PREVNEXT
ஹோம் / நியூஸ் / Thoothukudi /

நீதிமன்றத்துக்கு எதிரே மகனை வெட்டிக்கொன்ற தந்தை - தூத்துக்குடியில் பரபரப்பு

நீதிமன்றத்துக்கு எதிரே மகனை வெட்டிக்கொன்ற தந்தை - தூத்துக்குடியில் பரபரப்பு

தமிழழகன்

தமிழழகன்

தூத்துக்குடியில் சொத்து பிரச்னை காரணமாக நீதிமன்றம் எதிரே மகனை தந்தையே வெட்டி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் கவர்னகிரி அருகே உள்ள வெள்ளாரம் கிராமத்தை சேர்ந்தவர் தமிழழகன். இவர் இன்று தனது சகோதரர் கடல்ராஜா, சகோதரர் மகன் காசிதுரை ஆகியோருடன் வழக்கு ஒன்றின் விசாரணைக்காக தூத்துக்குடி நீதிமன்றத்திற்கு காரில் வந்தனர்.

அப்போது, அங்கு மறைந்திருந்த தமிழழகனின் மகன் காசிராஜன் தந்தையை அரிவாளால் வெட்ட முயன்றுள்ளார். அப்போது, அவரது தந்தையுடன் வந்த கடல் ராஜா, காசிதுரை ஆகியோரை முதலில் அரிவாளால் வெட்டியுள்ளார். தொடர்ந்து தந்தையையும் வெட்ட முயன்ற போது மகன் கையில் இருந்த அரிவாளை பிடிங்கி தந்தையே மகன் காசிராஜனை வெட்டி கொலை செய்துவிட்டு அரிவாளுடன் காயம்பட்ட உறவினர்களை தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றுள்ளார்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் காசிராஜன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து வழக்கு பதிவு செய்த போலீசார் தமிழழகனை கைது செய்து விசாரணை செய்ததில் கடந்த 2020 ஆம் ஆண்டு காசிராஜனின் மனைவிக்கு  தந்தை தமிழழகன் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கின் விசாரணை தூத்துக்குடி நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

உங்கள் நகரத்திலிருந்து (தூத்துக்குடி)

தூத்துக்குடி செல்பி பாயிண்ட்டில் “தெம்மா தெம்மா” பாடலுக்கு ஆபாச நடனம்.. இளைஞர்களை தேடும் போலீஸ்

Themma Themma Reels : ’இனிமேல் வீடியோ போடமாட்டோம்..’ - குத்தாட்டம் போட்டு மன்னிப்பு கேட்ட தூத்துக்குடி 2K கிட்ஸ்! 

பொறந்த குழந்தைய பார்க்க காசு கேட்குறாங்க.. அசிங்கமா பேசுறாங்க - அரசுமருத்துவமனை ஊழியர்களால் பொதுமக்கள் வேதனை

வல்லநாடு வனத்தில் பட்டாம்பூச்சி திருவிழா.. மான்,மயில்களை ஆர்வமாக கண்டுகளித்த கனிமொழி எம்.பி

விஜய்யின் வாரிசு படத்தை தடுக்கும் உதயநிதி - கடம்பூர் ராஜூ பரபரப்பு குற்றச்சாட்டு

"ஒரு நாடு ஒரு உரம்.." முதல் நிறுவனமாக விநியோகத்தை தொடங்கிய தூத்துக்குடி ஸ்பிக்

கனிமொழி எம்.பியின் வீட்டில் நுழைந்த மர்ம நபர்... தூத்துக்குடியில் பரபரப்பு..!

மேடையில் மாறி மாறி புகழ்ந்து கொண்ட கனிமொழி - கடம்பூர் ராஜு..! எதற்கு தெரியுமா?

ஆன்லைனில் வெடிமருந்து வாங்கிய கோவில்பட்டி இளைஞரிடம் என்ஐஏ அதிகாரிகள் தீவிர விசாரணை

வீடு புகுந்து குழந்தையின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி கொள்ளை - தூத்துக்குடியில் பகீர் சம்பவம்

தனியார் நிறுவனங்கள் ராக்கெட் உருவாக்குவதற்கு வருகின்றன - இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன்

இந்த சம்பவத்தின் முன்விரோதம் காரணமாகவும், சொத்து பிரச்சனை காரணமாகவும் இந்த கொலை நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை செய்து வருகின்றனர். காசிராஜன் ஏற்கனவே 2 முறை தனது தந்தையை கொலை செய்ய முயன்றதும் இது தொடர்பான வழக்கு புதியம்புத்தூர் காவல்நிலையத்தில் விசாரணையில் உள்ளது.

செய்தியாளர்: முரளி கணேஷ்.

Tags:Thoothukudi

சிறந்த கதைகள்