PREVNEXT
ஹோம் / நியூஸ் / Thoothukudi /

பிரிந்து சென்ற மனைவிகள் குறித்து கேலி..இளைஞர் கொலையில் திடீர் திருப்பம் - லாரி டிரைவர் அதிர்ச்சி வாக்குமூலம்

பிரிந்து சென்ற மனைவிகள் குறித்து கேலி..இளைஞர் கொலையில் திடீர் திருப்பம் - லாரி டிரைவர் அதிர்ச்சி வாக்குமூலம்

கொலை செய்யப்பட்ட மகேஷ்வரன்

கொலை செய்யப்பட்ட மகேஷ்வரன்

Thoothukudi : கோவில்பட்டி அருகே, மனைவிகள் பிரிந்து சென்றதை கேலி செய்த நண்பரை அடித்துக்கொன்ற டிரைவர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவில்பட்டி அருகே இளைஞர் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்ட வழக்கில்,  அவரது நண்பர் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து அடித்து கொலை செய்தது தெரியவந்துள்ளது. 

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே  தளவாய்புரத்தில் உள்ள கோயில் முன்பு கடந்த 23ம் தேதி  இளைஞர் ஒருவர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். நீலநிற சட்டை மற்றும் லுங்கி அணிந்து காணப்பட்ட அவரின் காது மற்றும் தலையின் பின்பகுதியில் பலத்த காயம் இருந்தது. மேலும் அவரது இரண்டு கால்களும் மூட்டுக்கு கீழே கடுமையாக தாக்கப்பட்டதில் முறிந்திருந்தது.  மேலும் கொலை சம்பவம் நடந்த பகுதியில் உடைந்த மதுபாட்டில் மற்றும் தண்ணீர் கேன், கடலை மிட்டாய் போன்றவை கிடந்தன.

இதுகுறித்து தகவல்அறிந்து அங்கு வந்த கயத்தார் போலீசார் இளைஞர் உடலை கைப்பற்றி நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலையானவர், தனது கையில் கார்த்தீஸ்வரி என்று பச்சை குத்தி இருந்தார். அதன் அடிப்படையிலும், தேசிய நெடுஞ்சாலைகளில் அமைக்கப்பட்டுள்ள சிசிடிவியில் பதிவான காட்சிகள் மூலமாக  நடந்த விசாரணையில், கொலை செய்யப்பட்டவர் விருதுநகர் மாவட்டம் மானகச்சேரி கிராமத்தை சேர்ந்த  மகேஷ்வரன் (வயது 25) என்பது தெரியவந்தது.

உங்கள் நகரத்திலிருந்து (தூத்துக்குடி)

மேடையில் மாறி மாறி புகழ்ந்து கொண்ட கனிமொழி - கடம்பூர் ராஜு..! எதற்கு தெரியுமா?

வல்லநாடு வனத்தில் பட்டாம்பூச்சி திருவிழா.. மான்,மயில்களை ஆர்வமாக கண்டுகளித்த கனிமொழி எம்.பி

தூத்துக்குடி செல்பி பாயிண்ட்டில் “தெம்மா தெம்மா” பாடலுக்கு ஆபாச நடனம்.. இளைஞர்களை தேடும் போலீஸ்

"ஒரு நாடு ஒரு உரம்.." முதல் நிறுவனமாக விநியோகத்தை தொடங்கிய தூத்துக்குடி ஸ்பிக்

Themma Themma Reels : ’இனிமேல் வீடியோ போடமாட்டோம்..’ - குத்தாட்டம் போட்டு மன்னிப்பு கேட்ட தூத்துக்குடி 2K கிட்ஸ்! 

ஆன்லைனில் வெடிமருந்து வாங்கிய கோவில்பட்டி இளைஞரிடம் என்ஐஏ அதிகாரிகள் தீவிர விசாரணை

வீடு புகுந்து குழந்தையின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி கொள்ளை - தூத்துக்குடியில் பகீர் சம்பவம்

தனியார் நிறுவனங்கள் ராக்கெட் உருவாக்குவதற்கு வருகின்றன - இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன்

பொறந்த குழந்தைய பார்க்க காசு கேட்குறாங்க.. அசிங்கமா பேசுறாங்க - அரசுமருத்துவமனை ஊழியர்களால் பொதுமக்கள் வேதனை

கனிமொழி எம்.பியின் வீட்டில் நுழைந்த மர்ம நபர்... தூத்துக்குடியில் பரபரப்பு..!

