PREVNEXT
ஹோம் / நியூஸ் / Thoothukudi /

தூத்துக்குடியில் கௌதாரி பறவைகளை வேட்டையாடிய சிவில் இன்ஜினியர்கள் கைது... துப்பாக்கிகள் பறிமுதல்..

தூத்துக்குடியில் கௌதாரி பறவைகளை வேட்டையாடிய சிவில் இன்ஜினியர்கள் கைது... துப்பாக்கிகள் பறிமுதல்..

கௌதாரி பறவைகளை வேட்டையாடிய சிவில் இன்ஜினியர்கள் கைது...

கௌதாரி பறவைகளை வேட்டையாடிய சிவில் இன்ஜினியர்கள் கைது...

Thoothukudi District : விளாத்திகுளம் அருகே காட்டுபறவையான கௌதாரியை துப்பாக்கியால் சுட்டு வேட்டையாடிய 2 சிவில் இன்ஜினியர்களை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 2 துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே காட்டு பறவையான கௌதாரியை துப்பாக்கியால் சுட்டு வேட்டையாடிய முருகன், அசோக் என்ற 2 சிவில் இன்ஜினியர்களை போலீசார் கைது செய்து வனச்சரக அலுவலகத்தில் ஒப்படைத்தனர். அத்துடன் 2 துப்பாக்கிகள், துப்பாக்கியால் சுடப்பட்ட கௌதாரிகளை பறிமுதல் செய்தனர். மேலும் இருவருக்கும் தலா 25,000 ரூபாய் வனத்துறையினர் அபராதம் விதித்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி இ.வி. ரோடு பகுதியை சேர்ந்தவர் முருகன். சிவில் இன்ஜினியரான முருகனும், தூத்துக்குடி பி.டி.காலனியை சேர்ந்த சிவில் இன்ஜினியரான அசோக் இருவரும் நண்பர்கள். இருவரும் வியாழக்கிழமை குளத்தூர் கவல் நிலைய எல்கைக்குட்பட்ட அரசன்குளம் பகுதி காட்டுக்குள்ளே துப்பாக்கியால் சுட்டு காட்டு பறவையான கௌதாரியை வேட்டையாடி வருவதாக குளத்தூர் போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதையெடுத்து குளத்தூர் போலீசார் மற்றும் நெடுஞ்சாலைத்துறை போக்குவரத்து காவல் குழுவினர் சோதனையில் ஈடுபட்ட போது, முருகன், மற்றும் அசோக் இருவரும் துப்பாக்கியினால் சுட்டு கௌதாரிகளை கொண்டு காரில் செல்வது தெரியவந்தது. இதையெடுத்து முருகன், அசோக் இருவரையும் குளத்தூர் போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்து 2 துப்பாக்கி,  சுடப்பட்ட 7 கௌதாரிகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

உங்கள் நகரத்திலிருந்து (தூத்துக்குடி)

கனிமொழி எம்.பியின் வீட்டில் நுழைந்த மர்ம நபர்... தூத்துக்குடியில் பரபரப்பு..!

தூத்துக்குடி செல்பி பாயிண்ட்டில் “தெம்மா தெம்மா” பாடலுக்கு ஆபாச நடனம்.. இளைஞர்களை தேடும் போலீஸ்

தனியார் நிறுவனங்கள் ராக்கெட் உருவாக்குவதற்கு வருகின்றன - இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன்

ஆன்லைனில் வெடிமருந்து வாங்கிய கோவில்பட்டி இளைஞரிடம் என்ஐஏ அதிகாரிகள் தீவிர விசாரணை

வல்லநாடு வனத்தில் பட்டாம்பூச்சி திருவிழா.. மான்,மயில்களை ஆர்வமாக கண்டுகளித்த கனிமொழி எம்.பி

மேடையில் மாறி மாறி புகழ்ந்து கொண்ட கனிமொழி - கடம்பூர் ராஜு..! எதற்கு தெரியுமா?

விஜய்யின் வாரிசு படத்தை தடுக்கும் உதயநிதி - கடம்பூர் ராஜூ பரபரப்பு குற்றச்சாட்டு

பொறந்த குழந்தைய பார்க்க காசு கேட்குறாங்க.. அசிங்கமா பேசுறாங்க - அரசுமருத்துவமனை ஊழியர்களால் பொதுமக்கள் வேதனை

வீடு புகுந்து குழந்தையின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி கொள்ளை - தூத்துக்குடியில் பகீர் சம்பவம்

"ஒரு நாடு ஒரு உரம்.." முதல் நிறுவனமாக விநியோகத்தை தொடங்கிய தூத்துக்குடி ஸ்பிக்

Themma Themma Reels : ’இனிமேல் வீடியோ போடமாட்டோம்..’ - குத்தாட்டம் போட்டு மன்னிப்பு கேட்ட தூத்துக்குடி 2K கிட்ஸ்! 

Also see... கொல்லிமலையில் கடும் பனிப்பொழிவு.. வேற லெவல் கிளைமேட்டால் சுற்றுலா பயணிகள் ஹேப்பி..

பின்னர் விளாத்திகுளம் வனச்சரக அலுவலகத்தில் ஒப்படைத்தனர். இதனை தொடர்ந்து வனச்சரக அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இருவரும் துப்பாக்கியால் கௌதாரிகளை சுட்டது விசாரணையில் தெரிய தொடங்கியது. இதையெடுத்து இருவருக்கும் 25,000 வீதம் 50,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

வேட்டையாடப்பட்ட கெளதாரி பறவைகள்

Also see... நீலகிரியில் தொடர் மழை காரணமாக சுற்றுலா பயணிகளின் வருகை குறைவு

பின்னர் அவர்களை  போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர். இருவரும் பயன்படுத்திய துப்பாக்கியில் ஒன்று உரிமம் உள்ளதாக கூறப்படுகிறது. பொதுவாக இப்பகுதியில் அதிகளவில் மான்கள் வேட்டையாடப்பட்டு வருவதாகவும், இது போன்று குற்றச்செயல்களில் ஈடுபடுவர்கள் மீது குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்றும் பொது மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

செய்தியாளர்: மகேஷ்வரன், கோவில்பட்டி

Tags:Arrested, Birds, Engineering, Forest, Thoothukudi, Vilathikulam

சிறந்த கதைகள்