PREVNEXT
ஹோம் / நியூஸ் / Thoothukudi /

ஆலோசனைக் கூட்டத்தில் இருந்து பாதியில் சென்றதாக குற்றச்சாட்டு - மன்னிப்பு கேட்ட கோட்டாட்சியர்..

ஆலோசனைக் கூட்டத்தில் இருந்து பாதியில் சென்றதாக குற்றச்சாட்டு - மன்னிப்பு கேட்ட கோட்டாட்சியர்..

ஆலோசனைக் கூட்டத்தில் இருந்து பாதியில் சென்றதாக குற்றச்சாட்டு - மன்னிப்பு கேட்ட கோட்டாட்சியர்..

ஆலோசனைக் கூட்டத்தில் இருந்து பாதியில் சென்றதாக குற்றச்சாட்டு - மன்னிப்பு கேட்ட கோட்டாட்சியர்..

சுதந்திர போராட்ட வீரர் அழகுமுத்துக்கோன் ஜெயந்தி விழா ஆலோசனைக்கூட்டத்தில் இருந்து பாதியில் சென்றதாக கோட்டாட்சியர் மீது எழுந்த குற்றச்சாட்டை தொடர்ந்து,  அவர் மன்னிப்பு கோரியுள்ளார். 

சுதந்திர போராட்ட வீரர் அழகுமுத்துக்கோன் ஜெயந்தி விழா தொடர்பாக தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் இருந்து கோட்டாட்சியர் மகாலட்சுமி பாதியில் எழுந்து சென்று அவமானப்படுத்தியதாக சுதந்திர போராட்ட வீரர் அழகுமுத்துக்கோன் வாரிசுகள் மற்றும் விழாக்குழுவினர் குற்றம்சாட்டி இருந்த நிலையில் உள்ளாட்சி இடைத்தேர்தல் பணி காரணமாக வெளியே செல்லவேண்டிய நிலை இருந்ததாகவும், அதற்கு மன்னிப்பு கேட்டு கொள்வதாக கோட்டாட்சியர் மகாலட்சுமி தெரிவித்துள்ளார்.

சுதந்திர போராட்ட வீரர் அழகுமுத்துக்கோன் ஜெயந்தி விழா வரும் 12ந்தேதி தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கட்டாலங்குளத்தில் உள்ள வீரன் அழகுமுத்துக்கோன் மணிமண்டபத்தில் கொண்டாடப்படவுள்ளது. இது தொடர்பான ஆலோசனை கூட்டத்திற்கு கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்டாட்சியர் மல்லிகா புதன்கிழமை ஏற்பாடு செய்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

உங்கள் நகரத்திலிருந்து (தூத்துக்குடி)

வீடு புகுந்து குழந்தையின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி கொள்ளை - தூத்துக்குடியில் பகீர் சம்பவம்

மேடையில் மாறி மாறி புகழ்ந்து கொண்ட கனிமொழி - கடம்பூர் ராஜு..! எதற்கு தெரியுமா?

"ஒரு நாடு ஒரு உரம்.." முதல் நிறுவனமாக விநியோகத்தை தொடங்கிய தூத்துக்குடி ஸ்பிக்

தூத்துக்குடி செல்பி பாயிண்ட்டில் “தெம்மா தெம்மா” பாடலுக்கு ஆபாச நடனம்.. இளைஞர்களை தேடும் போலீஸ்

தனியார் நிறுவனங்கள் ராக்கெட் உருவாக்குவதற்கு வருகின்றன - இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன்

கனிமொழி எம்.பியின் வீட்டில் நுழைந்த மர்ம நபர்... தூத்துக்குடியில் பரபரப்பு..!

வல்லநாடு வனத்தில் பட்டாம்பூச்சி திருவிழா.. மான்,மயில்களை ஆர்வமாக கண்டுகளித்த கனிமொழி எம்.பி

Themma Themma Reels : ’இனிமேல் வீடியோ போடமாட்டோம்..’ - குத்தாட்டம் போட்டு மன்னிப்பு கேட்ட தூத்துக்குடி 2K கிட்ஸ்! 

பொறந்த குழந்தைய பார்க்க காசு கேட்குறாங்க.. அசிங்கமா பேசுறாங்க - அரசுமருத்துவமனை ஊழியர்களால் பொதுமக்கள் வேதனை

ஆன்லைனில் வெடிமருந்து வாங்கிய கோவில்பட்டி இளைஞரிடம் என்ஐஏ அதிகாரிகள் தீவிர விசாரணை

விஜய்யின் வாரிசு படத்தை தடுக்கும் உதயநிதி - கடம்பூர் ராஜூ பரபரப்பு குற்றச்சாட்டு

இதில் சுதந்திர போராட்ட வீரர் அழகுமுத்துக்கோன் வரிசுகள் வனஜா, மீனாட்சிதேவி, சின்னதுரைச்சி மற்றும் விழாக்குழுவினர் கலந்து கொண்டுள்ளனர். அப்போது விழா நடத்துவது தொடர்பாக சில கட்டுப்பாடுகள் கோட்டாட்சியர் மகாலட்சுமி தெரிவித்துள்ளார். ஆனால் விழாக்குழுவினர் ஏற்றுக்கொள்ளவில்லை என்று தெரிகிறது.

இந்நிலையில் கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள், கூட்டத்தில் தங்களை அவமதிக்கும் வகையில் கோட்டாட்சியர் எழுந்து சென்று விட்டதாகவும், அன்னாதானம், குடிதண்ணீர் வழங்க கூடாது என்று கட்டுபாடுகள் விதிப்பதாகவும், சட்ட ஒழுங்கு சீர்கேடு ஏற்பட்டால் விழாக்குழுவினரை கைது செய்து விடுவேன் என்று மிரட்டுவதாகவும், வெளியூரில்; இருந்து வருபவர்கள் பாதிக்கப்படுவர்கள்.

மேலும் இரு சக்கரவாகனத்தில் வருபவர்களை அனுமதிக்க வேண்டும், இல்லையென்றால் அரசு பஸ் இயக்க வேண்டும் என்று வலியுறுத்தி கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

இதற்கிடையில் விழாக்குழுவை சேர்ந்த பாலு என்பவர் கோட்டாட்சியர் மகாலட்சுமி பேசிய உரையாடல் ஆடியோ வெளியாகி உள்ளது. உள்ளாட்சி இடைத்தேர்தல் பணிகள் இருந்த காரணத்தினால் அவசரமாக செல்ல வேண்டிய சூழ்நிலை என்பதால் சொல்லமால் சென்றதாகவும், இதற்கு மன்னிப்பு கேட்டு கொள்வதாகவும், அரசின் கட்டுப்பாடுகளை குறித்து தெரிவித்தாகவும் கூறியுள்ளார்.

Tags:Tuticorin

சிறந்த கதைகள்