விஜய்யின் வாரிசு படத்தை தடுக்கும் உதயநிதி - கடம்பூர் ராஜூ பரபரப்பு குற்றச்சாட்டு

லாரி டிரைவரான இவருக்கு கார்த்தீஸ்வரி (22) என்ற மனைவியும். ஒரு குழந்தையும் உள்ளனர். மனைவியின் பெயரை மகேஷ்வரன், தனது கையில் பச்சை குத்தி உள்ளார். மேலும் அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு இறந்தவர் மகேஷ்வரன் தான் என்பதை போலீசார் உறுதிபடுத்தினர்.

அதனைத் தொடர்ந்து, மகேஸ்வரனை அடித்துக் கொன்றவர்களை போலீசார் தீவிரமாக தேடிவந்தனர். இந்நிலையில், கோவில்பட்டி தோட்டிலோவன்பட்டி செக்போஸ்ட் அருகே உள்ள மேம்பாலத்திற்கு கீழ் சந்தேகத்திற்கிடமாக நின்றுகொண்டிருந்த சிவகாசியை சேர்ந்த செல்வக்குமார், ரஞ்சித்குமார், காளிமுத்து ஆகிய 3 நபர்களை பிடித்து, கயத்தார் காவல்நிலையம் கொண்டு வந்து விசாரித்தனர்.  அவர்களிடம் நடத்திய விசாரணையில் மகேஸ்வரனை கொலை செய்தது தெரியவந்தது.

விசாரணையில் வெளியான அதிர்ச்சித்தகவல்: 

லாரி டிரைவரான செல்வக்குமாருக்கு இரண்டு மனைவிகள் உள்ளனர். மனைவிகள் இரண்டு பேரும் செல்வக்குமாரை விட்டு பிரிந்து சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. கொலை செய்யப்பட்ட மகேஸ்வரனும், செல்வக்குமாரும் நண்பர்கள். இருவரும் சேர்ந்து வெளி மாநிலங்களுக்கு செல்லும் வாகனங்களில் ஆக்டிங் டிரைவராக பணிபுரிந்து வந்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த 19ஆம் தேதி நான்குனேரியிலுள்ள ஒரு கம்பெனிக்கு மீன் லோடு ஏற்றுவதற்காக விசாகப்பட்டினம் சென்றதாக கூறப்படுகிறது. அப்போது அங்கு இருவரும் மது அருந்தியுள்ளனர். மதுபோதையில் பேசி கொண்டு இருந்த போது மகேஸ்வரன், செல்வக்குமாரின் இரண்டு மனைவிகளும் அவரை விட்டு பிரிந்து சென்றது பற்றி கேலி செய்துள்ளார். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது.

இதில், லாரி லிவரை வைத்து செல்வக்குமாரை மகேஸ்வரன் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் செல்வக்குமாருக்கு  காயம் ஏற்பட்டு 8 தையல்கள் போடப்பட்டது. இதுபற்றி செல்வக்குமார் நான்குனேரியிலுள்ள கம்பெனி உரிமையாளரிடம் தெரிவித்துள்ளார். இங்கு வந்த பிறகு வேறு டிரைவரை உன்னோடு அனுப்புகிறேன். பிரச்சினை வேண்டாம் என்று கூறியுள்ளார். இதையடுத்து இரண்டு பேரும் லோடு ஏற்றிவிட்டு நாங்குனேரிக்கு கிளம்பியுள்ளனர்.

