PREVNEXT
ஹோம் / நியூஸ் / Thoothukudi /

குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம்.. 80% நிலம் கிடைத்துவிட்டது: இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன்

குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம்.. 80% நிலம் கிடைத்துவிட்டது: இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன்

இஸ்ரோ சிவன்

இஸ்ரோ சிவன்

ISRO Sivan: ராக்கெட் ஏவுதளம் அமைக்க சிறந்த இடமாக குலசேகரப்பட்டினம் தேர்வு செய்யப்பட்டது என்றும் ராக்கெட் ஏவுதளம் அமைக்க 80% இடம் கிடைத்துவிட்டது என்றும் இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.

சந்திராயன் அடுத்த பதிப்பு தயாராக உள்ளது விண்ணில் ஏவப்படும் தேதி முடிவு செய்யவில்லை என்று இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் தூத்துக்குடியில் தெரிவித்தார்.

தமிழ்நாடு முதலமைச்சரின் நான் முதல்வன் திட்டத்தின் கீழ்  தூத்துக்குடியில் நடந்த கல்லூரி கனவு (+2 மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி இன்று நடைபெற்றது இதில் இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன், தூத்துக்குடி எம்பி கனிமொழி, அமைச்சர் கீதா ஜீவன் ஆகியோர் கலந்து கொண்டு  பிளஸ் 2  மாணவர்களுக்கு கல்லூரி படிப்பை எப்படி தேர்ந்தெடுப்பது என்பது குறித்து அறிவுரைகள் வழங்கினர்.

நிகழ்ச்சியில் பேசிய இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன், கல்லூரி கனவு திட்டம் நல்ல முயற்சி, நான் முதல்வரை பாராட்டுகிறேன். நான் அரசுப் பள்ளியில் படித்தது தான் என்னை இந்தியாவின் உயர் பதவிக்கு கொண்டு சென்றது. வறுமையின் காரணமாக என்னால் முதலில் பொறியியல் படிக்க முடியவில்லை. ஆனால் சக்ஸஸ் ஆகாது என கிடப்பில் போடப்பட்ட ஜிஎஸ்எல்வி ப்ராஜக்டை நான் சக்சஸ் செய்தேன்.  தன்னம்பிக்கையும் தளராத முயற்சியும் இருந்தால் சாதிக்க முடியும்.

உங்கள் நகரத்திலிருந்து (தூத்துக்குடி)

விஜய்யின் வாரிசு படத்தை தடுக்கும் உதயநிதி - கடம்பூர் ராஜூ பரபரப்பு குற்றச்சாட்டு

Themma Themma Reels : ’இனிமேல் வீடியோ போடமாட்டோம்..’ - குத்தாட்டம் போட்டு மன்னிப்பு கேட்ட தூத்துக்குடி 2K கிட்ஸ்! 

தூத்துக்குடி செல்பி பாயிண்ட்டில் “தெம்மா தெம்மா” பாடலுக்கு ஆபாச நடனம்.. இளைஞர்களை தேடும் போலீஸ்

தனியார் நிறுவனங்கள் ராக்கெட் உருவாக்குவதற்கு வருகின்றன - இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன்

வல்லநாடு வனத்தில் பட்டாம்பூச்சி திருவிழா.. மான்,மயில்களை ஆர்வமாக கண்டுகளித்த கனிமொழி எம்.பி

ஆன்லைனில் வெடிமருந்து வாங்கிய கோவில்பட்டி இளைஞரிடம் என்ஐஏ அதிகாரிகள் தீவிர விசாரணை

மேடையில் மாறி மாறி புகழ்ந்து கொண்ட கனிமொழி - கடம்பூர் ராஜு..! எதற்கு தெரியுமா?

வீடு புகுந்து குழந்தையின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி கொள்ளை - தூத்துக்குடியில் பகீர் சம்பவம்

"ஒரு நாடு ஒரு உரம்.." முதல் நிறுவனமாக விநியோகத்தை தொடங்கிய தூத்துக்குடி ஸ்பிக்

கனிமொழி எம்.பியின் வீட்டில் நுழைந்த மர்ம நபர்... தூத்துக்குடியில் பரபரப்பு..!

பொறந்த குழந்தைய பார்க்க காசு கேட்குறாங்க.. அசிங்கமா பேசுறாங்க - அரசுமருத்துவமனை ஊழியர்களால் பொதுமக்கள் வேதனை

எல்லா படிப்பும் நல்ல படிப்பு தான். எந்த படிப்பை எடுத்தாலும் கவனமாக படியுங்கள். மாணவர்கள் தாழ்வு மனப்பான்மையை அகற்றுங்கள். தாழ்வு மனப்பான்மை தான் உங்களின் எதிரி.

