PREVNEXT
முகப்பு / செய்தி / தூத்துக்குடி / பிரபல உணவகத்தில் புகுந்து ஷவர்மாவை ருசிபார்த்த தெரு நாய்... தூத்துக்குடியில் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி..

பிரபல உணவகத்தில் புகுந்து ஷவர்மாவை ருசிபார்த்த தெரு நாய்... தூத்துக்குடியில் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி..

Thoothukudi News : தூத்துக்குடியில் பிரபல குடும்ப உணவகமான சமுத்திரா உணவகத்தில் சிக்கனை நாய் சாப்பிடும் வீடியோ வெளியானதை தொடர்ந்து  உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் உணவகத்துக்கு சீல் வைத்தனர்.

ஷவர்மாவை சாப்பிடும் தெரு நாய்

ஷவர்மாவை சாப்பிடும் தெரு நாய்

தூத்துக்குடியில் பிரபல தனியார் குடும்ப உணவகமான சமுத்திரா 4க்கும் மேற்பட்ட கிளைகளுடன் இயங்கி வருகிறது. இதில் ஜார்ஜ் ரோட்டில் இயங்கி வரும் கிளையின் வெளியே ஷவர்மா தயார் செய்வதற்கான சிக்கனை ஊழியர்கள் வேக வைத்துள்ளனர். அப்போது ஷவர்மா தயாரிக்கும் இடத்தில் ஊழியர்கள் யாரும் இல்லாமல் கவனக்குறைவாக ஹோட்டல் நிர்வாகம்  செயல்பட்டுள்ளது. அந்த வழியாக சென்ற தெரு நாய் ஆசை ஆசையாக அந்த ஷவர்மாவை சாப்பிட்டுள்ளது. இந்நிலையில், வாடிக்கையாளர்களுக்கு சாப்பிட கொடுக்கும் ஷவர்மாவை நாய் சாப்பிடும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக வைரலானது.

இதைத்தொடர்ந்து இன்று தூத்துக்குடி மாவட்ட நியமன அலுவலர் மாரியப்பன் தலைமையிலான உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஜார்ஜ் சாலையில் உள்ள குடும்ப உணவகமான சமுத்திராவிற்கு அதிரடியாக சீல் வைத்து நடவடிக்கை எடுத்தனர்.

உங்கள் நகரத்திலிருந்து (தூத்துக்குடி)

பாஜகவை கண்டித்து அதிமுக போராட்டத்தில் ஈடுபட்டதால் கோவில்பட்டியில் பரபரப்பு

குறைந்த செலவில் மாலத்தீவுக்கு கடல் போக்குவரத்து... தூத்துக்குடியில் துறைமுக அதிகாரி தகவல்..!

மதுபோதையில் அரசுப்பேருந்தை தாறுமாறாக இயக்கிய ஓட்டுநர்.. அலறிய பயணிகள்..!

மது அருந்தும்போது ஏற்பட்ட தகராறு.. தொழிலாளியை கொலை செய்த நண்பன் கைது..!

அண்ணாமலை செய்த ஊழல்கள் பட்டியலை வெளியிடுவேன்... ஆர்.எஸ்.பாரதி பேச்சு..!

திருச்செந்தூர் முருகன் கோவிலில் கோலாகலமாக நடந்த மாசி திருவிழா...

வடிவேலு பட பாணியில் மிளகாய் பொடி தூவி நகைக்கடையில் கொள்ளை..! யூடியூப் பார்த்து திருட வந்ததாக கைதானவர்கள் வாக்குமூலம்

8ம் வகுப்புத் தேர்ச்சி போதும்... ரூ.50,000 வரை சம்பளம்.. அரசு வேலைக்கு உடனே விண்ணப்பியுங்கள்

“அதிமுக வரலாறு அண்ணாமலைக்கு தெரியாது.. அரசியலில் பக்குவப்படவில்லை” - கடம்பூர் ராஜூ விமர்சனம்

புத்தகத்தில் வரும் கதாபாத்திரங்களாக மாறி பாடம்.. கோவில்பட்டி ஆசிரியரின் புது முயற்சிக்கு பாராட்டு..

நெட் பேக் காலியானது.. கேம் விளையாட முடியாததால் 8ம் வகுப்பு மாணவன் தற்கொலை..!

மேலும், உணவு டோர் டெலிவரி மற்றும் வாடிக்கையாளருக்கு வழங்க சொமேட்டோ, ஸ்விகி ஆகிய நிறுவனங்களுடன் இந்த உணவகம் ஒப்பந்தம் செய்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

பிரபல குடும்ப உணவகம் நாய் உணவகமாக மாறியது தூத்துக்குடி மக்களுடைய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

செய்தியாளர் : முரளிகணேஷ் - தூத்துக்குடி

Tags:Crime News, Local News, Thoothukudi

முக்கிய செய்திகள்