தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு தினசரி இரவு 8.15 மணிக்கு முத்துநகர் எக்ஸ்பிரஸ் புறப்பட்டு செல்கிறது. இந்த நிலையில் தூத்துக்குடி காவல் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று மாலை 6 மணியளவில் தொலைபேசியில் நபர் ஒருவர் பேசியுள்ளார். அப்போது, முத்துநகர் விரைவு ரயில் சென்னை புறப்படுவதற்கு 10 நிமிடங்களுக்கு முன் ரயில் நிலையத்தில் குண்டு வெடிக்கும் என கூறி இணைப்பை துண்டித்துள்ளார்.
உடனடியாக தூத்துக்குடி மாவட்ட எஸ்பி பாலாஜி சரவணன் உத்தரவின் பேரில் மத்தியபாகம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஐயப்பன், சப் இன்ஸ்பெக்டர் முருகப்பெருமாள் மற்றும் போலீசார் ரயில் நிலையத்துக்கு விரைந்து சென்று அதிரடி சோதனை நடத்தினார்கள். இதில் ரயில்வே போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் மகாராஜன் மற்றும் போலீசாரும் சேர்ந்து வெடிகுண்டை தேடினார்கள்.
மேலும் மோப்ப நாய் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் ரயில் நிலையத்துக்கு வந்து அதிரடி சோதனை நடத்தினார்கள். போனில் பேசிய அந்த மர்மநபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் குரும்பூர் அருகே உள்ள சேதுக்குவாய்க்கால் கிராமத்தில் இருந்து அந்த போன் வந்தது தெரியவந்தது.
ஏடிஎம்மில் 200 ரூபாய்க்கு பதிலாக வந்த 20 ரூபாய்... ஸ்விகி ஊழியருக்கு காத்திருந்த அதிர்ச்சி..!
அண்ணாமலை செய்த ஊழல்கள் பட்டியலை வெளியிடுவேன்... ஆர்.எஸ்.பாரதி பேச்சு..!
வடிவேலு பட பாணியில் மிளகாய் பொடி தூவி நகைக்கடையில் கொள்ளை..! யூடியூப் பார்த்து திருட வந்ததாக கைதானவர்கள் வாக்குமூலம்
புத்தகத்தில் வரும் கதாபாத்திரங்களாக மாறி பாடம்.. கோவில்பட்டி ஆசிரியரின் புது முயற்சிக்கு பாராட்டு..
திருச்செந்தூர் முருகன் கோவிலில் கோலாகலமாக நடந்த மாசி திருவிழா...
தூத்துக்குடி மேலூர் ரயில் நிலையம் மார்ச் 1 முதல் தற்காலிகமாக மூடப்படும் - தெற்கு ரயில்வே அறிவிப்பு
மது அருந்தும்போது ஏற்பட்ட தகராறு.. தொழிலாளியை கொலை செய்த நண்பன் கைது..!
குறைந்த செலவில் மாலத்தீவுக்கு கடல் போக்குவரத்து... தூத்துக்குடியில் துறைமுக அதிகாரி தகவல்..!
பாஜகவை கண்டித்து அதிமுக போராட்டத்தில் ஈடுபட்டதால் கோவில்பட்டியில் பரபரப்பு
“அதிமுக வரலாறு அண்ணாமலைக்கு தெரியாது.. அரசியலில் பக்குவப்படவில்லை” - கடம்பூர் ராஜூ விமர்சனம்
மதுபோதையில் அரசுப்பேருந்தை தாறுமாறாக இயக்கிய ஓட்டுநர்.. அலறிய பயணிகள்..!
Also see... நாளை மறுதினம் வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை.. காவல் துறை விடுத்த எச்சரிக்கை..!
இந்த சம்பவம் தூத்துக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதற்கிடையே 8.15க்கு செல்ல வேண்டிய முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரயில் அரை மணி நேரம் தாமதமாக 8.45 மணிக்கு புறப்பட்டு சென்றது குறிப்ப்டத்தக்கது.
செய்தியாளர்: பி.முரளிகணேஷ், தூத்துக்குடி
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags:Bomb, Thoothukodi, Train