தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே சாலைப் புதூர் தோணுகால் சாலையில் உள்ள தனியார் ஏடிஎம் மையத்தில் ஸ்விகி ஊழியர் ஐயப்பன் தனது ஏடிஎம் கார்டு மூலம் 3,500 ரூபாய் பணம் எடுத்துள்ளார். அப்போது, ஆறு 500 ரூபாய் நோட்டுகள், ஒரு 100 ரூபாய் நோட்டு, இரண்டு 20 ரூபாய் நோட்டுகள் என 3,500 ரூபாய்க்கு பதில் 3,140 ரூபாய் மட்டுமே வந்துள்ளது. 200 ரூபாய் நோட்டுகளுக்கு பதிலாக 20 ரூபாய் நோட்டுகள் வந்தாக கூறப்படுகிறது.
ATM கார்டு இல்லாமலும் பணம் எடுக்கலாம்... இந்த 5 விஷயங்களை தெரிஞ்சிக்கோங்க!
இதனால் அதிர்ச்சியடைந்த ஐயப்பன் இது தொடர்பாக புகார் செய்ய முயன்ற போது, அந்த மையத்தில் எவ்வித தொடர்பு எண்ணும் இல்லை. இதையடுத்து, அவர் தான் கணக்கு வைத்திருக்கும் வங்கியை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்துள்ளார். பின்னர், இது குறித்த தகவல் அறிந்ததும் சம்பந்தப்பட்ட ஏடிஎம், மையத்தில் பணம் நிரப்பும் தனியார் நிறுவனத்தின் ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு வந்து ஏடிஎம் மையத்தை ஆய்வு செய்தனர்.
“அரசியல் என்பது பல்கலைகழகம்... நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தால்...” பாடலாசிரியர் பா.விஜய் ஓப்பன் டாக்..!
போலி நிறுவனங்கள் முகவர்கள் கூறுவதை நம்பி ஏமாற வேண்டாம் - தூத்துக்குடி துறைமுகம் எச்சரிக்கை
“கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களுக்கு எதுக்கு ரூ.10 லட்சம்” - சீமான் கேள்வி
ரூ.30 கோடி மதிப்புள்ள 18 கிலோ திமிங்கலம் எச்சம் பதுக்கல்.. அதிமுக முன்னாள் கவுன்சிலர் உள்ளிட்ட 4 பேர் கைது
கட்டபொம்மனின் குலதெய்வமான வீரசக்க தேவி கோவில் திருவிழா.. தடைகளுக்கு பின் பாஞ்சாலங்குறிச்சி நோக்கி ஜோதி ஓட்டம்..
ஸ்டெர்லைட் கலவரம்: ‘துப்பாக்கி சூடு நடத்திய காவலர்கள் எங்கள் கண் முன்னே நடமாடுகிறார்கள்’
தாலியை அடகுவைக்கும் தாய்மார்களுக்கு அரசு என்ன செய்யும்... சீமான் ஆவேசம்
டாஸ்மாக்கில் கட்டிட தொழிலாளி மீது சரமாரி தாக்குதல்... கோவில்பட்டியில் பகீர் சம்பவம்!
82 மூட்டைகளில் 2,000 கிலோ கஞ்சா... தூத்துக்குடியில் அதிரடியாக பறிமுதல் செய்த போலீஸ்...!
நடுக்கடலில் மிதந்த மர்ம படகு.. போதைப்பொருள் கடத்தலா? - 6 பேரை ஸ்கெட்ச் போட்டு தூக்கிய அதிகாரிகள்
கண்மாய் நீரில் மூழ்கி 3பள்ளி மாணவர்கள் மரணம்.. விளாத்திகுளத்தில் நிகழ்ந்த சோகம்...
அப்போது அங்கு நின்று கொண்டிருந்த ஐயப்பனிடம், 20 ரூபாய் நோட்டு ஏடிஎம்மில் வர வாய்ப்பு இல்லை. இருந்த போதிலும், இது குறித்து மையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், தவறு நடந்திருந்தால் இன்னும் மூன்று தினங்களுக்குள் தங்களது வங்கிக் கணக்கில் பணம் திருப்பி செலுத்தப்படும் என்றும் தெரிவித்தனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags:ATM services, Kovilpatti, Local News