில் “தெம்மா தெம்மா” பாடலுக்கு ஆபாச நடனம்.. இளைஞர்களை தேடும் போலீஸ்

வீடு புகுந்து குழந்தையின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி கொள்ளை - தூத்துக்குடியில் பகீர் சம்பவம்

Themma Themma Reels : ’இனிமேல் வீடியோ போடமாட்டோம்..’ - குத்தாட்டம் போட்டு மன்னிப்பு கேட்ட தூத்துக்குடி 2K கிட்ஸ்! 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த பயணத்தின் போது மீனவர்கள் அவருக்கு கடலில் மீன் பிடித்துக் காண்பித்தனர். படகில் துல்லிய மீன்களை கனிமொழி எம்.பி மீண்டும் எடுத்து கடலுக்குள் விட்டார். மேலும் படகில் அமர்ந்தபடியே கடலில் இயற்கை வளங்களை புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பி.முரளிகணேஷ்

Tags:Kanimozhi

சிறந்த கதைகள்