மாணவர்கள் கல்லூரிப் படிப்பை முடித்த பிறகு வேலை தேடுபவர்களாக இருக்கக் கூடாது. வேலை கொடுப்பவர்களாக இருக்க வேண்டும். இதை தான் தமிழக முதல்வரும் இந்திய பிரதமரும் கூறுகின்றனர்.

இதையும் படிங்க: மூன்றாம் பாலினத்தவர்கள் MBC வகுப்பில் சேர்க்கப்பட்டுள்ளனர் - நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம்

மாணவர்கள் பின்புலம் இல்லாமல் இருந்தாலும் உயர்ந்த நிலைக்கு வரலாம். உங்களின் கனவு ஒன்றாக இருக்கலாம் அந்த இலக்கை அடைய முடியாவிட்டால் கவலைப்பட கூடாது. கிடைத்ததை நன்றாக பயன்படுத்த வேண்டும். டாக்டர் இன்ஜினியர் தான் நல்ல படிப்பு என்று கிடையாது. எல்லா படிப்புமே நல்ல படிப்பு தான். உங்களால் என்ன பாடத்தை தேர்வு செய்து படிக்க முடியுமோ அந்த பாடத்தை நன்றாக படித்தாலே போதும் என்று தெரிவித்தார்.

தொடர்ந்து மாணவ மாணவிகளின் கேள்விக்கு பதில் அளித்து கலந்துரையாடினார்.  அப்போது மாணவி ஒருவரின் கேள்விக்கு பதில் அளிக்கையில், சந்திராயன் அடுத்த பதிப்பு தயாராக உள்ளது. விண்ணில் ஏவப்படும் தேதி முடிவு செய்யவில்லை என்றார்.

377

தூத்துக்குடி மாவட்டம் தாப்பாத்தி இலங்கை அகதிகள்  முகாமைச் சேர்ந்த பிளஸ் 2 மாணவி, ' எனக்கு சிறுவயதில் இருந்தே ஐஏஎஸ் ஆக வேண்டும் என்பது ஆசை . ஆனால் எல்லோரும் என்னிடம் நீ என்ன படித்தாலும் ஐஏஎஸ் ஆக முடியாது காரணம் எங்களுக்கு குடியுரிமை கிடையாது. நீ உன் கனவை மாற்றிக்கொள். நீ வேறு ஏதாவது படி என்று சொல்கின்றனர். சிறுவயது முதலே இருந்த எனது ஆசையை எப்படி மாற்ற முடியும். நான் என்ன படித்து என்ன ஆகலாம்' என்று கேள்வி எழுப்பினார்.

மேலும் படிக்க: பத்திரிக்கையாளர் முகமது ஜூபைர் கைது.. சீமான் கண்டனம்

இதற்கு பதில் அளித்த சிவன், ' நான் ஐஐஎஸ் இல்லையே. நான் பெரிய ஆள் ஆகவில்லையா? முடியவில்லை என்றால் அதைவிட பெரிய பணிகள் எல்லாம் உள்ளது. எந்த படிப்பை எடுத்து படித்தாலும் நல்ல படிப்பு தான்' என்று  பதிலளித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ராக்கெட் ஏவுதளம் அமைக்க சிறந்த இடமாக குலசேகரப்பட்டினம் தேர்வு செய்யப்பட்டது. ராக்கெட் ஏவுதளம் அமைக்க 80% இடம் கிடைத்துவிட்டது. முழுமையான இடம் கிடைத்ததும் ராக்கெட் ஏவு தளம் அமைக்கும் பணி தொடங்கும். முதலில் அங்கு கட்டுமான பணிகள் செய்யக்கூடிய விஞ்ஞானிகள் சென்று மண் பரிசோதனை செய்து அசஸ்மெண்ட் எடுப்பார்கள்.  இந்த அசெஸ்மெண்டை மையப்படுத்தி பணிகள் தொடங்கும். குலசேகரபட்டினம் ராக்கெட் ஏவுதளம், சிறிய அளவு ராக்கெட் ஏவப்படும் தளம் அமைக்கும் திட்டம். இஸ்ரோவில் சிறிய ராக்கெட்டுகள் தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது சிறிய அளவிலான ராக்கெட்டிற்கு சர்வதேச அளவில் நல்ல வரவேற்பு சந்தை உள்ளது என்றார்

செய்தியாளர்: முரளி கணேஷ்-  தூத்துக்குடி

Tags:ISRO, Sivan, Thoothukodi

சிறந்த கதைகள்