மூவர் கைது

377

நண்பர்களுடன் சதித்திட்டம்:

மகேஸ்வரன் தன்னை தாக்கியதில் மனமுடைந்த செல்வக்குமார் அவரை பழிவாங்கவேண்டும் என்று நினைத்துள்ளார். அங்கிருந்து புறப்படுவதற்கு முன் தனது நண்பர்கள் ரஞ்சித்குமார், முத்து, முத்துப்பாண்டி மற்றும் காளிமுத்து ஆகியோரிடம் இது பற்றி பேசியுள்ளார். இதையடுத்து ரஞ்சித்குமார், முத்து, முத்துப்பாண்டி ஆகிய 3 பேரும் காளிமுத்துவிடம் தங்களுக்கு தேவையான பணத்தினை வாங்கி கொண்டு, மது மற்றும் சாப்பிட உணவுகளை வாங்கி கொண்டு மதுரை கப்பலூர் சுங்கச்சாடிவடியில் லாரிக்காக காத்திருந்துள்ளனர்.

லாரி மதுரை அருகே வந்ததும், மகேஸ்வரனிடம், தனது நண்பர்கள் சிலர் நெல்லைக்கு செல்ல வேண்டியுள்ளது. ஆகையால் அவர்களை லாரியில் ஏற்றி கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார். அதற்கு மகேஸ்வரனும் சம்மதிக்க, சுங்கசாவடியில் நின்று கொண்டு இருந்த ரஞ்சித்குமார், முத்து, முத்துப்பாண்டி 3 பேரையும் செல்வக்குமார் லாரியில் ஏற்றியுள்ளார். லாரி கயத்தார் தளவாய்ப்புரம் பகுதியில் வந்ததும் செல்வக்குமாரின் நண்பர்கள் தாங்கள் வாங்கி வைத்திருந்த மதுவினை சாப்பிட்டு விட்டு செல்லாம் என்று கூறியுள்ளனர். மேலும் மகேஸ்வரனையும் மது அருந்த அழைத்துள்ளனர்.

மதுபோதையில் தகராறு:

செல்வக்குமார் தான் வண்டி ஓட்ட வேண்டியது உள்ளதால் மற்றவர்களை மட்டும் மது அருந்த சொல்லியுள்ளார். இதனை தொடர்ந்து மகேஸ்வரன், ரஞ்சித்குமார், முத்து, முத்துப்பாண்டி 4 பேரும் மது அருந்தியுள்ளனர். அப்போது மகேஸ்வரனிடம், தனது நண்பரின் மனைவிகள் பற்றி கேலி செய்தது மற்றும் தாக்கியது குறித்து மற்ற 3 பேரும் கேள்வி கேட்க அவர்களுக்கு வாக்கு வாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அப்போது லாரியில் இருந்த செல்வக்குமார்  ஜாக்கிக்கு பயன்படுத்தும் லிவரை எடுத்து வந்து மகேஸ்வரனின் தலையில் பலமாக தாக்கியுள்ளார். மற்றவர்களும் மகேஸ்வரனை தாக்க சம்பவ இடத்தில் பரிதபமாக உயிரிழந்தார். மகேஸ்வரன் உயிரிழந்ததும் அவரிடமிருந்த செல்போன், டிரைவர் லைசென்ஸ் போன்றவற்றை எடுத்துக்கொண்டு புறப்பட்டனர். வரும் வழியில் கயத்தார். அருகேயுள்ள ஒருபாலத்தின் அருகிலுள்ள முற்புதரில் கொலைக்கு பயன்படுத்திய கம்பியை தூக்கி வீசிவிட்டு, தாமிரபரணி ஆற்றில் இரவு குளித்துவிட்டு வேறு உடை மாற்றிவிட்டு நாங்குனேரி சென்றுள்ளனர்.

Must Read : கல்லூரிகால நினைவுகளோடு அமைச்சர்களின் கல கல பேச்சு.. திருச்சி கல்லூரியில் சிரிப்பலை

பின்பு அங்கு லாரியை விட்டுவிட்டு ராஜபாளையம் வழியாக ஊருக்கு தப்பி சென்றுள்ளனர். இதற்கிடையில் போலீசார் தேடுவதை அறிந்தவர்கள் வெளியூருக்கு தப்பி செல்ல முயற்சி செய்த போது தான் செல்வக்குமார், ரஞ்சித்குமார், காளிமுத்து ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள முத்து, முத்துப்பாண்டி ஆகிய 2 பேரையும் தேடி வருகின்றனர்.

Tags:Crime News, Kovilpatti, Murder case, Thoothukudi

சிறந்த கதைகள்